அண்டை வீட்டுக்காரரின் பொறாமை! ஜெ., குட்டிக்கதைக்கு கருணாநிதி பதிலடி Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

Election 2016

பதிவு செய்த நாள் :
அண்டை வீட்டுக்காரரின் பொறாமை!
ஜெ., குட்டிக்கதைக்கு கருணாநிதி பதிலடி

அ.தி.மு.க., அமைச்சர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் இல்ல திருமண விழாவில், நேற்று முன்தினம் பங்கேற்ற, அக்கட்சியின் பொதுச்செயலரும், முதல்வருமான ஜெயலலிதா, தி.மு.க., தலைவர் கருணாநிதி மற்றும் பொருளாளர் ஸ்டாலினை மறைமுகமாக குறிப்பிட்டு, குட்டிக்கதை ஒன்றை கூறினார்.

அண்டை வீட்டுக்காரரின் பொறாமை! ஜெ., குட்டிக்கதைக்கு கருணாநிதி பதிலடிஅப்பா - மகன் கதை:அந்தக் குட்டிக்கதைக்கு, புதிய குட்டிக்கதை மூலம் நேற்று விளக்கம் அளித்துள்ளார், தி.மு.க., தலைவர் கருணாநிதி. அவர் கூறியுள்ள குட்டிக்கதை விவரம்:
சென்னையில், 14 திருமணங்களை நடத்தி வைத்த, முதல்வர் ஜெயலலிதா, வழக்கம் போல, 'குட்டிக்கதை'களை படித்திருக்கிறார்.

அந்தக் காலத்தில் ஒவ்வொரு கூட்டத்திலும், இதுபோன்ற குட்டிக்கதைகளை கூறும், 'மூதறிஞர் ராஜாஜி' என, இவருக்கு நினைப்பு

போலும்.ஜெயலலிதா தன் பேச்சில் ஒரு அப்பா - மகன் கதையை சொல்லியிருக்கிறார். அதில், ஒரு தந்தை, தன் மகனை ஏணியின் மேலே ஏறச்சொல்லி, அவன் உயரே சென்ற போது, ஏணியைத் தட்டி விட்டு, மகனை கீழே விழ வைத்து அடிபட வைத்தார் என, கூறியிருக்கிறார்.

எந்த பாசக்கார தந்தையும், தன் மகன் கீழே விழுந்து அடிபடுவதை விரும்ப மாட்டார்.ஊரில் உள்ள பிள்ளைகளுக்கு எல்லாம் முறையாக அரசியல் பாடத்தைக் கற்றுக் கொடுத்த தந்தை, தன் மகனுக்கு மட்டும் அரசியலை முறையாக கற்றுக் கொடுக்காமல் இருந்து விடுவாரா... அரசியலில் கீழே இருந்து கடுமையாக உழைத்து, படிப்படியாக மேலே வந்தவர்களுக்கு, இந்த உண்மை புரியும்.

உண்மை தெரியுமா?:தந்தையும் மகனும் அன்போடும், பாசத்தோடும் இருப்பதையும், அரசியலை முறையாக நடத்துவதையும் கவனித்து வந்த, எதிர்வீட்டுப் பெருமாட்டிக்கு பொறாமை என்றால், அவ்வளவு பொறாமை. தனக்கு குடும்பமே இல்லை என, சொல்லிக்கொண்டு, ஊரில் உள்ள சொத்துகளை எல்லாம், தனக்கு சொந்தமாக்கிக் கொள்ள படாத பாடுபடுவார்.

எப்போது தந்தை, மகனுக்குள் தகராறு வரும். நாம் குழம்பியகுட்டையில், மீன் பிடித்து மகிழ்ச்சியடையலாம் என, எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கிறார். மகன் தந்தையிடம் வந்து, அரசியல் கற்றுக் கொடுக்க வேண்டுமென கேட்ட போது, மிகவும் மகிழ்ச்சியடைந்த தந்தை, தான் கற்ற அரசியல் நுணுக்கங்களை எல்லாம் மகனுக்குப்

Advertisement

பாசத்தோடு கற்றுக் கொடுக்கிறார். அப்போது, எதிர்வீட்டுப் பெருமாட்டியின் விருப்பத்தையும் மகனிடம் கூறுகிறார்.

