சர்வதேச பெண்கள் தினத்தில் கொடுமை ; இளம் பெண் கற்பழித்து தீ வைப்பு | Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

சர்வதேச பெண்கள் தினத்தில் கொடுமை ; இளம் பெண் கற்பழித்து தீ வைப்பு

Added : மார் 08, 2016 | கருத்துகள் (28)
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
இளம் பெண் கற்பழித்து தீ வைப்பு

புதுடில்லி: 15 வயது இளம்பெண்ணை ஒருவர் கற்பழித்து அவரை தீ வைத்து எரித்து கொல்ல முயற்சி நடந்தது. உயிருக்கு போராடிய நிலையில் அவர் டில்லி ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார். சர்வதேச மகளிர் தினம் கொண்டாடும் இந்நாளில் இந்த சம்பவம் நடந்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
நொய்டாவில் உள்ள ஒரு வீட்டின் மாடியில் இருந்த பெண்ணை ஒருவர் பலவந்தமாக பலாத்காரம் செய்துள்ளார். தொடர்ந்து அவர் மீது தீயை கொளுத்தி போட்டு தப்பி ஓடி விட்டார். அலறல் சப்தம் கேட்டு அவரது பெற்றோர்கள் குழந்தையை டில்லி ஆஸ்பத்திரியில் சேர்த்துள்ளனர்.


இது குறித்து போலீசார் கூறுகையில்; இந்த பெண் 10-ம் வகுப்பு படிக்கும் போது ஒரு இளைஞர் பின்தொடர்ந்துள்ளான். இதனால் இந்த மாணவி படிப்பை நிறுத்தி வீட்டில் இருந்துள்ளார். இந்நிலையில் இந்த இளைஞர் வீட்டுக்குள் நுழைந்து இந்த கொடூர செயலில் ஈடுபட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது . அந்த நபரை கைது செய்துள்ளோம் என தெரிவித்தனர்.

இந்த இளைஞர் ஒரு தலைக்காதல் செய்ததாகவும், தொந்தரவு காரணமாக கடந்த சில வாரங்களுக்கு முன்னர் அவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்திருந்தனர். விடுதலையான பின்னர் அந்த செயலில் ஈடுபட்டுள்ளார் என கூறப்படுகிறது.சர்வதேச பெண்கள் தினம் கொண்டாடும் வேளையில் இந்த சம்பவம் டில்லி மற்றும் புறநகர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (28)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
R Gopinath - Madurai,இந்தியா
09-மார்-201616:22:50 IST Report Abuse
R Gopinath இவன மாதிரி ஆட்களை வடகொரிய அதிபர் மாதிரி தான் கையாள வேண்டும், 10 நாட்கள் 10 வெறி நாயை உணவு கொடுக்காமல் காயப்போட்டு இவன மாதிரி தப்பு செய்தவனை கடித்து கொலை செய்தால் தான் மற்றவன் பயப்படுவான், ஒரு உயிரோட மதிப்பு தெரியாத நாய் செத்தால் ஒன்றும் தப்பு இல்லை...
Rate this:
Share this comment
Cancel
Balaji - Khaithan,குவைத்
09-மார்-201611:39:14 IST Report Abuse
Balaji இதுபோன்ற குற்றங்களை செய்வோரிடம் நமது சட்டம் மென்மையாக நடந்து கொள்வதே இதற்கு காரணம்..... அப்படியே அதிகபட்ச தண்டனை வழங்கப்பட்டாலும் அதுக்கு எதிரா கொடி பிடிச்சுகிட்டு ஒரு கூட்டம் வக்காலத்து வாங்க வந்துடும்..... சட்டங்களை கடுமையாக்காதவரை இது சிறிதும் குறையப்போவதில்லை.....
Rate this:
Share this comment
Cancel
jose spencer - Valliyur,இந்தியா
09-மார்-201610:43:16 IST Report Abuse
jose spencer இது காவல் துறையின் அலட்சியம் கூட.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X