இவர் இப்படி: வானளாவிய ஆளுமை!| Dinamalar

இவர் இப்படி: வானளாவிய ஆளுமை!

Added : பிப் 14, 2016 | கருத்துகள் (1)
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 இவர் இப்படி: வானளாவிய ஆளுமை!

முன்னாள் மத்திய அமைச்சர் நட்வர் சிங், 'வானளாவிய ஆளுமைக்கு சொந்தக்காரர்' என வர்ணித்ததை போல், கடைசி வரை வாழ்ந்து காட்டியவர், காங்., கட்சியைச் சேர்ந்த, லோக்சபா முன்னாள் சபாநாயகர் பல்ராம் ஜாக்கர், 92.
ஆளுமையை போன்று, நிஜத்திலும், கூடுதல் உயரமாக இருந்ததால், பல்ராம் ஜாக்கர் எங்கு சென்றாலும், அவர் தங்கும் அறையில், 7 அடி கட்டில் தயாராக வைக்கப்பட்டது. மத்திய பிரதேச மாநில கவர்னராக, 2004 முதல், 2009 வரை, பல்ராம் ஜாக்கர் பதவி வகித்த காலத்தில், கவர்னர் மாளிகையில், பிரத்யேக கட்டில் செய்யப்பட்டது. அப்போதைய முதல்வர் பாபுலால் கவுர், பல்ராம் ஜாக்கரின் நெற்றியில் திலகம் இட, ரொம்பவும் சிரமப்பட்டார்.
பஞ்சாப் மாநிலம், பெரோஷ்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த கிராமத்தில் பிறந்தவர் பல்ராம் ஜாக்கர்; ஆங்கிலம், ஹிந்தி, உருது, சமஸ்கிருதம் ஆகிய மொழிகளை சரளமாக பேசக் கூடியவர். ஏராளமான பண்ணை நிலங்களில், நவீன முறை தோட்டங்களை நிர்மாணித்தவர்.கடந்த, 1980 முதல், 1989 வரை, லோக்சபா சபாநாயகராக இருந்தபோது, பல்ராம் ஜாக்கரின் அரசியல் செல்வாக்கு உச்சத்தில் இருந்தது; அதன் பின், தீவன இயந்திர ஊழலில் சிக்கியதால், அவரின் செல்வாக்கு சற்று சரிந்தது. 1989ல் நடந்த லோக்சபா தேர்தலில், பல்ராம் ஜாக்கர் தோல்வியை தழுவ நேரிட்டது.
இருப்பினும், 1991ல் நடந்த தேர்தலில் மீண்டும் வென்று, நரசிம்ம ராவ் தலைமையிலான ஆட்சியில், விவசாயத் துறை அமைச்சரானார் பல்ராம் ஜாக்கர். முன்னதாக, 1972 முதல், 1980 வரை, பஞ்சாப் மாநில சட்டசபை உறுப்பினராக, பல்ராம் ஜாக்கர் திகழ்ந்தார். கடந்த, 1977 பொதுத் தேர்தலில், ஜனதா கட்சி அலை சுழன்றடித்தபோது, தப்பியவர்களில், அவரும் ஒருவர். 1980ல் லோக்சபா எம்.பி., ஆனார்.
பின், 1984, 1991, 1998ம் ஆண்டுகளிலும், அவரது வெற்றிப் பயணம் தொடர்ந்தது. 1990ல் காங்., கட்சியின் பொதுச் செயலராக நியமிக்கப்பட்டார்; 1992ல், காங்., செயற்குழு உறுப்பினரானார். அதன் பின், பல்ராம் ஜாக்கருக்கு வாய்ப்பு தரப்படா விட்டாலும், அவர் மகன்கள் சஜ்ஜன், சுனில் ஆகியோர், பஞ்சாப் மாநில அரசியலில் தலையெடுத்தனர்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Lion Drsekar - Chennai ,இந்தியா
15-பிப்-201608:41:34 IST Report Abuse
Lion Drsekar யார் என்ன செய்து என்ன பயன், ஒரே ஒரு குடும்பம் மட்டுமே இன்றைக்கும் பயன்பெற்றுக்கொண்டு மற்றவர்களை தங்கள் அடிமைகளாகக்கிக்கொண்டே போகிறதே . இவர்களால் நாடும் நாடும் அடிமைகளாகிப்போனது. வந்தே மாதரம்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X