டூவீலர் விபத்தில் ஆடிட்டர் பலி | Dinamalar

டூவீலர் விபத்தில் ஆடிட்டர் பலி

Advertisement

திருநெல்வேலி: திருநெல்வேலி நான்கு வழிச்சாலையில் டூவீலர் மீது கார் மோதியதில் ஆடிட்டர் பலியானார். திருநெல்வேலி திருமால் நகர் பகுதியை சேர்ந்தவர் செல்வ பாபா சபரிதாஸ்,45. இவர் காலை 8 மணியளவில் ஆக்டிவா டூவீலரில், நான்கு வழிச்சாலை ரகுமத் நகர் பகுதியில் சென்று கொண்டிருந்தார். அப்போது நாகர் கோவிலில் இருந்து கோவை நோக்கி சென்ற ஸ்விப்ட் கார் மோதியது. இதில் சபரிதாஸ் பரிதாபமாக பலியானார். போக்குவரத்து குற்றப்பிரிவு போலீசார் கார் டிரைவர் நாகர்கோவிலை சேர்ந்த அன்பு என்பவரை கைது செய்து விசாரிக்கின்றனர். சபரிதாஸ் மனைவி ஜோஸ்பின் நெல்லை கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றி வருகிறார்.

Advertisement