பழநி "சாக்கடை சித்தர்' மருத்துவமனையில் அனுமதி| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

பழநி "சாக்கடை சித்தர்' மருத்துவமனையில் அனுமதி

Added : பிப் 17, 2016
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement



பழநி,:பழநி அடிவாரம் பகுதியை சேர்ந்த சாமியார் சாக்கடை சித்தர் உடல்நலக்குறைவு காரணமாக தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். பழநிகோயிலுக்கு செல்லும் அடிவாரம் அய்யம்புள்ளி ரோட்டில் கடந்த 15 ஆண்டுகளுக்கு மேலாக சாமியார் ஒருவர் கூடாரத்தில் தங்கியுள்ளார். அவர் சாக்கடையில் நீராடுவதால் அவரை "சாக்கடை சித்தர்' என அழைக்கப்படுகிறார்.
அவருக்கு 55 வயது இருக்கும். வடமாநிலத்திலிருந்து பழநிக்கு வந்தார். யாரிடமும் பேசமாட்டார். அவரை வழிபட்டால் நல்லது நடக்கும் என்ற நம்பிக்கையில் உள்ளூர்மக்கள் மட்டுமின்றி, கோயிலுக்கு வரும் வெளியூர் பக்தர்கள் பலரும் வணங்கி ஆசிபெறுகின்றனர்.
சாக்கடை சித்தருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதால், அவர் பழநி தனியார் மருத்துவமனையில் சி
கிச்சைக்காக அனுமதிக்கப் பட்டுள்ளார். பழநியில் போகர், புலிப்பாணி என பல சித்தர்கள் வாழ்ந்துள்ளனர். இன்னமும் சிலர் மக்கள் கண்ணிற்கு புலப்படாமல் இருப்பதாகவும், அவர்களின் அடையாளமாக சாக்கடை சித்தர் உள்ளார் என, ஆதரவாளர்கள் கருதுகின்றனர். தனியார் மருத்துவமனையிலுள்ள சாக்கடை சித்தரை முக்கியபிரமுகர்கள் பலர் நலம் விசாரித்து செல்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X