அழகான சூறாவளி - நடிகை வரலட்சுமி| Dinamalar

அழகான சூறாவளி - நடிகை வரலட்சுமி

Added : பிப் 08, 2016 | கருத்துகள் (3)
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
அழகான சூறாவளி - நடிகை வரலட்சுமி

'பளீர்' பார்வையால் இளசுகளின் நரம்பை 'சுளீர்' என சுண்டி இழுக்கும் தேவலோக ரம்பை, மயக்கும் மாய அழகால் மர்மமாக நம் மனதை மயக்கிய மாயலோக மங்கை, கம்பீர அசைவுகளால் ஆடாத கால்களையும் ஆட வைக்கும் நடனலோக நங்கை, பூவுக்குள் பூட்டி வைத்த புயலாய் 'போடா போடி'யில் காதலை காதலித்தவர், புல்வெளியில் முட்டி மோதும் முயலாய் 'தாரை தப்பட்டை'யில் மையம் கொண்ட மென்மையான சூறாவளி வரலட்சுமி.சண்டே ஸ்பெஷல் வாசகர்களுக்காக, வரலட்சுமி நம்மிடம் பேசியதில் இருந்து...*'தாரை தப்பட்டை' வெற்றி எதிர்பார்த்ததா?இந்தளவு வெற்றி பெறும் என எதிர்பார்க்கவில்லை. எங்கு போனாலும் 'சூறாவளி' என்கின்றனர்.* சூறாவளி கதாபாத்திரத்தை எப்படி ஏற்றீர்கள்?பாலா படம் என்றதும் தயக்கமின்றி ஒப்புக் கொண்டேன். அந்தளவு கதாபாத்திரத்திற்கு ஏற்ப கடினமாக உழைத்தது, இந்தளவு பெயரை பெற்று தந்திருக்கிறது.* தைரியமான பொண்ணா நீங்கள்?உண்மையிலேயே நான் தைரியமான பொண்ணுங்க. முதல் படமான 'போடா போடி' கதாபாத்திரம் அதுபோலவே அமைந்தது.* எந்த மாதிரியான கதாபாத்திரங்களில் நடிக்க ஆசை?எல்லா ரோல்களிலும் நடிக்க வேண்டும் என ஆசை. நடிகைகளின் வேலையும் அதுதானே.* அப்பா (சரத்குமார்)படம் பார்த்தாரா?'தாரை தப்பட்டை' பார்த்துட்டு அப்பா பாராட்டினார். அவரிடம் நான் எப்படி நடித்திருக்கிறேன் என நீங்களே கேட்டு தெரிந்து கொள்ளுங்களேன்.* இயக்குனர் பாலா படம் என்ற பயம் இருந்ததா?பயம் இல்லை. படத்தில் நம்மிடம்(நடிகர்களிடம்) என்ன எதிர்பார்க்கிறார் என்பதை முன் கூட்டியே கூறி விடுவார். அந்த மாதிரி நடித்துவிட்டால் ஓ.கே.,* படப்பிடிப்பில் செயின் அணிவித்து பாராட்டினாராமே?படத்தில் வில்லன் சுரேஷ் என்னை தாக்கும் காட்சி தத்ரூபமாக எடுக்கப்பட்டது. நிஜ கண்ணாடியால் தாக்கும் போது மண்டையில் காயம் ஏற்படுவதை படமெடுத்த கையுடன், என் நடிப்பை பாராட்டிய பாலா சார், உடனே தான் அணிந்திருந்த செயினை அணிவித்து பாராட்டியது மறக்க முடியாதது.* சசிகுமாருடன் நடித்த அனுபவம்?சசிகுமார் உதவும் மனம் கொண்டவர். நல்ல டைப்.* அடுத்த படம்?பெயரிடப்படாத படத்தில் நடிகர்கள் அர்ஜூன், பிரசன்னாவுடன் போலீஸ் இன்ஸ்பெக்டர் கேரக்டரில் நடித்து வருகிறேன்.* உங்கள் டான்ஸ் கம்பெனி எப்படியிருக்கிறது?ஹாட் ஷூ டான்ஸ் கம்பெனி மூலம் பரத நாட்டியம், வெஸ்டர்ன், பாலே டான்ஸ் கற்று கொடுத்து வருகிறேன்.

Advertisement


வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
madayan - Anaheim,யூ.எஸ்.ஏ
08-பிப்-201622:27:18 IST Report Abuse
madayan அப்போ G . வரலக்ஷ்மி இப்போ இவர்கள். நலமுடன் வாழ்க
Rate this:
Share this comment
Cancel
santhosh - coimbatore  ( Posted via: Dinamalar Android App )
08-பிப்-201618:51:45 IST Report Abuse
santhosh tharai thappatai vettriya?
Rate this:
Share this comment
Cancel
K.Sugavanam - Salem,இந்தியா
08-பிப்-201614:16:25 IST Report Abuse
K.Sugavanam தாரைதப்பட்டை ஒரு தோல்விப் படம் என்கிறார்களே..அந்த படத்தில் இவர் ஒரு சீன்ல கூட கரகத்த தலையில ஏத்திக்கிட்டு ஆடலையே.. ஏன்?
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X