தேர்தல் கமிஷன் நடவடிக்கை: நான்கு லட்சம் வாக்காளர்கள் நீக்கம்? Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
தேர்தல் கமிஷன் நடவடிக்கை
நான்கு லட்சம் வாக்காளர்கள் நீக்கம்?

சென்னை: தமிழகம் முழுவதும், வாக்காளர் பட்டியலை செம்மைப்படுத்தும் பணி, பிப்., 15ல் துவக்கப்பட்டது. அதன்படி, ஒன்றுக்கும் மேற்பட்ட இடங்களில் உள்ள வாக்காளர்கள் மற்றும் இறந்த வாக்காளர்களின் பெயர் விவரங்கள் தயாரிக்கப்பட்டன.

தேர்தல் கமிஷன்,  நான்கு லட்சம், வாக்காளர்கள் நீக்கம்

இதுதவிர, 51 சட்டசபை தொகுதிகளில் உள்ள போலி வாக்காளர் விவரங்களை, தி.மு.க., வழங்கி உள்ளது.இவற்றின் அடிப்படையில், ஓட்டுச்சாவடி வாரியாக, நீக்கப்பட வேண்டியவர்கள் பட்டியல் தயார் செய்யப்பட்டுள்ளது; அதில், நான்கு லட்சம் பேர் இடம் பெற்றுள்ளனர். இப்பட்டியல், இன்று அனைத்து ஓட்டுச் சாவடிகளிலும், ஓட்டுச்சாவடி அலுவலர் மூலமாக, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின், 'பூத் ஏஜன்ட்'களுக்கு வழங்கப்படும். ஆட்சேபனை

இல்லையெனில், பட்டியலில் உள்ளவர்களின் பெயர்கள் நீக்கப்படும்.

இது குறித்து, தமிழகத் தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி கூறியதாவது: சிறப்பு முகாமில், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க அளித்த விண்ணப்பங்கள் குறித்து, கள ஆய்வுமேற்கொள்ளப்படும். அது முடிந்த பின், அவர்களின் பெயர், வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்படும். வரும், 26ம் தேதி, அனைத்து ஊராட்சிகளிலும், சிறப்பு கிராம சபை கூட்டம் நடத்தப்படும். அந்த கூட்டத்தில், வாக்காளர் பட்டியல் மக்களுக்கு வாசித்து காண்பிக்கப்பட்டு, ஆட்சேபனை இருந்தால் விவரம் கேட்கப்படும், என்றார்.

தமிழகத்தில் இறுதி வாக்காளர் பட்டியல், ஜன., 20ம் தேதி வெளியிடப்பட்டது. அதன்படி, 2.88 கோடி ஆண்கள்; 2.91 கோடி பெண்கள் வாக்காளர்களாக உள்ளனர். 'இப்பட்டியலில், 40 லட்சத்திற்கும் மேற்பட்ட, போலி வாக்காளர்கள் உள்ளனர்; அவர்களின் பெயர்களை நீக்கவேண்டும்' என, தி.மு.க., உட்பட பல்வேறு கட்சிகள், தேர்தல் கமிஷனுக்கு கோரிக்கை விடுத்தன.அதை ஏற்று, வாக்காளர் பட்டியல் செம்மைப்படுத்தும் பணி, பிப்., 15ம் தேதி துவங்கியது; 29ம் தேதி வரை நடக்கிறது. இதில், போலி வாக்காளர்களாக கண்டறியப்பட்ட, நான்கு லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட உள்ளனர்.

Advertisement

அதே சமயம், வாக்காளர்களாக பெயர் சேர்க்க சிறப்பு முகாமில், ஏழு லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். இதில் குறைந்தபட்சம், நான்கு லட்சம் விண்ணப்பங்கள் ஏற்கப்படலாம். வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாத மாற்றுத் திறனாளிகளை சேர்க்க நடவடிக்கை மேற்கொண்டனர். அந்த வகையில், 62 ஆயிரம் மாற்றுத் திறனாளிகள் பெயர் சேர்க்கப்பட்டுள்ளது. மேலும், கல்லுாரிகள் தோறும், வாக்காளர் சேர்ப்பு முகாம் நடந்து வருகிறது. அதன் மூலம், 1.50 லட்சம் இளம் வாக்காளர்கள் சேர வாய்ப்புள்ளது. எனவே, வாக்காளர் எண்ணிக்கை, 5.81 லட்சத்தை தாண்டும்.


Advertisement

வாசகர் கருத்து (15)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
THANGA TAMIL - சென்னை,இந்தியா
24-பிப்-201619:50:32 IST Report Abuse

THANGA TAMILதேர்தல் ஆணையம் வெளியிட்ட வோட்டர் லிஸ்ட்டில் என் சம்பந்தபட்ட தெருவில் சிலகுறைபாடுகள் உள்ளன, அதை ஒவ்வொரு தேர்தலிலும் அந்தகுறையை சம்பந்தப்பட்ட அதிகாரியிடம் சொன்னால் நிவர்த்தி செய்கின்றேன் என்று சொல்லுவார் ஆனால் செய்யமாட்டார்.தேர்தல் ஆணையம் இவ்விஷயங்களில் சரியில்லை.

Rate this:
இந்தியன் kumar - chennai,இந்தியா
24-பிப்-201616:38:42 IST Report Abuse

இந்தியன் kumarஆதர் அட்டையுடன் வாக்களர் அட்டையை இணைத்தால் முறைகேடுகள் நடக்க வாய்ப்பு கம்மி.

Rate this:
chidhambaram - chennai,இந்தியா
24-பிப்-201610:49:58 IST Report Abuse

chidhambaramஅரசு ஆவணகளில் அரசு அலுவலர் உதவி இல்லாமல் ஒரு திருத்தம் பண்ண முடியாது .... அப்படி சேர்த்தவர்கள் மீது நடவடிக்கை ?????? ஒரு பதில் வரும் " போலி ஆவணம் மூலம் சேர்த்தார்கள் என்று " - அத சரிபாக்கத்தான் உங்களுக்கு மக்கள் வரிப்பணம் தரபடுகிறது

Rate this:
மேலும் 12 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X