லோக்சபாவில் பா.ஜ., - காங்கிரஸ் மோதல்: தேசப்பற்று விவகாரத்தில் காரசார வாதம் Dinamalar
பதிவு செய்த நாள் :
லோக்சபாவில் பா.ஜ., - காங்கிரஸ் மோதல்
தேசப்பற்று விவகாரத்தில் காரசார வாதம்

புதுடில்லி: பட்ஜெட் கூட்டத் தொடரின் இரண்டாம் நாளான நேற்று, ஐதராபாத், டில்லி பல்கலை மாணவர்கள் விவகாரம் தொடர்பாக, லோக்சபாவில் ஆளும் தரப்புக்கும், எதிர்தரப்புக்கும், கடும் வாக்குவாதம் நடந்தது. அமைச்சர் ஸ்மிருதி இரானி, பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதிக்கு இடையே நடந்த காரசார வாதத்தால், ராஜ்யசபா ஒத்தி வைக்கப்பட்டது.

லோக்சபா,பா.ஜ., காங்கிரஸ், மோதல், தேசப்பற்று, காரசார வாதம்

லோக்சபா, நேற்று காலையில் கூடியதும், 'ஐதராபாத் பல்கலை மாணவர் தற்கொலை, ஜவஹர்லால் நேரு பல்கலையில் தேச விரோத கோஷமிட்டதாக மாணவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது குறித்து விவாதிக்க வேண்டும்' என, காங்கிரஸ் தரப்பில் ஒத்திவைப்பு தீர்மானம் அளிக்கப்பட்டது. எதிர்க்கட்சிகளின் கோரிக்கையை ஏற்று, லோக்சபா சபாநாயகர் சுமித்ரா மகாஜன், விவாதம் நடத்த அனுமதி அளித்தார்.

மோடி மவுனம் ஏன்?

காங்கிரஸ் கட்சி கொறடா ஜோதிராதித்யா சிந்தியா:இளைஞர்களின் பேச்சுரிமை, ஜனநாயகத்தை நசுக்க, இந்த அரசு முயற்சி செய்கிறது. ஜனநாயகத்தை காப்பாற்ற

வேண்டிய அரசின் செயல்பாடுகளினால், கடந்த இரண்டு ஆண்டுகளாக, நாடெங்கும் மதசகிப்பின்மை அதிகரித்துள்ளது. எதற்கெடுத்தாலும் டுவிட்டரில் செய்தி அனுப்பும், பிரதமர் மோடி, இந்தவிஷயத்தில் ஏன் மவுனமாக உள்ளார்.

அப்சல் குருவை ஆதரிப்பதா?

பா.ஜ.,வின் அனுராக் தாக்குர்: தன் கொள்ளு தாத்தா நேருவின் பெயரில் உள்ள பல்கலையில், தேச விரோத கோஷமிட்டவர்களுக்கு, ராகுல் ஆதரவு அளித்துள்ளார்; இதுதான் ஜனநாயகமா; தேசப்பற்றா? பார்லிமென்ட் மீது தாக்குதல் நடத்திய அப்சல் குரு நினைவாக கூட்டம் நடத்தியவர்களை ஆதரிக்கிறீர்களா அல்லது பார்லிமென்ட், ஜனநாயகம், தேசப்பற்றை ஆதரிக்கிறீர்களா?

தொடர்ந்து இரு தரப்பும், ஒருவரை ஒருவர் தாக்கி, காரசார வாக்குவாதத்தில் ஈடுபட்டதால், லோக்சபாவில் பரபரப்பு காணப்பட்டது. ஜோதிராதித்யா சிந்தியா பேசும் வரை, சபையில் இருந்து, அவரை உற்சாகப்படுத்திய ராகுல், பா.ஜ.,வைச் சேர்ந்தஅனுராக் பேச எழுந்ததும், வேகமாக வெளியேறினார்.

தேவையில்லாமல் அரசியலாக்குகிறீர்கள்:

'ராஜ்யசபா நேற்று கூடியதும், ஐதராபாத் பல்கலை தலித் மாணவர் தற்கொலை குறித்து விவாதிக்க வேண்டும்' என, மாயாவதி தலைமையில் அவருடைய கட்சி எம்.பி.,க்கள்கோஷமிட்டதால், மூன்று முறை ஒத்தி வைக்கப்பட்டது.மத்திய உணவு இடைவேளைக்குப் பின் சபை கூடியபோது, ''பல்கலைகளில் ஆர்.எஸ்.எஸ்., கொள்கைகள், சிந்தனைகள், திட்டங்களை புகுத்தும் வேலையில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது,'' என, மாயாவதி

Advertisement

குற்றம்சாட்டினார்.இதற்கு பா.ஜ., எம்.பி.,க்கள் எதிர்ப்பு குரல் கொடுத்தனர்.

அதைத் தொடர்ந்து, ஆவேசமாக எழுந்த மனிதவள மேம்பாட்டு அமைச்சர் ஸ்மிருதி இரானி, ''தேவையே இல்லாமல், இப்பிரச்னையை அரசியலாக்குகிறீர்கள்; அதை ஏற்க முடியாது,'' என்றார்.

அதைத் தொடர்ந்து இரு தரப்புக்கும் இடையே கடும் வாக்குவாதம் நடந்ததால், சபையில், கூச்சல், குழப்பம் ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து, சபை நடவடிக்கைகள், நாள் முழுவதும் ஒத்தி வைக்கப்பட்டது.


Advertisement

வாசகர் கருத்து (50)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
மலரின் மகள் - EDINBURGH,யுனைடெட் கிங்டம்
25-பிப்-201622:07:11 IST Report Abuse

மலரின் மகள்பேச்சு சூப்பரு, கைய நீட்டாதே கைய அப்படியே மொத்த விரலையும் மடிச்சுக்கோ. ஒரே குத்து கெலிச்சிட்ட, மாயாவதி அம்பேல், ராகுலுக்கு கிலி, அது யாரு இத்தாலி பக்கம் ஓடுறது?

Rate this:
Balaji - Khaithan,குவைத்
25-பிப்-201621:20:09 IST Report Abuse

Balajiஎதிக்கட்சிகள் JNU மாணவர்கள் நடத்திய போராட்டத்தை நியாயப்படுத்த குரல் கொடுப்பது வருத்தமளிக்கிறது..........

Rate this:
K.Sugavanam - Salem,இந்தியா
25-பிப்-201618:46:35 IST Report Abuse

K.Sugavanamடீ வீ டிபேட்டுல உட்டா கலந்து கட்டுவாரு..

Rate this:
மேலும் 47 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X