உதயநிதி கவிஞர் அவதாரம் ஜெயலலிதாவை 'வாழ்த்தி' கவிதை - Jayalalitha | Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

Election 2016

உதயநிதி கவிஞர் அவதாரம் ஜெ.,வை 'வாழ்த்தி' கவிதை

Added : பிப் 25, 2016 | கருத்துகள் (90)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
 உதயநிதி கவிஞர் அவதாரம் ஜெ.,வை 'வாழ்த்தி' கவிதை


முதல்வர் ஜெயலலிதாவிற்கு வஞ்ச புகழ்ச்சியில் பிறந்த நாள் கவிதை எழுதி, தன்னை கவிஞராக, உதயநிதி ஸ்டாலின் அறிமுகப்படுத்தி கொண்டுள்ளார்.
தி.மு.க., பொருளாளர் ஸ்டாலின் மகன் உதயநிதி. கடந்த தி.மு.க., ஆட்சியில் திரையுலகில், தயாரிப்பாளராக அவதாரம் எடுத்தார். அதன்பின், படங்களில் கதாநாயகனாகவும் நடித்து வருகிறார்.
அரசியல் நடவடிக்கைகளில், அவர் இதுவரை, பெரிதாக ஆர்வம் காட்டிக் கொண்டது இல்லை. கடந்த, 2011ம் ஆண்டு முதல், உதயநிதி, 'டுவிட்டர்' சமூக வலைதளத்தில் இயங்கி வருகிறார். ஆனாலும், அரசியல் தொடர்பாக அவர் எந்த கருத்தையும், இதுவரை வெளியிட்டதில்லை.
இந்நிலையில், கடந்த, 24ம் தேதி, பிறந்த நாள் கொண்டாடிய, முதல்வர் ஜெயலிதாவை விமர்சிக்கும் வகையில், தனது, 'டுவிட்டர்' பக்கத்தில், உதயநிதி, கவிதை வெளியிட்டுள்ளார்.
அந்த கவிதைக்கு, 'உலகம் காணாத தலைமை; வாழ்த்துவதில் எத்தனை பெருமை' என தலைப்பிட்டுள்ளார்.
தமிழகத்தின் கடன் சுமை, வெள்ள தேசம், அமைச்சர்களிடம் முதல்வர் நடந்து கொள்ளும் விதம் உள்ளிட்டவற்றை, அந்த கவிதை மூலம்,
கடுமையாக, உதயநிதி விமர்சனம்
செய்துள்ளார்.
தி.மு.க., தலைவர் கருணாநிதியை தொடர்ந்து, அவரது குடும்பத்தில், மகள் கனிமொழி கவிஞராக உள்ளார். இந்நிலையில் தி.மு.க.,வில், அடுத்த வாரிசு கவிஞராக, உதயநிதி தன்னை அடையாளப்
படுத்திக் கொண்டுள்ளார்.
அந்த கவிதையை தி.மு.க.,வினருக்கு பரப்பும் நடவடிக்கைகளில், உதயநிதி
ஆதரவாளர்கள் இறங்கியுள்ளனர்.
உதயநிதி, தனது udhay@udhaystalin
டுவிட்டர் பக்கத்தில்
வெளியிட்டுள்ள கவிதை:

● இடிந்து விழுந்தாலும், அணை உடைந்தாலும், இம்மியளவும் துயர்கொள்ளாத இரும்பு இதயமே வாழ்க!
● மக்கள் குடி அழிந்தாலும், நலம் இழந்தாலும்,
நெஞ்சம் நடுங்காத நித்திரை சிற்பமே வாழ்க!
● வந்தாரை வரவேற்பது தமிழர் தம் பண்பாடு
மறந்தாரை மறவாமல் வாழ்த்துகிறோம் அன்போடு!
● உன்னருமை பெருமைகளோ, நுாறு நுாறு
உனக்கு இங்கே ஈடு இணை வேறு யாரு?
● வேதனையில் மக்கள் மனம் வாடுகின்ற போதும்;
வேலையின்றி இளைஞர் எல்லாம் வெந்துருகும் போதும்;
வெள்ளத்தில் மக்கள் இங்கே தத்தளிக்கும் போதும்;
கவலையின்றி நீ சிரிப்பாய், உன் வீரம் யாருக்கு வரும்!
● தமிழ்நாடு கடன் சுமையால் தள்ளாடும் போதும்,
தற்பெருமை பேச்சுக்கள் வேறு எவர்க்கும் வருமா?
பன்னாட்டு நிறுவனங்கள் நமக்கெதற்கு தாயே
கொடநாடு இருக்கிறதே ஓய்வெடுப்பாய் நீயே!
● மக்கள் படும் துன்பத்திலும் திசையெங்கும்
தன் முகத்தை, 'ஸ்டிக்கர்' ஒட்டி, காட்டச் செய்த
மா கருணை உனதல்லவா...
● மந்திரிமார் அனைவரையும் மண்டியிட செய்து விட்டு, உன் சுய மரியாதையை துாக்கி நிறுத்திய, சீரிய கொள்கை தலைவி நீயல்லவா...
பல்லாண்டு பல்லாண்டு வாழ்ந்திடுக நீயே...
● நாளையொரு நல்லாட்சி வருகிறது தாயே
துளியளவும் பயம் வேண்டாம் அமைதி கொள்வாயே
நல்லாட்சி குடையின் கீழ், நலம் காண்பாய் நீயே!
-- நமது சிறப்பு நிருபர் --

