60 மாதம் தண்டனை பெற்ற சஞ்சய்தத், 42 மாத சிறைவாசத்துடன் விடுதலை; | Dinamalar

60 மாதம் தண்டனை பெற்ற சஞ்சய்தத், 42 மாத சிறைவாசத்துடன் விடுதலை;

Updated : பிப் 25, 2016 | Added : பிப் 25, 2016 | கருத்துகள் (38)
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
42 மாத, சிறைவாசம், முடித்தார், சஞ்சய்தத் ,

புனே: மும்பை குண்டு வெடிப்பு வழக்கில் 5 ஆண்டு சிறைத்தண்டனை பெற்ற பாலிவுட் நடிகர் சஞ்சய்தத் இன்று ( 25 ம் தேதி ) நன்நடத்தை விதிமுறையில் முன்கூட்டியே ( ஏறக்குறைய 100 நாட்கள் முன்னதாக ) விடுதலை ஆனார்.1993ல் மும்பையில் நடந்த குண்டு வெடிப்பு சம்பவத்தில் 200 க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். இந்த வழக்கில் பயங்கரவாதிகளுக்கு தஞ்சம் கொடுத்ததாகவும், ஆயுதங்கள் பதுக்கி வைக்க உதவியாக இருந்தததாகவும் சஞ்சய்தத் மீது குற்றம் சாட்டப்பட்டது. இதனை விசாரித்த தடா கோர்ட் சஞ்சய்தத்துக்கு 6 ஆண்டு சிறைத்தண்டனை விதித்தது. சுப்ரீம் கோர்ட்டில் மேல் முறையீடு செய்ததில் தண்டனை 5 ஆண்டாக குறைக்கப்பட்டது. இதனையடுத்து புனேயில் உள்ள எரவாடா சிறையில் சஞ்சய்தத் அடைக்கப்பட்டார்.இருப்பினும் பல்வேறு காரணங்களுக்காக அவர் ஓராண்டுக்கும் மேலாக பரோலி்ல் வெளியில் இருந்தார். மொத்தத்தில் 5 ஆண்டு கால சிறைத் தண்டனையில் , 42 மாதங்களே அவர் சிறைவாசம் அனுபவித்து இருக்கிறார்.இவரது நன்னடத்தை காரணமாக அவர் தண்டனை காலம் முடியும் முன்னர் விடுவிக்கப்பட்டார் .இன்று காலை சிறையி்ல் இருந்து வெளியே வந்ததும் சிறை கோட்டை சுவர் மேல் பறந்த தேசியகொடிக்கு சல்யூட் அடித்து மரியாதை செலுத்தினார் . பின்னர் தனது உடைமைகள் கொண்ட ஒரு பையுடன் மற்றும் சிறை துறையில் வழங்கப்பட்ட ஆவணங்களுடன் வெளியே வந்தார். அவரை அவரது மனைவி மன்யத்தா , திரைப்பட இயக்குனர் ராஜ்குமார் ஹிரானி மற்றும் உறவினர்கள் வரவேற்றனர்.
சிறையில் இருந்து வெளியே வந்ததும் நிருபர்கள் சூழ்ந்து கொண்டு கேள்வி கேட்டனர் .ஆனால் அவர் ஒரே வரியில், விடுதலை கிடைப்பது சாதாரண விஷயம் அல்ல, இது எனக்கு எளிதாக கிடைக்கவில்லை என்று கூறியபடி கிளம்பினார் . மேலும் நிருபர்கள் கேள்வி கேட்க முயன்ற போது. எனது மனைவி முழு முயற்சி மற்றும் உதவியால் தான் நான் விடுதலை பெற்று இங்கே நிற்கிறேன். எனக்கு ஆதரவாக இருந்த குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன் என்றார் .சஞ்சய்தத் சகோதரி பிரியாதத் நிருபர்களிடம் கூறுகையில் , சஞ்சய்தத் சிறையில் இருந்த போது எவ்வித புகாருக்கும் ஆளாகாமல் இருந்தார். அவர் எப்போதும் சட்டத்திற்கு கீழ்படிந்து நடந்தார் , அதனால் அவர் முன்கூட்டியே விடுதலை ஆகியுள்ளார் என்றார். புனேயில் கிளம்பும் விமானத்தில் புறப்பட்டு மும்பை செல்கிறார். அங்கு அவரை ரசிகர்கள் வரவேற்க தட, புடல் ஏற்பாடுகள் செய்துள்ளனர் .Advertisement
வாசகர் கருத்து (38)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Cheenu Meenu - cheenai,இந்தியா
26-பிப்-201600:06:21 IST Report Abuse
Cheenu Meenu சிறையில் இருந்து வெளியே வந்ததும் நிருபர்கள் சூழ்ந்து கொண்டு கேள்வி கேட்டனர்.ஆனால் அவர் ஒரே வரியில், விடுதலை கிடைப்பது சாதாரண விஷயம் அல்ல, இது எனக்கு எளிதாக கிடைக்கவில்லை என்று தெரிவித்தார். ஓர் பெட்டி கேசில் மாட்டிகொண்டலோ, கஞ்சா வழக்கில் உள்ளே போனாலோ லட்சகணக்கில் செலவாகும். 6 ஆண்டுகள் தண்டனையை 5 ஆண்டுகள் ஆக்கி அதையும் 42 மாதங்களாக குறைத்து சீக்கிரமே வெளியில் வருவதென்றால் ஒரு படம் எடுக்க ஆகும் செலவு கரைந்திருக்கும்.
Rate this:
Share this comment
Cancel
மலரின் மகள் - EDINBURGH,யுனைடெட் கிங்டம்
25-பிப்-201618:25:36 IST Report Abuse
மலரின் மகள் மீண்டும் ஒரு குமாரசாமி கணக்கு
Rate this:
Share this comment
Cancel
Skumar - chennai,இந்தியா
25-பிப்-201617:14:09 IST Report Abuse
Skumar இந்த ஆளுக்கு இன்னும் 100 நாட்கள் தண்டனை நீடித்தால் , 10 நாட்கள் மட்டும் ஜெயில்ல இருந்துட்டு michaam 90 நாள் பரோலிலே இருந்து இருப்பான்... It Happens only in India
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X