மனிதநேய ஜனநாயக கட்சி தமிமுன் அன்சாரி துவக்கம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

மனிதநேய ஜனநாயக கட்சி தமிமுன் அன்சாரி துவக்கம்

Added : பிப் 29, 2016
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

சென்னை:மனிதநேய மக்கள் கட்சியில் பிரச்னை ஏற்பட்டு, கட்சியின் பொது செயலர் தமிமுன் அன்சாரியை கட்சியில் இருந்து வெளியேற்றினார், கட்சியின் புதிய தலைவரான ஜவாஹிருல்லா.'கட்சி எங்களுடையது தான்' என, இரண்டு தரப்பும், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தன. இதில், ஜவாஹிருல்லாவுக்கு ஆதரவாக தீர்ப்பு வர, தற்போது, தமிமுன் அன்சாரி, மனிதநேய ஜனநாயகக் கட்சி என்ற புதிய கட்சியை, நேற்று, கும்பகோணத்தில் துவங்கினார்.பின், அவர் அளித்த பேட்டி:கட்சியின் முதல் மாநாடு சென்னையில் விரைவில் நடைபெறும். வரும் சட்டசபைத் தேர்தலில், வலுவான கூட்டணியில் சேர்ந்து போட்டியிடுவோம். சமூக நீதி, நல்லிணக்கம், சமத்துவ ஜனநாயகம், மனிதநேய சேவைகள், சுற்றுப்புற சூழல் ஆகியவற்றை கொள்கைகளாக கொண்டு, கட்சி செயல்பாடுகள் இருக்கும். விரைவில் கட்சியின் மாநில, மாவட்ட நிர்வாகிகள் அறிவிக்கப்படுவர்.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X