'நீ அரசியல் ஏணியில் ஏறும்போது, உன்னை அங்கிருந்து தள்ளிவிட சிலர் முயற்சி செய்வர். எனவே, கவனமாகப் பார்த்து ஏணியில் ஏறு' என்றும் சொல்லிக் கொடுத்திருக்கிறார்.

ஏணியில் இருந்து மகன் விழுந்து விடுவான் என, எதிர்பார்த்துக் காத்திருந்த எதிர்வீட்டு சீமாட்டி, மகன் மிகுந்த எச்சரிக்கையோடும், படிப்படியாகவும், கவனமாகவும் ஏணியில் ஏறி வருவதையும், மகன் பத்திரமாக ஏணிப் படிகளில் ஏறி, மேலே வர வேண்டும் என, எண்ணுகிற தந்தையையும் பார்த்து, மிகப் பெரிய ஏமாற்றத்தைத் தழுவுகிறார் என்பது தான் உண்மைக் கதை. இவ்வாறு கதையில் கூறப்பட்டு உள்ளது.

Advertisement

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...


வாசகர் கருத்து (125)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
sorna - chennai,இந்தியா
13-பிப்-201601:20:16 IST Report Abuse

sornaஉடன்கட்டைக்கு உகந்த கதை.

Rate this:
Subbanarasu Divakaran - bengaluru,இந்தியா
13-பிப்-201601:11:17 IST Report Abuse

Subbanarasu Divakaranசுருட்டுவதில் கை தேர்ந்த கட்சியின் தொண்ணூறு வாடு பெருந்தகை என்ன சொன்னால் என்ன. தமிழர்கள் இனிமாயில் கொள்ளை காரர்களை தேர்ந்து அடுக்க மாட்டார்கள் ஐயஹ். நிம்மதியா தூங்குங்க.

Rate this:
murugesh - tvm,இந்தியா
12-பிப்-201620:18:51 IST Report Abuse

murugeshஇதில் கூட சுய தம்பட்டமும், வயதுக்குத்தகாத பேசும் நீர் அடுத்த பிறவியில் தண்ணி கொடுக்க ஆள் இல்லாமல் அனாதையாய் பிறப்பெடுத்து அதன் கொடுமையை உணரும், வயதிற்குரிய நடத்தை / சிந்தனை கூட இல்லையா உமக்கு? சீ

Rate this:
Kumar Saranathan Parthasarathy - Chennai,இந்தியா
12-பிப்-201620:15:26 IST Report Abuse

Kumar Saranathan Parthasarathyபாசக்கார தந்தை அழகிரியிடம் ஏன் பாசம் காட்டுவதில்லை ? துணை முதல்வர் கொடுக்கும் முன்பே முதல்வர் கொடுத்திருக்கலாமே ? அதைத்தானே அம்மா நீங்க ஓதிங்கி கங்க என்று சொல்கிறார் . தி மு க அழியணும்னு சொல்லலையே ? நாற்காலியை 63 வயதானவருக்கு 92 தர மறுத்தால் அதற்கு பெயர் என்னா ? அம்மா கதை உங்களைக் குறிப்பிடுதுன்னு 'எங்கப்பன் குதிருக்குள்ள இல்ல 'என்று நீங்காளா பதில் சொல்லறீங்களே ?

Rate this:
g.s,rajan - chennai ,இந்தியா
12-பிப்-201619:44:40 IST Report Abuse

g.s,rajanஇது என்ன ஒனிடா டிவி விளம்பரம் (அண்டை வீட்டுக்காரரின் பொறாமை ) மாதிரி இருக்கு . ஜி.எஸ்.ராஜன், சென்னை.

Rate this:
Murukesan Kannankulam - Kannankulam,இந்தியா
12-பிப்-201619:36:16 IST Report Abuse

Murukesan Kannankulamமு க அழகிரி தான் உண்மையான திமுக வாரிசு மஞ்சள் துண்டு சுடலினை தலையில் வைத்து ஆடுகிறது

Rate this:
murugesh - tvm,இந்தியா
12-பிப்-201620:23:59 IST Report Abuse

murugeshஆம் அழகிரிதான் கருணாநிதியின் மனசாச்சி, கருணாநிதியின் மறுபாதி இவர். சுடலை, ஆக்சுவலி, கருணாநிதியின் குடும்ப அரசியலில் ஒரு காய் அவ்வளவே...

