இ.பி.எப். வட்டி வரி வாபஸ் - ஜெட்லி : "என்னால் தான் இது நடந்தது " - ராகுல்| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

இ.பி.எப். வட்டி வரி வாபஸ் - ஜெட்லி : "என்னால் தான் இது நடந்தது " - ராகுல்

Added : மார் 08, 2016 | கருத்துகள் (72)
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
இ.பி.எப்., வட்டி ,வரி, வாபஸ் ; ஜெட்லி , என்னால் தான் இது நடந்தது , ராகுல்

புதுடில்லி: இ.பி.எப். வட்டிக்கு புதிய வரி விதிக்கப்படும் என்ற அறிவிப்பை மத்திய அரசு வாபஸ் பெறுவதாக நிதி அமைச்சர் அருண்ஜெட்லி இன்று பார்லி.,யில் அறிவித்தார். இந்த அறிவிப்பு என்னால் தான் நடந்தது என்று காங்., துணை தலைவர் ராகுல் தெரிவித்துள்ளார்.

கடந்த பிப். 29-ம் தேதி பொது பட்ஜெட்டில் , இ.பி.எப். எனப்படும் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி வட்டிக்கு வரி விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இதற்கு காங்கிரஸ் மற்றும் தே.ஜ. கூட்டணி கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. பிரதமர் நரேந்திர மோடி, நிதி அமைச்சகம் இதனை பரிசீலிக்க வேண்டும் என வலியுறுத்தின.

இதையடுத்து இன்று நடந்த பார்லி. பட்ஜெட் கூட்டத் தொடரில் நிதி அமைச்சர் அருண்ஜெட்லி கூறியதாவது:

இ.பி.எப். வட்டிக்கு வரி விதிப்பிற்கு பல தரப்பிலும் எதிர்ப்பு கிளம்பியுள்ளதால், புதிய வரி விதிப்புமுறை ரத்து செய்ப்படுகிறது. 2016-17 பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்ட அறிவிப்பும் திரும்ப பெறப்படுகிறது. அதற்கு பதிலாக வேறு வழிகளில் நிதி ஆதாரத்தை பெருக்குவது குறித்து ஆலோசிக்கப்படும் என்றார்.


வரி விதிப்பு திட்டத்தை மத்திய அரசு ரத்து செய்வதாக அறிவித்தது குறித்து காங்.துணை தலைவர் ராகுல் கூறுகையில்; மத்திய அரசின் இந்த முடிவு மாத சம்பளத்தாரர்களின் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி . இது குறித்து நான் தொடர்ந்து வலியுறுத்தியதால் என்னால் தான் இது நடந்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (72)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Lion Drsekar - Chennai ,இந்தியா
09-மார்-201620:45:25 IST Report Abuse
Lion Drsekar இந்த நாட்டில் எல்லாமே இந்த அமுல் தாயும் மகனும் செய்யும் சைத்தான் வேலைகளே. வயிறு எரிகிறது, வந்தே மாதரம்
Rate this:
Share this comment
Cancel
Kumar Saranathan Parthasarathy - Chennai,இந்தியா
09-மார்-201618:19:52 IST Report Abuse
Kumar Saranathan Parthasarathy உங்களால தான் போகுற இடமெல்லாம் காங்கிரெஸ் தோல்வி . மம்தா தான் முதல்ல குரல் கொடுத்தாங்க . நீ ஒப்புக்கு சப்பாணியா குரல் கொடுத்துட்டு nonsense என்ன man பேசுற ?
Rate this:
Share this comment
Cancel
Sukumar Talpady - Mangalore ,இந்தியா
09-மார்-201617:30:09 IST Report Abuse
Sukumar Talpady புழுதி படிந்த சாலையில் ரதம் வேகமாக செல்லும் பொழுது ரதத்தில் அமர்ந்திருக்கும் ஈ , எழும் புழுதியைப் பார்த்து தன்னால்தான் இத்தனை புழுதி எழுந்தது என்று நினைக்குமாம் . எல்லோருமே எதிர்த்தார்கள் . கும்பலில் கோவிந்தா போட்டு தன்னால் தான் இந்த வரி வாபஸ் பெறப்பட்டது என்கிறார் . இதை நாமெல்லாம் நம்புவோமாக .
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X