வங்கிப் பரிவர்த்தனையில் முறைகேடுகள்: ரிசர்வ் வங்கி| Dinamalar

பொது செய்தி

இந்தியா

வங்கிப் பரிவர்த்தனையில் முறைகேடுகள்: ரிசர்வ் வங்கி

Added : பிப் 16, 2016 | கருத்துகள் (24)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
வங்கிப் பரிவர்த்தனையில் முறைகேடுகள்: ரிசர்வ் வங்கி

புதுடில்லி : நாடு முழுவதும் உள்ள பல்வேறு வங்கிகளில், பணப் பரிவர்த்தனைகளில் பல்வேறு வழிகளில் முறைகேடுகள் நடந்துள்ளதை ரிசர்வ் வங்கி கண்டறிந்துள்ளது.

வங்கிகளின் சட்டவிரோதப் பணப் பரிவர்த்தனை தொடர்பாக, ரிசர்வ் வங்கி எடுத்த நடவடிக்கைகள் குறித்து தகவல் உரிமைச் சட்டத்தின் கீழ் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இதற்கு பதிலளித்த ரிசர்வ் வங்கி தெரிவித்ததாவது: சில வங்கிகள் தங்களது பணப் பணிவர்த்தனை அறிக்கைகளை முறையாக சமர்ப்பித்துள்ளன. அதில் சந்தேகத்துக்குரிய பரிவர்த்தனைகளையும் குறிப்பிட்டுள்ளன. சில வங்கிகள் காலம் தாழ்த்தியும், சில வங்கிகள் அறிக்கைகளை சமர்ப்பிக்காமலும் உள்ளன.
வாடிக்கையாளர்கள் குறித்த அடிப்படை விவரங்களைப் பெறாமலேயே சில வங்கிகள் நடப்புக் கணக்குகளை சிலருக்கு தொடங்கியுள்ளன. இந்தியாவிலிருந்து வெளிநாடுகளுக்கும், வெளிநாடுகளிலிருந்து இந்தியாவுக்கும் இடையே சட்டவிரோதமாக பணப்பரிவர்த்தனை செய்ய சில வங்கிகள் அனுமதி அளித்துள்ளன. இப்பரிவர்த்தனை அன்னியச் செலாவணி துறையின் அறிவுறுத்தலையும் மீறி நடத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதுபோன்ற முறைகேடுகளை அந்தந்த வங்கிகளின் தணிக்கைக் குழுவினர் கண்டறியாமல் இருப்பது, பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது. இவ்வாறு அந்த பதிலில் கூறப்பட்டுள்ளது.

டில்லி 'பாங்க் ஆப் பரோடா' கிளையிலிருந்து ஹாங்காங்குக்கு சட்ட விரோதமாக ரூ.6,100 கோடி கடந்த ஆண்டு அனுப்பப்பட்டது. இப்பரிவர்த்தனை தொடர்பாக, சி.பி.ஐ., மற்றும் அமலாக்கத் துறை விசாரணை நடத்தி வரும் நிலையில், இந்த அதிர்ச்சி தகவல்கள் தற்போது தெரியவந்துள்ளன.

Advertisement


வாசகர் கருத்து (24)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
balakrishnan - coimbatore,இந்தியா
16-பிப்-201621:12:26 IST Report Abuse
balakrishnan இந்தியா போன்ற மிகப்பெரிய நாட்டில் இது போன்ற குறைபாடுகளை களைவதில் புதிய தொழில் நுட்பத்தை பயன் படுத்தவேண்டும், வெளிநாட்டு வங்கிகள் என்ன செய்கின்றன என்பதை ஆராயவேண்டும், நிறைய நடைமுறைகள் சிறப்பாகவே தான் உள்ளது, ஆனாலும் அதையும் மீறி ஏமாற்றுகிறான் என்றால் புதிய தொழில்நுட்பம் அவசியம் தேவை
Rate this:
Share this comment
Cancel
Murukesan Kannankulam - Kannankulam,இந்தியா
16-பிப்-201617:13:56 IST Report Abuse
Murukesan Kannankulam ரிசர்வு வங்கி கவர்னர் ரகுராம் ராஜன் காங்கிரஸ் ஆட்சி காலத்தில் நியமிக்கபட்டவராகும்.இந்த பதவியில் இருப்பவரை மிக எளிதாக மாற்ற முடியாது.
Rate this:
Share this comment
Appu - Madurai,இந்தியா
16-பிப்-201618:50:26 IST Report Abuse
Appuபதவியில் வேறு ஒருவரை மாற்றி குறைகளை தீர்த்துவிட முடியும் என்று நினைக்கிறீர்களா? ஒருவர் தன் வேலையை செய்வதில் சிக்கல் இருந்தால் அவருக்கு மேல் அதிகாரத்தில் உள்ளவர் என்ன குறை என்பதை கண்டு கொள்ளும் அளவு இருந்தாலே ஒழிய பிரச்சனைகளை சுளுவாக கட்டுபடுத்த இயலாது....இவருக்கு மேல் இருக்கும் பினான்ஸ் மினிஸ்டர் அவருக்கு மேல் இருக்கும் மேதகு பிரதமரும் இதை கட்டுபடுத்த அவருக்கு முறையான உந்துதல் உதவிகள் செய்யவேண்டும் என்றே நான் நினைக்கிறேன்...அப்படி இல்லாவிட்டால் அவர்களாலும் எந்த விதத்திலும் இதை கட்டுபடுத்தி கட்டுக்குள் கொண்டு வர இயலாத நிலையில் இருப்பதாகவே உணரப்படும்...ஒரு வேளை இவர்களால் கட்டுப்படுத்த இயலாத நபராக இருந்தால் அவரை மாற்றி அவரை விட திறமைசாலியி கண்டு அந்த பொறுப்பில் அமர வைப்பதே சிறந்தது... அதற்காக காத்திருக்க வேண்டிய அவசியம் இல்லையே?நாட்டு முன்னேற்றத்திற்காக ஒருவரை பொறுப்பில் இருந்து மாற்ற வேண்டும் என்றால் அதில் இருக்கும் சிக்கல்களை உடைத்து தான் ஆக வேண்டும்...காரணம் சொல்லி மூலையில் உட்காருவது தனி நபருக்கே சரியாக இருக்காத போது மக்களை ஆளும் அரசிற்கு அழகாக இருக்குமா?...
Rate this:
Share this comment
Cancel
Nallavan Nallavan - Kolkata,இந்தியா
16-பிப்-201616:16:13 IST Report Abuse
Nallavan Nallavan பணவீக்கம் அதிகரித்து விட்டது என்று சொல்லி சாதாரணக் குடிமகனை வதைக்கத்தான் தெரியும் ரிசர்வ் வங்கிக்கு ....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X