133 ஏக்கர் பரப்பு அணைக்கட்டு தாங்கல் ஏரியை காணோம்| Dinamalar

133 ஏக்கர் பரப்பு அணைக்கட்டு தாங்கல் ஏரியை காணோம்

Updated : பிப் 13, 2016 | Added : பிப் 11, 2016 | கருத்துகள் (1)
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
Advertisement

சென்னையின் மையப்பகுதியில் உள்ள, தற்போதும் உயிரை கையில் பிடித்து தவித்து வரும், வேளச்சேரி ஏரி, கொளத்துார் ஏரி, சேத்துப்பட்டு ஏரி போன்ற ஏரிகளில் கூட, ஆக்கிரமிப்புக்கள் போக சில ஏக்கர் அல்லது சில கிரவுண்டு பரப்பில் தண்ணீர் தேங்கி இருப்பதை இப்போதும் காணலாம்.
ஆனால், வெள்ளத்தில் மூழ்கி, பெரும் பாதிப்படைந்த வரதராஜபுரம் ஊராட்சி யில், 133 ஏக்கர் பரப்பளவில் இருந்த ஒரு ஏரி, தற்போது இருந்த சுவடே தெரியாத அளவிற்கு முழுமையாக மாயமாகி உள்ளது.அரசியல்வாதிகள், ரவுடிகள் கூட்டணிநமது நிருபர் குழுவின் கள ஆய்வில் தெரியவந்த உண்மைகள் குறித்த விவரம்:வரதராஜபுரம் ஊராட்சியின் நிலபரப்பு ஆறு பகுதிகளாக பிரிந்து காணப்படுகிறது. அவற்றில், மண்ணிவாக்கம், கரசங்கால், முடிச்சூர் ஊராட்சிகளின் எல்லையில், மண்ணிவாக்கம் அருகே அடையாற்றை ஒட்டி, ஒரு பிரிவு நிலப்பரப்பு உள்ளது. அந்த நிலபரப்பில் பெரும்பகுதி, கடந்த 20 ஆண்டுகளுக்கு முன் விவசாய நிலமாக இருந்தது.முடிச்சூர், மண்ணிவாக்கம் ஊராட்சி பகுதியிலும், இந்த விவசாய நிலபரப்பு இருந்துள்ளது. விவசாயத்திற்காக, அடையாற்று தண்ணீரை சேமிப்பதற்காக, அணைக்கட்டு தாங்கல் என்ற பெரிய ஏரி, அடையாற்றை ஒட்டி இருந்துள்ளது. ஏரியின் மொத்த பரப்பளவு 133 ஏக்கர்.முடிச்சூர், மண்ணிவாக்கத்தில் குடியிருப்பு கள் அதிகரித்ததைத் தொடர்ந்து, உள்ளூர் அரசியல்வாதிகள், ரவுடி கும்பல்களால், அணைக்கட்டு தாங்கல் ஏரி, மனைகளாக மாற்றப்பட்டு விற்கப்பட்டது. தற்போதும் காலியாக உள்ள இடங்கள் விற்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில், அணைக்கட்டு தாங்கல் ஏரி நிலப்பரப்பில் மட்டும் தற்போது, 1,000க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. குடிசைகளாக துவங்கி, தற்போது மாடி வீடுகளாகவும், இரண்டடுக்கு வீடுகளாகவும், ஆக்கிரமிப்பாளர்கள் தங்கள் வீடுகளை மாற்றி உள்ளனர்.
இதற்கு, 'விரைவில் பட்டா வாங்கி கொடுத்து விடுகிறோம்' என, உள்ளூர் அரசியல்வாதிகள், அவர்களுக்கு கொடுத்த நம்பிக்கை தான் காரணம் என்பதும், கள ஆய்வின் போது தெரியவந்தது. அணைக்கட்டு தாங்கல் ஏரியில், வீடுகள் கட்டப்பட்டிருப்பது போக, காலி நிலமாக சில ஏக்கர் பரப்பளவு இடம் எஞ்சியுள்ளது. அந்த இடத்தில், மனைக் கற்களை நட்டு, வெளியூர்வாசிகளுக்கு மாறிமாறி விற்பனை செய்யும் பணியில், ஒரு கும்பல் ஈடுபட்டு வருவதாகவும், பொதுப்பணி துறை சுதாரித்தால், இந்த இடத்தை மட்டுமாவது எந்த சிக்கலும் இல்லாமல் மீட்கலாம் என்றும் தெரிவிக்கின்றனர், பகுதிவாசிகள்.அணைக்கட்டு தாங்கல் ஆக்கிரமிப்பால் தான், ௨௦௧௫, டிச., பெருமழையில், முடிச்சூர் சாலை, லட்சுமி நகர் பகுதிகள் வெள்ளத்தில் சிக்கின. இந்த இடம் நீர்நிலையாக பராமரிக்கப்பட்டிருந்தால், பெருமழையின் போது, பெருமளவு நீரை இங்கு தேக்கி வைத்திருக்கலாம் என்றும், கிராம மக்கள் கூறுகின்றனர்.

ஓட்டு வங்கியும் பிரதானம்:கடந்த, 10 ஆண்டுகளுக்குள் தான், அணைக்கட்டு தாங்கல் ஏரியில், கணிசமான ஆக்கிரமிப்புகள் வந்துள்ளன. தற்போது ஏரியில் மட்டும், 10க்கும் அதிகமான நகர்கள் உருவாகி இருக்கின்றன. வரதராஜபுரம் ஊராட்சி மன்றத் தலைவரை தேர்ந்தெடுப்பதிலும், இந்த பகுதி மக்களின் ஓட்டு மிக முக்கியமாக கருதப்படுகிறது.இதனால், அணைக்கட்டுத் தாங்கலை மீட்க, பொதுப்பணி துறைக்கு பல தடைகள் ஏற்பட்டு வருகின்றன. ஆக்கிரமிப்பாளர்களுக்கு, உள்ளூர் அரசியல்வாதிகள் அரணாக இருக்கின்றனர் என்பதும், நிதர்சனம்.
இவ்வளவு நாளாக இந்த ஆக்கிரமிப்புகளை கண்டுகொள்ளாமல் இருந்த பொதுப்பணி துறை, தற்போதைய வெள்ள சீரமைப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக, ஆக்கிரமிப்பாளர்களுக்கு மாற்று இடம் கொடுத்து, அணைக்கட்டு தாங்கல் ஏரியை முழுமையாக மீட்க வேண்டும் என்பது தான், பகுதிவாசிகளின் பிரதான கோரிக்கை. அதற்கு தயாராக உள்ள பொதுப்பணி துறை அதிகாரிகளுக்கு, அரசு பச்சைக் கொடி காட்டுமா என்பதே, சுற்றுச்சூழல் ஆர்வலர்களின் தற்போதைய எதிர்பார்ப்பு. - நமது நிருபர் குழு -

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Arivu - Salem,இந்தியா
21-மார்-201609:03:33 IST Report Abuse
Arivu இதைப்போல கருப்பூர் சமுத்திரா ஏரி ஆக்கிரமிப்புகலைப்பற்றியும் விசாரித்து எழுதவும்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X