எம்.ஜி.ஆர்., ரசிகைக்கு உதவித்தொகை ரத்து: தீப்பெட்டி கூடு ஒட்டி காலம் போகுது| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

எம்.ஜி.ஆர்., ரசிகைக்கு உதவித்தொகை ரத்து: தீப்பெட்டி கூடு ஒட்டி காலம் போகுது

Updated : பிப் 06, 2016 | Added : பிப் 05, 2016 | கருத்துகள் (13)
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
எம்.ஜி.ஆர்., ரசிகைக்கு உதவித்தொகை ரத்து: தீப்பெட்டி கூடு ஒட்டி காலம் போகுது


சிவகாசி: எம்.ஜி.ஆரின் தீவிர ரசிகையான சிவகாசியை சேர்ந்த பாலம்மா, 92, கடந்த மூன்று ஆண்டாக முதியோர் உதவித்தொகை கிடைக்காமல் தவிக்கிறார்.
சிவகாசி அம்மன்கோயில்பட்டி பகுதியை சேர்ந்த பாலம்மா, எம்.ஜி.ஆரின் தீவிர ரசிகை. எம்.ஜி.ஆர்., நடித்த படங்களை தொடர்ந்து பார்ப்பவர். தேர்தல் நேரத்தில் எம்.ஜி.ஆர்., பிரசார கூட்டம் எங்கு நடந்தாலும் தவறாமல் செல்வது வழக்கம். கடந்த 40 ஆண்டுகாலமாக அ.தி.மு.க., தொண்டராக இருந்தவர். கூலி தொழிலாளியான கணவர் இறந்த விட்டார். மகன், மகள்களும் பிரிந்து சென்றனர்.தி.மு.க., ஆட்சி20 ஆண்டு காலமாக தனித்து வாழ்ந்து வரும் இவருக்கு தி.மு.க., ஆட்சியில் அரசு அறிவித்த முதியோர் உதவித்தொகை 500 ரூபாயை பெற்று வாழ்க்கை நடத்தி வந்தார். அ.தி.மு.க., அரசில் முதியோர் உதவித்தொகை கணக்கீடு பட்டியல் எடுத்த போது, தனது பெயரை சேர்த்து மனு எழுதி கொடுத்தார். அதன்பின் இது வரையிலும் பாலம்மாவிற்கு உதவித்தொகை கிடைக்கவில்லை. தீப்பெட்டி கூடு ஒட்டி வாழ்க்கையை நடத்தி வருகிறார்.
ஞாபகம் வருதே...பாலம்மா கூறியதாவது:சிறு வயது முதல் நான் எம்.ஜி.ஆர்., ரசிகை. 'சினிமாகாரனை பார்த்து ஏமாறக்கூடாது' என எனது தந்தை அடிக்கடி கூறுவார். அதை நான் காதில் வாங்குவதில்லை. 'அடிமைப்பெண்', 'ஆயிரத்தில் ஒருவன்', 'படகோட்டி' உள்ளிட்ட படங்களை முதல் படக்காட்சியில் பார்த்த ஞாபகம் இன்றும் உள்ளது. அவரது கட்சியிலும் தீவிர தொண்டனாக இருந்தேன். எனக்கு பிறந்த 10 பிள்ளைகளும் விட்டுச்சென்றதால் தனிமரமாக வாழ்கிறேன்.
போட்டோ ஆசைபென்ஷன் பெறுபவர்களுக்கு ரேஷன் பொருட்கள் கிடையாது என்பதால், அதையும் வாங்க முடியவில்லை. சிவன் கோயில் அன்னதானத்தில் சாப்பிடுகிறேன். கைச்செலவிற்காக தீப்பெட்டி கூடு ஒட்டுகிறேன். இதில் வாரத்திற்கு ரூ. 50 வரை கிடைக்கும். இதை வைத்து வாழ்க்கை ஓடுகிறது. ஒரு முறையாவது எம்.ஜி.ஆருடன் போட்டோ எடுத்து கொள்ள ஆசை இருந்தது; அது நிறைவேறவில்லை என கண்ணீருடன் தெரிவித்தார்.

Advertisement


வாசகர் கருத்து (13)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Mugavai Anandan - Port Blair,இந்தியா
06-பிப்-201611:32:53 IST Report Abuse
Mugavai Anandan எனது அரசு, எனது அரசு,என்று சொல்லிக்கொளும் அம்மாவும் ,அதிகாரிகளும் எது செய்ய வேண்டுமோ அதை விடுத்து எது எது தேவையில்லாததோ அதை எல்லாம் செய்கின்றனர் . நலிவுற்றவர்களுக்கு வழியசென்று உதவி செய்யும் காலம் என்று வருமோ, அதுதான் ஆள்வோருக்கு அழகு ,.... மா..க்கள் எவ்வழியோ ,...ஆள்வோரும் அவ்வழியே
Rate this:
Share this comment
Cancel
JAIRAJ - CHENNAI,இந்தியா
06-பிப்-201608:55:20 IST Report Abuse
JAIRAJ பொருத்தமே இல்லாத செய்தி. முதுமை அடைந்தும் முதியோர் உதவித்தொகை கிடைக்கவில்லை என்று ஆதங்கப் பட்டால் அதில் அர்த்தம் உள்ளது. அல்லாமல், நாம் எம் ஜி ஆர் ரசிகை என்று அரற்றினால் எப்படி சரியாகும்.? இதெல்லாம் ஒருபுறம் இருந்தாலும், இந்த உதவித்தொகை வாங்கித்தருவதிலும், கமிஷன் என்ற பெயரில் வாங்கிக் கொள்ள அந்த பிச்சைக்காரர்கள் வருவார்களே ...........அவர்களை விட உங்கள் நிலை உயர்ந்தது தான் என்று இறுமாப்புக் கொள்ளுங்கள்.
Rate this:
Share this comment
Bala Murugan - Virudhunagar,இந்தியா
07-பிப்-201600:11:04 IST Report Abuse
Bala Muruganஎம் ஜி ஆர் கூட நடித்தவர்கள் முதலமைச்சர் ஆகலாம்..... எம் ஜி ஆர் படத்த பாத்தவங்க ரசிகை ஆக கூடாது ...முதியோர இருந்த உதவி தொகை வாங்க கூடாதோ...
Rate this:
Share this comment
Cancel
மதுரை விருமாண்டி - சான் ஹோஸே, கலிபோர்னியா ,யூ.எஸ்.ஏ
06-பிப்-201608:35:41 IST Report Abuse
மதுரை விருமாண்டி இவருக்கு தி.மு.க., ஆட்சியில் அரசு அறிவித்த முதியோர் உதவித்தொகை 500 ரூபாயை பெற்று வாழ்க்கை நடத்தி வந்தார். அ.தி.மு.க., அரசில் முதியோர் உதவித்தொகை இது வரையிலும் பாலம்மாவிற்கு கிடைக்கவில்லை. வயது வித்தியாசம் பாக்காமே ஆயாவின் கொடுங்கோல் ஆட்சியில் கமிஷன் அடிப்பதால் இவருக்கு இன்னும் கிட்டவில்லை..
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X