பலரை கணவராக்கிய 'கல்யாண ராணி': சிக்கினார் துணை நடிகை ஆன்சி| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பலரை கணவராக்கிய 'கல்யாண ராணி': சிக்கினார் துணை நடிகை ஆன்சி

Updated : பிப் 16, 2016 | Added : பிப் 15, 2016 | கருத்துகள் (9)
Advertisement
 பலரை கணவராக்கிய 'கல்யாண ராணி': சிக்கினார் துணை நடிகை ஆன்சி

திண்டுக்கல் :போலி பெயர்களில் பலரை திருமணம் செய்து ஏமாற்றிய சினிமா துணை நடிகை ஆன்சி என்ற பிலோமினாவை, 39, திண்டுக்கல் போலீசார் கைது செய்தனர்.
கேரளா கோட்டயம் மல்லப்பள்ளியை சேர்ந்த அனுஜோசப், 32, திண்டுக்கல் போலீசில் அளித்த புகார் மனு:சென்னையில் 2014ல் நான் டிராவல்ஸ் நடத்தி வந்தேன். அங்கு ஆதரவற்றோர் ஆசிரமத்தில் தங்கி இருந்த திண்டுக்கல் ஆன்சி, 39, என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. அவர் என்னிடம், 'எனக்கு திருமணமாகவில்லை. நான் ஒரு அனாதை' என்றார்.இதையடுத்து 2015ல் கோட்டயத்தில் கிறிஸ்தவ முறைப்படி அவரை திருமணம் செய்தேன். அப்போது அவர் சர்ச்சில் தாக்கல் செய்த உறுதிமொழி படிவத்தில், 'எனக்கு திருமணமாகவில்லை' என கூறியிருந்தார்.
ஏழு நாட்கள் என்னுடன் வாழ்ந்த நிலையில் எனது நகைகளை திருடிக் கொண்டு சென்னை சென்று விட்டார். பிறகு என் மீது கேரளாவில் குடும்ப வன்முறை புகார் கொடுத்து வழக்கு பதியப்பட்டது. அவர் குறித்து விசாரித்த போது பெயர் 'பிலோமினா' என்றும், ஏற்கனவே அவருக்கு பலருடன் திருமணமாகி இருந்ததும், பலரை ஏமாற்றியதும் தெரிந்தது. இதுகுறித்து நான் கேட்டதற்கு அடியாட்களை வைத்து மிரட்டுகிறார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.இதுகுறித்து விசாரித்த இன்ஸ்பெக்டர் அன்னக்கிளி தலைமையிலான போலீசார், சென்னை சாலிகிராமத்தில் தலைமறைவாக இருந்த ஆன்சியை கைது செய்தனர்.
சினிமா துணை நடிகை: சினிமா துணை நடிகையான ஆன்சி, திண்டுக்கல் செட்டிநாயக்கன்பட்டியைச் சேர்ந்தவர். இவர் 'ஆடுகளம்', 'எங்கேயும் எப்போதும்' ஆகிய படங்களில் நடித்துள்ளார். தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வருகிறார்.
போலி பெயர்களில் திருமணம்இன்ஸ்பெக்டர் அன்னக்கிளி கூறியதாவது:ஆன்சி கடந்த 1996ல் மதுரை புவனேஷ்குமாரை திருமணம் செய்தார். அவருக்கு துர்கா என்ற குழந்தை பிறந்தது. அவரிடம் இருந்து விலகிய நிலையில், திண்டுக்கல்லில் பக்கத்து வீட்டினருடன் ஏற்பட்ட தகராறு குறித்து புகார் அளிக்க, மேற்கு போலீஸ் ஸ்டேஷன் சென்ற போது எஸ்.ஐ., சீனிவாசனுடன் காதல் ஏற்பட்டது.
அவரை 2003ல் திருமணம் செய்தார். அவர்களுக்கு சூர்யா என்ற ஆண் குழந்தை பிறந்தது. பின், முதல் மற்றும் இரண்டாவது கணவருக்கு பிறந்த குழந்தைகளை, கடந்த 2009 ஜூலை 20ல் விஷம் வைத்து கொன்றதாக தொடரப்பட்ட வழக்கு திண்டுக்கல் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.
கடந்த 2013ல் தேனியில் நடந்த நகைக்கடை கொள்ளையில், பரமதுரை என்பவர் சிக்கினார். இவருக்கும் ஆன்சிக்கும் தொடர்பு உள்ளதை போலீசார் உறுதி செய்தனர். இது தொடர்பாக தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் விளக்கம் அளித்தார்.