Rate this:
கீரன் கோவை - Coimbatore,இந்தியா
12-பிப்-201619:19:26 IST Report Abuse

கீரன் கோவை"தன் மகனை ஏணியின் மேலே ஏறச்சொல்லி, அவன் உயரே சென்ற போது, ஏணியைத் தட்டி விட்டு, மகனை கீழே விழ வைத்து அடிபட வைத்தார்" என, ஜெயலலிதா கூறியது, அஞ்சா நெஞ்சன் மாண்புமிகு முன்னாள் உரத்துறை மந்திரி மு க அழகிரி பற்றி. ஆனால் கருணாநிதி பதில் கதையில் இசுடாலின் பற்றிச் சொல்கிறார். இவருக்கு வாரிசுகள் அதிகமாக இருப்பதால் சில சமயங்களில் யாரைப் பற்றி சொல்லப்ப்டுகிறது என்று தெரிவதில்லை.

Rate this:
ezhumalaiyaan - Chennai,இந்தியா
12-பிப்-201621:08:37 IST Report Abuse

ezhumalaiyaanஎன்னங்க நீங்க.பெரியவர்தான் ,அழகிரியை தனது மகனே அல்ல என்று பப்ளிக்காக சொல்லிவிட்டாரே.அந்த விதத்தில் பார்த்தால் அவர் சொன்னதும் சரியாக இருக்கலாம்....

Rate this:
கீரன் கோவை - Coimbatore,இந்தியா
13-பிப்-201600:29:55 IST Report Abuse

கீரன் கோவைஆமாம் மகளைக் கூட தன மகளே இல்லை என்று சொன்னவர்தான், பிறகு ஒரு காலத்தில் அவரது அம்மாளை என் மகளின் தாயார் என்றும் சொன்னார். என்ன செய்வது தோழரே...

Rate this:
g.s,rajan - chennai ,இந்தியா
12-பிப்-201619:11:03 IST Report Abuse

g.s,rajanஆனாலும் அம்மா கூறிய விசிறி வியாபாரி, கருணா கதை மாதிரி வருமா . ஜி.எஸ்.ராஜன், சென்னை.

Rate this:
g.s,rajan - chennai ,இந்தியா
12-பிப்-201619:05:07 IST Report Abuse

g.s,rajanஒரு குடும்பத்தை உருவாக்கச் சொன்னா ஒரு கிராமத்தையே உருவாக்கி இருக்கின்றாரே கருணா,அவர் திறமை யாருக்கு வரும் ??? . ஜி.எஸ்.ராஜன், சென்னை.

Rate this:
Chandramoulli - Mumbai,இந்தியா
12-பிப்-201617:17:57 IST Report Abuse

Chandramoulliமஞ்ச துண்டு எப்போதுமே வெவகாரமாக இரட்டை அர்த்தம் உடைய வக்கிர புத்தியில் தான் பெண்களை இழிவு படுத்தி இதிலும் சுகம் காணும் அல்பர் . இவர் வீட்டிலும் பெண்கள் உள்ளனர் என்பதை மறந்து அடுத்த வீட்டு பெண்களை குயுக்தியுடன் பேசும் 93 வயது சூழ்ச்சிக்காரர் உலகத்திலே இவர் ஒருவராக தான் இருப்பார் . பெண்களை அவமான படுத்துவதே இவருக்கு வேலை .

Rate this:
murugesh - tvm,இந்தியா
12-பிப்-201620:26:46 IST Report Abuse

murugeshஇப்படியொரு பிறவி, பணம் பதவி என்று பைத்தியம் பிடித்து அலையட்டும், இவனின் முடிவு எல்லா அரசியல்வாதிக்கும் எச்சரிக்கையாக இருக்கட்டும்....

Rate this:
Karthik - Bangalore,இந்தியா
12-பிப்-201621:05:22 IST Report Abuse

Karthikஅம்மா பேசுவது இரட்டை அர்த்தம் இல்லை...

Rate this:
மேலும் 110 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement