போஸ்டர், பேனர் வாசகம் கண்காணிக்க ஜெ., உத்தரவு Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

Election 2016

பதிவு செய்த நாள் :
போஸ்டர், பேனர் வாசகம் கண்காணிக்க ஜெ., உத்தரவு

அ.தி.மு.க.,வில் வெளியில் தெரியாத சட்ட, திட்டங்கள் நிறைய உள்ளன. அக்கட்சி சார்பில், 'டிவி' விவாதங்களில் பங்கேற்போர், முன்கூட்டியே தலைமையிடம் அனுமதி பெற வேண்டும். என்ன தலைப்பில் விவாதம்; அதில் என்ன பேச வேண்டும் என்பது குறித்தெல்லாம், கட்சி தலைமையிடம் ஒப்புதல் பெற வேண்டியது அவசியம்.

போஸ்டர், பேனர் வாசகம் கண்காணிக்க ஜெ., உத்தரவு

சமீபத்தில், கட்சியினரால் ஒட்டப்படும் போஸ்டர், வைக்கப்படும் பேனர்களில் என்னென்ன வாசகங்கள் இடம் பெறுகின்றன என்பதையும், கட்சி தலைமை கண்காணிக்க உத்தரவிட்டு உள்ளது.முதல்வர் ஜெயலலிதா பிறந்த நாளை ஒட்டி, கட்சியினர் விதவிதமாக போஸ்டர்களை அச்சிட்டு, ஊரெங்கும் ஒட்டி வருகின்றனர்.

அந்த போஸ்டர்கள், அதில் இடம் பெற்ற வாசகம், படங்கள் குறித்து, கண்காணிப்பு நடக்கிறது. அதுபற்றிய தகவல் தலைமைக்கு சென்ற தும், செய்ய வேண்டிய திருத்தங்கள் குறித்து, அங்கிருந்து உத்தரவு வருகிறது. சர்ச்சையைகிளப்புவதாக இருந்தால், சம்பந்தப்பட்டருக்கு கடும் கண்டனம் கிடைக்கிறது.

அதே நேரம், பொருத்தமாக இருந்தால் பாராட்டுகளும் உண்டு. அப்படி சமீபத்தில் ஒட்டப்பட்ட மீனவரணி போஸ்டரில், மீனவர்

Advertisement

வேடத்தில் உள்ள, எம்.ஜி.ஆர்., படம், மிகப்பெரிய அளவில் இருந்தது. கட்சியில் ஆச்சரியத்தை ஏற்படுத்திய அந்த போஸ்டருக்கு, பாராட்டு கிடைத்திருக்கிற தாம். எல்லாம் தேர்தல் செய்யும் மாயம் என்கின்றனர்.
- நமது சிறப்பு நிருபர் -

Advertisement

வாசகர் கருத்து (98)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
மதுரை விருமாண்டி - சான் ஹோஸே, கலிபோர்னியா ,யூ.எஸ்.ஏ
17-பிப்-201606:51:37 IST Report Abuse

மதுரை விருமாண்டிஅம்மேயோட விஷன் 2023 திட்ட அறிவிப்பில் இது தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.. அதை வாசித்து புரிந்தவர்களுக்கு இது தெரியும். ஒரு அடிக்கு வைக்கும் 10 பேனர்களில் 80 சதவீத பரப்பு அம்மேயின் ஆளுமையில் இருக்க வேண்டும்.. மத்தபடி கமிஷன் எப்பவும் போல 45% தான்.. குழப்பம் எதுவும் இல்லையே.. சரி..

Rate this:
Raj - bangalore,இந்தியா
16-பிப்-201619:44:40 IST Report Abuse

Rajபாராளுமன்ற தேர்தலில் கிடைத்த வெற்றி தான், அதிக அளவில் ஒன்றும் கிடைக்காது.

Rate this:
tadj.C - Paris,பிரான்ஸ்
16-பிப்-201619:44:11 IST Report Abuse

tadj.Cஒவ்வொரு அரசியல் கட்சிக்கும் நாட்டில் பேனர் கலாசாரம் வோட்டுபோடும் மக்களிடத்தில் ஐக்கியமாக்கி விட்டோம் என்கிற அங்கலயிப்பு , பெருமிதம் இருக்குவரை போஸ்டர் , பேனர் என்று இருக்கத்தான் செய்யும் , மாறாக இவை யாவையும் நிராகரித்தால் கொஞ்சம் கொஞ்சமாக அடுத்த தலைமுறையாவது இந்த பேனர் கலாசாரம் மறையவதற்கு வாய்ப்பு உண்டு இல்லையேல் கழுதை கெடடா குட்டிசுவரு,

Rate this:
மேலும் 95 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X