அதன்பின், மனுதாரர் அனுஜோசப்பை திருமணம் செய்துள்ளார். ஆன்சியை, அனுஜோசப் திண்டுக்கல்லுக்கு அழைத்து வந்த போது, காரை நிறுத்தி விட்டு அவர் மட்டும் மகளிர் நீதிமன்றத்திற்கு சென்றார். அப்போதுதான், ஆன்சி மீது கணவருக்கு சந்தேகம் ஏற்பட்டது. பின்பு அனுஜோசப்பிடம் ரூ.50 லட்சம், 100 பவுன் நகை கேட்டு மிரட்டினார். புளோரா, மீனா, ஹெலன், ஆன்சி, ஷைனி உட்பட பல பெயர்களில் வலம் வந்தார். தற்போது கைது செய்துள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (9)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Mr y - thamizhnadu,இந்தியா
16-பிப்-201611:37:56 IST Report Abuse
Mr y ஏம்மா முற்றும் செய்த பின் முக்காடு எதற்கு ? எதோ ஒரு கட்சி வேண்டாம், புரட்சி தலைவியின் கட்சியில் சேர்ந்து எதாவது மந்திரி ஆனால் இன்னும் நிறைய சாதிக்கலாம் .... வாழ்த்துக்கள்
Rate this:
Share this comment
Cancel
Ajaykumar - Rajapalayam,சிங்கப்பூர்
16-பிப்-201611:00:21 IST Report Abuse
Ajaykumar பெற்ற பிள்ளையை கொலை செய்தால், தூக்கில் போடவேண்டும்.
Rate this:
Share this comment
Cancel
அம்பி ஐயர் - நங்கநல்லூர், சென்னை - 61,இந்தியா
16-பிப்-201609:55:06 IST Report Abuse
அம்பி ஐயர் ஆஹா.... இதுவல்லவோ சமதர்மம்.... முன்பெல்லாம் ஆண்கள்தான் இப்படிப் பெண்களை ஏமாற்றிப் பல திருமணம் செய்வார்கள்.... இப்போது ஆண்களுக்குப் போட்டியாகப் பெண்களும் களமிறங்கி விட்டார்கள்.... வளரட்டும்... இதுவே படிப்படியாக அதிகரித்து பெண்கள் ஆண்களை மிஞ்ச வேண்டும்.... அப்போதுதான் பெண்களுக்கு முழுச் சுதந்திரம் கிடைத்ததாகக் கொள்ளலாம்...
Rate this:
Share this comment
Cancel
JAIRAJ - CHENNAI,இந்தியா
16-பிப்-201609:28:27 IST Report Abuse
JAIRAJ நடிப்பதற்கு பொருத்தமான பெண்மணி தான்.
Rate this:
Share this comment
Cancel
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
16-பிப்-201608:35:29 IST Report Abuse
Srinivasan Kannaiya ஆண்களின் பலவீனம் அவருடைய பலமாகி விட்டது...
Rate this:
Share this comment
Cancel
Mani . V - Singapore,சிங்கப்பூர்
16-பிப்-201608:02:45 IST Report Abuse
Mani . V இதுபோல் பத்தினிகள் இன்னும் இன்னும் எத்தனையோ? யப்பா கண்ணை கட்டுதடா சாமியோவ். ஆத்தா புளோரா, மீனா, ஹெலன், ஆன்சி, ஷைனி ( என்ன பெயர் சொல்லி அழைப்பது? ) இந்தப் பெயர்கள் மட்டும்தானா அல்லது இன்னும் பல இருக்கா? ஆத்தா உன்னைப்போன்று ஊருக்கு ஒருத்தர் இருந்தால் உலகம் வெளங்கிடும். பெற்ற பிள்ளைகளை விஷம் வைத்து கொள்ள உன்னைப்போல் தினம் ஒருவரை திருமணம் ( திருமணம் என்று கொச்சைப்படுத்துவது தவறு தான் ) செய்யும் ராட்சசிகளால் மட்டுமே முடியும்.
Rate this:
Share this comment
Cancel
anbu - Hamilton,நியூ சிலாந்து
16-பிப்-201607:48:06 IST Report Abuse
anbu எஸ்.ஐ., சீனிவாசனுடன் காதல் ஒன்றும் இல்லை. எல்லாம் நாடகம். இவனையும் உள்ளே வைக்கணும். அன்னக்கிளி உஷார்
Rate this:
Share this comment
Cancel
A R J U N - ,இந்தியா
16-பிப்-201606:22:10 IST Report Abuse
A R J U N ..சட்டம் கொடுக்கும் சுதந்திரம் /அதிகாரம்/உரிமை....துஷ்பிரயோகம் செய்யப்படுகிறது
Rate this:
Share this comment
Cancel
சிட்டுக் குருவி - கூரைவீடு,இந்தியா
16-பிப்-201605:58:19 IST Report Abuse
சிட்டுக் குருவி தமிழக அரசு சட்டசபை மரபுப்படி , இவளுக்கும் நெற்றியில் பு.தலைவி ஜெயலலிதா ஸ்டிக்கர் ஒட்டவேண்டும். தவறிய குற்றத்திற்காக.......
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை