நிர்வாண பூஜை நடத்திய சாமியார் அதிரடி கைது| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

நிர்வாண பூஜை நடத்திய சாமியார் அதிரடி கைது

Added : மார் 01, 2016
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

ப.வேலூர்: பொத்தனூரில், 'தான் ஒரு சித்தர்' என கூறிக்கொண்டு நிர்வாண தியானத்தில் ஈடுபட்ட சாமியாரை போலீசார் கைது செய்தனர். ப.வேலூர் அடுத்த, பொத்தனூர் வடக்கு தெருவைச் சேர்ந்தவர் வெங்கடாச்சலம், 50. ப.வேலூரில் கைரேகை, ஜாதகம் பார்த்து வருகிறார். மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் தனியாக வசிக்கிறார். கடந்த சில நாட்களாக அவர் வீட்டில் பக்தி பாடல் பாடுவது போல் அதிக சப்தம் எழுப்பி நிர்வாண நிலையில் குதித்து ஆடுகிறார். மேலும், நிர்வாணமாக தியானம் செய்து கொண்டே வீட்டின் முன் வருகிறார். இதைப் பார்த்த அருகில் உள்ள பெண்கள் அலறியடித்து ஓடுகின்றனர். 'தான் ஒரு சித்தர்' என கூறிக்கொண்டே நிர்வாண பூஜை செய்வதாக அப்பகுதி பெண்கள் ப.வேலூர் போலீசாருக்கு அளித்த புகாரின் பேரில், எஸ்.ஐ., சண்முகம், சாமியாரை கைது செய்தார்.


ஸ்டேஷனில் தியானம்: நிர்வாண சாமியார் வெங்கடாச்சலம் போலீஸ் ஸ்டேஷனில் தியான நிலையில் அமர்ந்து கொண்டார். அப்போது, 'இன்று எனக்கு சந்திராஷ்டமம் ஆனதால் மாட்டிக்கொண்டேன். நான் ஒரு சிவ பக்தர், சித்தர். வரும் தேர்தலில் போட்டியிடும் ஜெயலலிதா, ஸ்டாலின், விஜயகாந்த் மூவருக்குமே சிம்மராசி. இதில் ஜெயலலிதா வெற்றி பெறுவார்' என, கைகளை உயர்த்தி குறி சொன்னார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X