பகவதியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

பகவதியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா

Added : பிப் 28, 2016
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

கரூர்: கரூர் அருகே வடக்குபாளையத்தில் பகவதியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது. கடந்த, 24ம் தேதி காலை விநாயகர் வழிபாடு, பஞ்சகாவ்யம், மகா கணபதி யாகம், நவநாயகர் யாகம், மகாலட்சுமி யாகம், பூர்ணாகுதி ஆகியவை நடந்தது. தொடர்ந்து, பல்வேறு பூஜைகள் செய்யப்பட்டு மாலையில் கோபுர கலசம் வைத்தல், அஷ்ட பந்தன மருந்து சாற்றுதல் ஆகியவை நடந்தது. நேற்று முன்தினம் கபிலர் மலை செல்வகபில சிவாச்சாரியார் தலைமையில் புனிதநீர் கோபுரத்திற்கு கொண்டு செல்லப்பட்டு கலசத்தின் மீது ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் செய்யப்பட்டது. பின், சர்வ சித்தி செல்வ விநாயகர், பகவதியம்மன், மாரியம்மன், கருப்பண்ணசாமிக்கு பால், பன்னீர், இளநீர், சந்தனம், விபூதி, திருமஞ்சனம் உள்ளிட்ட பொருட்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் சுற்றுப்பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X