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (90)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Tamilselvan - Chennai,இந்தியா
27-பிப்-201605:54:50 IST Report Abuse
Tamilselvan ஊழல் குடும்பத்தின் புதிய குரலாக வரும் உதயநிதியே வீழ்ந்தனர் பலர் லட்ச கணக்கில் பல தமிழர் பாழப்போன பதவியில் ஒட்டிக்கொண்டு இருந்தனரே அப்பனும்,தாத்தாவும் ஏழை மக்களின் வரி பணத்தை லட்சம் கோடி சுருட்டிய பணத்தாசை பிடித்த பிசாசுகளே உழைக்கும் திரைப்பட கலைஞர்களின் குருதியை குடும்பத்துடன் குடிக்கும் கோமான்களே ,நீங்கள் செய்த பிழைகளுக்கு பதில் சொல்லும் காலம் வந்து விட்டது திஹாரின் கதவுகள் திறக்க இருக்கிறது வாழ்த்துக்கள் .
Rate this:
Share this comment
Cancel
sankar - trichy,இந்தியா
27-பிப்-201601:17:53 IST Report Abuse
sankar இந்த கவிதையை உதய நிதி தப்பில்லாமல் பாராமல் சொன்னால் . அந்த பயனுக்கு கஷ்டம் பார்த்து தப்பில்லாமல் வாசித்தால் என் பெயரை மாற்றி கொள்கிறேன். அப்படி வாசிக்கவில்ல என்றால் தமிழ் செல்வன் பேரை மாற்றி கொள்வார் , சாவாலுக்கு டுமீல் செல்வன் ரெடியா
Rate this:
Share this comment
Cancel
Zooying - chennai,இந்தியா
26-பிப்-201615:36:23 IST Report Abuse
Zooying ஏதோ கவிதன்னு சொன்னாங்க, எங்க?
Rate this:
Share this comment
Cancel
periasamy - Doha,கத்தார்
26-பிப்-201615:34:05 IST Report Abuse
periasamy சூப்பர் உதயநிதி சும்மா சொன்னார்கள் கம்பன் வீட்டு கட்டுத்தறியும் கவிபாடும் என்று
Rate this:
Share this comment
Venki - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
27-பிப்-201612:51:19 IST Report Abuse
Venkiகம்பன் வீட்டு தறியும் கவிபாடும் திருடன் வீட்டு நாயும் திருடும்...
Rate this:
Share this comment
Cancel
Endrum Indian - Kolkata,இந்தியா
26-பிப்-201615:32:50 IST Report Abuse
Endrum Indian உதயநிதி எழுதவில்லை இந்த கவிதையை, ஆனால் எழுதியவருக்கு நிச்சயம் பாராட்டுக்கள், மிக நன்றாக யதார்த்தமாக உள்ளது.
Rate this:
Share this comment
Cancel
murumaha - madurai,இந்தியா
26-பிப்-201615:23:11 IST Report Abuse
murumaha உங்கள் குடும்பம் சொத்தின் ஊற்றுகளை கொஞ்சம் கவிதை வடிவில் தர வேண்டும். சினிமா துறை, உள்ளாட்சி துறை, பதிவு துறை(நில அபகரிப்பு), வேலைக்கு ஆட்கள் எடுக்கும் துறை, கனிம வள துறை(கிராநைட் ), விவசாய துறை (கெயில் பைப்), 2ஜி ஊழல், உங்கள் கட்சியினரே உங்கள் கட்சி ஆட்களை கொல்வதை, இலங்கையில் தமிழர்களை கொன்று குவிக்க உதவி செய்ததை, இப்படி பல துறைகளை உங்கள் ஆட்சியில் எப்படி ஆட்டிப்படைத்திற்கள் என்பதையும், உங்கள் ஆட்சியில் உயிருக்கு பயந்து வாழ்ந்ததையும், இப்போது எப்படி வாழ்கிறோம் என்பதையும்..... கொஞ்சம் நடு நிலையாக இருந்து கவிதை எழுதி தர வேண்டும்.
Rate this:
Share this comment
Cancel
இந்தியன் kumar - chennai,இந்தியா
26-பிப்-201614:20:23 IST Report Abuse
இந்தியன் kumar கட்சியில அடுத்த துண்டு போட்டாச்சு ????
Rate this:
Share this comment
Cancel
Kalyanam Siv - Chennai,இந்தியா
26-பிப்-201613:56:45 IST Report Abuse
Kalyanam Siv இலங்கை தமிழர்கள் அழிய காரணம் யார் ? அதற்கு கவிதை உண்டா ? 2 G க்கு கவிதை உண்டா ? பூச்சி மருந்து ஊழலுக்கு கவிதை உண்டா ? உங்கள் குடும்ப ஊழலுக்கு , மாறன் செய்த ஊழலுக்கு , தா கிருட்டிணன் கொலைக்கு , தினகரன் பத்திரிக்கை ஆபிசு எரித்ததற்கும் கொலைக்கும் , அண்ணாநகர் ரமேசு கொலைக்கு ,
Rate this:
Share this comment
Cancel
Bharathi - Melbourne,ஆஸ்திரேலியா
26-பிப்-201613:47:27 IST Report Abuse
Bharathi இவ்வளவு நாள் ஒண்ணும் வாய் திறக்கலை ஏன்னா, பட ரிலீசுக்கு விழுந்திருக்கும் ஆப்பு. அப்படியே தன் குடும்பத்தோட கோடானுகோடி சொத்துக்களை பத்தியும் கவிதை எழுதலாம். இவங்க ஆட்சியில மொத்த சினிமா உலகத்தையும் ரத்தம் உறிஞ்சினத்தை பத்தியும் எழுதலாம்.
Rate this:
Share this comment
Cancel
Kadaparai Mani - chennai,இந்தியா
26-பிப்-201613:44:28 IST Report Abuse
Kadaparai Mani வந்தாரை வரவேற்பது தமிழர் தம் பண்பாடு, அதுதான் உன் குடும்பம் சிங்களவன் சங்ககாராவை உங்கள் குடும்ப IPL அணிக்கு கேப்டன் ஆக போட்டீர்களா
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை