தினமலர் செய்தி எதிரொலி: அடையாற்றை அகலப்படுத்தும் பணிகள் துவக்கம்| Dinamalar

தினமலர் செய்தி எதிரொலி: அடையாற்றை அகலப்படுத்தும் பணிகள் துவக்கம்

Updated : பிப் 13, 2016 | Added : பிப் 11, 2016 | கருத்துகள் (3)
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement

'உறைய வைக்கும் உண்மைகள்' தொடர் கட்டுரையில், நேற்று முன்தினம், '20 ஆயிரம் கனஅடி நீர் செல்ல வெறும் 3 கண் மதகு' என்ற தலைப்பில், கட்டுரை வெளியானது. குறுகிய பாதையால் தான் வெள்ளம், ஒரே நேரத்தில் அதிகளவில் செல்ல முடியாமல், வண்டலுார் - வாலாஜாபாத் சாலையில் பாய்ந்தது என்றும், சாலையில் மூன்று நாட்கள் போக்குவரத்து நிறுத்தப்பட்டது என்றும், அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.
மேலும், ஒரத்துார் ஓடை - அடையாறு இடையே உள்ள, 100 மீ., துாரத்திற்கு உள்ள மண் திட்டுக்களை அகற்றி, வெள்ளம் வெளியேற தாராளமாக வழி ஏற்படுத்தினால், எதிர்கால வெள்ள பாதிப்பை தடுக்கலாம் என்றும் யோசனை தெரிவிக்கப்பட்டது. அதன் எதிரொலியாக, பொதுப்பணி துறை, அந்த பணிகளில் நேற்று முதல் களம் இறங்கி உள்ளது. ஒரத்துார் ஓடை, அடையாறு இணையும் பகுதிக்கு முன், 100 மீ., துாரத்திற்கு, மேடான மணல் திட்டுக்கள் உள்ளன. இவற்றில் 100க்கும் மேற்பட்ட தைலமரம், சவுக்கு மரங்கள் உள்ளன. இந்த மரங்களை பொதுப்பணி துறை பொக்லைன் இயந்திரம் மூலம் நேற்று அப்புறப்படுத்தியது. தொடர்ந்து மண் திட்டை கரைத்து, ஆற்றையும், ஓடையையும் இணைத்து, ஒரே சீராக அகலப்படுத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.இதுகுறித்து, பொதுப்பணி துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:அடையாறு, ஒரத்துார் ஓடை இடையே அரசு புறம்போக்கு இடமும், பொதுப்பணி துறையின் ஆற்றுக்கு சொந்தமான இடமும் உள்ளது. ஆறு, ஓடை இரண்டும் குறிப்பிட்ட இடத்தில் அகலம் குறைவாக இருக்கின்றன. கேட்பாரற்று கிடப்பதால், புறம்போக்கு நிலங்களும், மனைகளாக்கப்பட்டு விற்கப்படுகின்றன. குறிப்பிட்ட இடத்தில் சில ஏக்கர் பரப்பளவில் புறம்போக்கு இடத்தை மடக்கி, சிலர் விவசாயமே செய்து வருகின்றனர்.
இந்த இடங்களை அளந்துள்ளோம். முதல்கட்டமாக, ஒரத்துார் ஓடையில் இருந்து ஒரே நீளத்திற்கு மண் கரை அமைக்கப்பட்டுள்ளது. ஓடைக்கும், ஆற்றுக்கும் இடையே உள்ள மண் திட்டு அகற்றப்பட்டு வருகிறது. இந்த மண் திட்டை அகற்றி, ஆற்றை அகலப்படுத்தினால், இங்கு மட்டும் 80 மீ., அகலத்தில் ஆறும், அகலமான கரையும் அமையும். இது எதிர்கால வெள்ள பாதிப்பை தடுக்க உதவும்.இவ்வாறு அந்த அதிகாரி கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
spr - chennai,இந்தியா
14-பிப்-201611:12:36 IST Report Abuse
spr செய்தித்தாள்களில் சற்றே சமுதாயப் பொறுப்பு இருப்பதாகக் காட்டிய தினமலருக்குப் பாராட்டுக்கள். தொடரட்டும் இதன் அடுத்த செயலான இது போன்ற முயற்சிகளின் செயலாக்கம் குறித்த கண்காணிப்பும் விவர வெளியீடும்
Rate this:
Share this comment
Cancel
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
14-பிப்-201608:09:38 IST Report Abuse
Srinivasan Kannaiya நடுவிலே நிறுத்த மாட்டீங்களே.... பிறப்பிடம் தொடங்கி கடல்கரை வரை செம்மையாக பணி முடிக்க பாருங்கள்...
Rate this:
Share this comment
Cancel
Nagan Srinivasan - Houston,யூ.எஸ்.ஏ
14-பிப்-201601:25:53 IST Report Abuse
Nagan Srinivasan தினம் வளரும் தினமலர் தமிழ் இனம் வளர தரும் பணிகள்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X