நல்லாட்சியை வழங்கியது அ.தி.மு.க.,வே: கருத்துக் கணிப்பில் 34.8 சதவீதம் பேர் ஆதரவு| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

நல்லாட்சியை வழங்கியது அ.தி.மு.க.,வே: கருத்துக் கணிப்பில் 34.8 சதவீதம் பேர் ஆதரவு

Added : பிப் 16, 2016 | கருத்துகள் (279)
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement

சென்னை: தமிழகத்திற்கு நல்லாட்சியை அ.தி.மு.,க.,தான் வழங்கியுள்ளது என்று புதிய தலைமுறை தொலைக்காட்சி நடத்திய கருத்துகணிப்பு தெரிவிக்கிறது.


தமிழகத்தின் நாடிக்கணி்ப்பு 2016 என்ற தலைப்பில் புதிய தலைமுறை கருத்துகணிப்பு நடத்தியது. இதில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு மக்கள் அளித்த பதில்கள் அடிப்படையில் இதன் முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.


நல்லாட்சியை வழங்கிய அரசு எது என்ற கேள்விக்கு 34.8 சதவீதம் பேர் அ.தி.முக.,விற்கு ஆதரவாகவும், 33.33 சதவீதம் பேர் தி.மு.க.,விற்கு ஆதரவாகவும் ஓட்டளித்துள்ளனர்.


சட்டம் ஓழுங்கு பாதுகாப்பு எந்த அரசு சிறந்தது என்ற கேள்விக்கு அ.தி.மு.க.,விற்கு ஆதரவாக 36.65 சதவீதம் பேரும் தி.மு.க.,விற்கு ஆதரவாக 29.63 சதவீதம் பேரும் ஓட்டளித்துள்ளனர்.


விலைவாசி கட்டுப்படுத்துவதில் சிறந்த அரசு எது என்ற கேள்விக்கு அ.தி.மு.க.விற்கு ஆதரவாக 27.79 சதவிதம் பேரும் தி.மு.க.,விற்கு ஆதரவாக 35.41 சதவீதம் பேரும் ஓட்டளித்துள்ளனர்.


ஊழலற்ற ஆட்சி எது என்ற கேள்விக்கு அ.தி.மு.க.விற்கு ஆதரவாக 29.68 சதவீதம் பேரும் தி.மு.க.விற்கு ஆதரவாக 19.12 சதவீதம் பேரும் இரண்டும் இல்லை என்று 43.63 சதவீதம் பேரும் ஓட்டளித்துள்ளனர்.


ஏழைகள் நலனு்க்காக பாடுபடும் அரசு எது என்ற கேள்விக்கு அ.தி.மு.க.விற்கு ஆதரவாக 35.04 சதவீதம் பேரும், தி.மு.க.விற்கு ஆதரவாக 30.96 சதவீதம் பேரும் ஓட்டளித்துள்ளனர்.


பொதுவிநியோகம் எந்த ஆட்சியில் சிறப்பாக செயல்பட்டது என்ற கேள்விக்கு அ.தி.முக.விற்கு ஆதரவாக 37.06 சதவீதம் பேரும் தி.மு.கவிற்கு ஆதரவாக 31.52 சதவீதம் பேரும் ஓட்ளித்துள்ளனர்.


கொடுத்த வாக்குறுதிகளை யார் நிறைவேற்றினர் என்ற கேள்விக்கு அ.தி.முக.,விற்கு ஆதரவாக 31.83 சதவீதம் பேரும் தி.மு.க.,விற்கு ஆதரவாக 27.66 சதவீதம் பேரும் ஓட்டளித்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து (279)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
மீசநேசன் - chennai,இந்தியா
23-பிப்-201605:47:34 IST Report Abuse
மீசநேசன் அது என்ன அ.தி.மு.க.வே?? 65.2 % இல்லேங்கறாகளே என்னய்யா சர்வே இது..ஹீடிங்க ஏடா கூடாம போடாதிங்க
Rate this:
Share this comment
Cancel
Muthuraj Richard - Coimbatore,இந்தியா
17-பிப்-201613:30:39 IST Report Abuse
Muthuraj Richard தெரியாத கடவுளை விடவும் தெரிந்த பூதத்தை நம்புவது நல்லது, Stalin வாக்குறுதி அளித்தது போலவே வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் பட்சத்தில் அவர் மீண்டும் மக்களை நேரில் சந்திப்பது, அவர்கள் குறைகளை நேரில் கேட்டு நடவடிக்கை எடுப்பதாக கூறியிருப்பது நம்பிக்கை தருகிறது இது உறுதி, ஆனால் தி மு கவிற்கு வாக்களிப்பது நல்லது, அது நடக்காத பட்சத்தில் மக்களை காக்க கடவுள் ஆட்சி தான் வரவேண்டும், வேறு யாரும் இருப்பதாக தெரியவில்லை, நல்ல ஒரு தலைமை, தேர்ந்த தன்னலமற்ற தலைவர் இல்லாதது தமிழ்நாட்டின் இன்றைய நிலை, குடும்பமே இல்லாதவர் சொத்து குவித்திருப்பது அவர் மக்கள் மேல் கொண்ட அக்கறையை காட்டுகிறது, இவருக்கு கலைஞர் எவ்வளவோ மேல், (கட்டமைப்புக்கு) குறைந்தது பாலங்கள், ரோடுகள் கட்டிடங்களுக்காவது திட்டமிடுவார், அம்மாவின் இலவசங்கள் தரம் இல்லாதவை, தனி முதலாளிகளை முன்னுக்கு கொண்டு வருபவை, இவர் தந்த பொருட்கள் ஏற்கனவே பழுது பார்க்கும் கடைகளில் பழுது பார்க்க முடியாமல் கிடக்கின்றன, ஆந்திர மாநிலத்தில் பழைய இரும்பு கடைகளில் குறைந்த விலையில் விற்க படுகின்றன, இவற்றால் மக்களுக்கு பலன் இல்லை, சிந்திக்கும் நேரமிது.
Rate this:
Share this comment
Cancel
Ramesh Rayen - Abu Dhabi,ஐக்கிய அரபு நாடுகள்
17-பிப்-201613:26:31 IST Report Abuse
Ramesh Rayen இரண்டு கட்சிகளுமே திருட்டு கட்சிகள்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X