குடிநீர், மின்சார கட்டணம் பாக்கி இருந்தால்...தேர்தலில் போட்டியிட முடியாது Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

Election 2016

பதிவு செய்த நாள் :
குடிநீர், மின்சார கட்டணம் பாக்கி இருந்தால்...
தேர்தலில் போட்டியிட முடியாது

சட்டசபை மற்றும் லோக்சபா தேர்தல்களில் போட்டியிடும் வேட்பாளர்கள், 'மின்சாரம், குடிநீர், தொலைபேசி கட்டண பாக்கி ஏதுமில்லை' என, பிரமாண பத்திரம் தாக்கல் செய்வதை கட்டாயமாக்க, தேர்தல் கமிஷன் முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக, கருத்தை தெரிவிக்கும்படி, அரசியல் கட்சிகளுக்கு, தேர்தல் கமிஷன் கடிதம் அனுப்பி உள்ளது.

 குடிநீர், மின்சார கட்டணம், பாக்கி ,தேர்தல், போட்டியிட முடியாது

கட்சிகளுக்கு கடிதம்:

நாடு முழுவதும் உள்ள அங்கீகரிக்கப்பட்ட தேசிய, மாநில அரசியல் கட்சிகளின் தலைவர்கள், பொதுச் செயலர்களுக்கு, தேர்தல் கமிஷன் அனுப்பிய கடிதம்:உச்ச நீதிமன்றம், 2003ல் பிறப்பித்த உத்தரவின்படி, 'பார்லிமென்ட் மற்றும் சட்டசபை தேர்தல்களில் போட்டியிடும் வேட்பாளர்கள், தங்களின் குற்றப் பின்னணி குறித்த விவரம், சொத்து விவரம், கல்வித்

தகுதியை, பிரமாணப் பத்திரமாக தாக்கல் செய்ய வேண்டும்' என, தேர்தல் கமிஷன் உத்தரவிட்டது. அதே போல், அரசு பதவிகளில், அதாவது, எம்.பி., - எம்.எல்.ஏ.,க்களாக பதவி வகித்தவர்கள், அரசுக்கு செலுத்த வேண்டிய பாக்கித் தொகை ஏதுமில்லை என சான்றிதழ் சமர்ப்பிக்கவும் அறிவுறுத்தப்பட்டது. அதில் சில பிரச்னைகள் இருப்பதாக, ஒருதரப்பில் இருந்து வந்த முறையீட்டை தொடர்ந்து, அரசுக்கு செலுத்த வேண்டிய பாக்கி தொகை ஏதுமில்லை என சான்றிதழ் வழங்க வேண்டும் என்ற நடைமுறையை, தேர்தல் கமிஷன் நிறுத்தியது.

இந்தச் சூழ்நிலையில், கிர்ஷக் பாரத் என்பவர் தொடர்ந்த வழக்கை விசாரித்த டில்லி உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு: பார்லிமென்ட் மற்றும் சட்டசபைக்கு போட்டியிடும் வேட்பாளர்கள், தங்கள் வேட்பு மனுவுடன், அரசுக்கு செலுத்த வேண்டிய பாக்கி தொகை ஏதும் உள்ளதா என்பது குறித்து, பிரமாண பத்திரம் தாக்கல் செய்வதை மீண்டும் கட்டாயமாக்க வேண்டும். உயர் நீதிமன்றம் உத்தரவுஅதே போல், கடந்த, 10 ஆண்டுகளில், ஏதேனும் அரசு பதவிகளில், அதாவது, எம்.பி., -எம்.எல்.ஏ.,வாக இருந்து, அரசு குடியிருப்புகளில் தங்கியிருந்தால், அவர்களும், மின்சாரம், குடிநீர், தொலைபேசி வசதிகளுக்காக செலுத்த வேண்டிய பாக்கி தொகை ஏதுமில்லை என சான்று அளிக்க வேண்டும். இது பற்றி, ஆறு மாதங்களில் தேர்தல் கமிஷன் முடிவெடுக்க வேண்டும்.இவ்வாறு டில்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Advertisement

இந்த உத்தரவின் அடிப்படையில், பார்லிமென்ட் மற்றும் சட்டசபை தேர்தல்களில் போட்டியிடும் வேட்பாளர்கள், தங்கள் வேட்பு மனுக்களுடன், 'மின்சாரம், குடிநீர், தொலைபேசி கட்டண பாக்கி ஏதுமில்லை' என, சம்பந்தப்பட்ட ஏஜன்சிகளிடம் இருந்து சான்றிதழ் பெற்று, கூடுதல் படிவத்தை பூர்த்தி செய்து தாக்கல் செய்ய வேண்டும். இந்த படிவம் இல்லாமல் தாக்கல் செய்யப்படும் வேட்பு மனுக்கள், குறைபாடானது என கருதப்படும். இந்த புதிய நடைமுறையை அமல்படுத்துவது குறித்து அரசியல் கட்சிகள், தங்கள் கருத்துக்களை தெரிவிக்க வேண்டும். இவ்வாறு கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

- நமது சிறப்பு நிருபர் -


Advertisement

வாசகர் கருத்து (16)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
g k - chennai  ( Posted via: Dinamalar Android App )
22-பிப்-201613:47:42 IST Report Abuse

g kஇதில் முடிவெடுக்க அரசியல் கட்சிகளின் கருத்தை ஏன் கேட்க வேண்டும் குற்றவாளியை கேட்டுக் கொண்டு தான் அவர் வசதிப்படிதான் தீர்ப்பு எழுத வேண்டுமோ

Rate this:
தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
20-பிப்-201619:25:10 IST Report Abuse

தமிழ்வேல் அரசு குடியிருப்புகளில் தங்கியிருந்தால் தானே ? கட்டணங்களைப் பிடித்துக் கொண்டு சம்பளம் போட வேண்டியதுதானே ?

Rate this:
prakash - kilpalur,இந்தியா
20-பிப்-201616:07:54 IST Report Abuse

prakashi appreciate election commision .congratulation

Rate this:
மேலும் 13 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X