தனித்து போட்டி : விஜயகாந்த் அறிவிப்பு | Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

தனித்து போட்டி : விஜயகாந்த் அறிவிப்பு

Updated : மார் 10, 2016 | Added : மார் 10, 2016 | கருத்துகள் (276)
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
தேர்தல், விஜயகாந்த், தனித்து போட்டி

சென்னை: சட்ட.சபை தேர்தலில் தனித்து போட்டியிட உள்ளதாக தேமுதிக தலைவர் விஜயகாந்த் அறிவித்துள்ளார். கூட்டணிக்காக யாருடனும் பேரம் பேசவில்லை எனவும் விஜயகாந்த் தெரிவித்தார்.
சென்னை ராயப்பேட்டையில் தேமுதிக சார்பில் மகளிர் அணி மாநாடு நடைபெற்றது. கூட்டத்தில் கலந்து கொண்ட விஜயகாந்த், வரும் தேர்தலில் தேமுதிக தனித்து போட்டியிடும் என கூறினார். மேலும் கூட்டணிக்கு அழைத்த அனைத்து கட்சி தலைவர்களுக்கும் நன்றி தெரிவித்து கொளகிறேன். தேமுதிக சார்பில் வேட்பாளர்களை தேர்வு செய்ய ஏழு பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.
கூட்டணி குறித்த எவ்வித குழப்பமும் இலலை, தெளிவாகவே தேமுதிக உள்ளது. கட்சியை நடத்தி செல்வது குறித்த பாடம் கற்பிக்க வேண்டாம் எனவும் பேசினார்.
இந்த அறிவி்பபின் மூலம் தேமுதிக குறித்து நிலவி வந்த சஸ்பென்ஸ் முடிவுக்கு வந்தது. கூட்டணி குறித்த பரபபரப்பும் கொஞ்சம் அடங்கியுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (276)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
sambathkumar - kumbakonam,இந்தியா
12-மார்-201604:14:04 IST Report Abuse
sambathkumar என்னுடைய விருப்பம் மட்டுமல்ல பல பொதுமக்களுடைய பொதுவான தினமலர் வாசகர்களின் விருப்பத்தை கேப்டன் அவர்கள் தெளிவாக வெளி படுத்தி உள்ளார்....... விஜயகாந்தை தேவையற்று வசை பாடிய அவதூறு பேசி கேவலமாக பேசி பெட்டி வாங்குபவர் குடிகாரன் முடிவு எடுக்க தெரியாதவன் என்று இகழ்ந்த வாசகர்களும் தினமலரும் மன்னிப்பு கருத்தை வெளியிடுவார்களா? நான் அடித்து சொல்கிறேன், மக்கள் நல கூட்டணி விஜயகாந்துடன் வந்து இணையும்..இந்த கருத்தை முத்தரசனும் விஜயகாந்தும் வெளிபடுத்தி உள்ளனர்....வாசனை அதிமுக கண்டு கொள்ள இனி வாய்ப்பு இல்லை...எனவே அவருக்கும் வேறு வழி இல்லை... அவர் கேப்டனை தேடி வருவார்...சுப்ரீம் கோர்ட்டின் பிடி இருக்கும்போது கேப்டனின் தைரியத்திற்கு நிச்சயமாக ஒரு வாய்ப்பு வரும்.... அதனை ஒரு கோடி இளைஞ்சர்கள் நிருபிப்பார்கள்.......
Rate this:
Share this comment
Cancel
nagaraj - chennai,இந்தியா
11-மார்-201609:32:56 IST Report Abuse
nagaraj வாழ்த்துக்கள் கேப்டன்... நடுநிலையாளர்களும் , மதுவை ஒழிக்கவேண்டும் என்று எண்ணுகின்றவர்களும் உங்களுக்கு முழுமையான ஆதரவை தருவார்கள்... வெற்றியோ தோல்வியோ ... நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா, நேரம் வரும் காத்திருந்து பாடு ராஜா (எம்.ஜி.ஆர் பாடல் வரிகள் )... நேர்மையான பாதையை தேர்ந்தெடுத்து உள்ளீர்கள்... உங்கள் துணிவுக்கும் நேர்மைக்கும் எனது நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்
Rate this:
Share this comment
Cancel
john - Chennai,இந்தியா
11-மார்-201609:30:00 IST Report Abuse
john கலைஞர் reaction - - - பழம் போச்சே...........
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X