பா.ஜ.,வில் சுப்ரமணிய சுவாமி ஆதரவாளர்களுக்கு 'சீட்' ஒதுக்கீடு?| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

பா.ஜ.,வில் சுப்ரமணிய சுவாமி ஆதரவாளர்களுக்கு 'சீட்' ஒதுக்கீடு?

Added : மார் 22, 2016
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

பா.ஜ.,வில் சுப்ரமணிய சுவாமி ஆதரவாளர்களுக்கு, 10 சீட் ஒதுக்கப்படுவதாக தகவல் வெளியாகி வருகிறது.ஜனதா கட்சியின் அகில இந்திய தலைவர் சுப்ரமணிய சுவாமி, தனது கட்சியை பா.ஜ.,வில் இணைத்து செயல்பட்டு வருகிறார். அவருக்குகென தமிழகம் முழுவதும் ஆதரவாளர்கள் உள்ளனர். இந்த சட்டசபை தேர்தலில் தனது ஆதரவாளர்கள் போட்டியிட சீட் ஒதுக்கித் தரும்படி கட்சி தலைமையிடம் கேட்டுள்ளராம். அதையொட்டி தமிழக ஜனதா தலைவராக இருந்த ஓய்வுப்பெற்ற ஐ.ஏ.எஸ்., அதிகாரி சந்திரலேகா, நேற்று முன்தினம் சென்னையில் உள்ள பா.ஜ., அலுவலகத்திற்கு சென்று கட்சி தலைவர் மற்றும் தேர்தல் பொறுப்பாளர்களிடம், சுப்ரமணிய சுவாமி ஆதரவாளர்கள் பட்டியலைக் கொடுத்துள்ளார். அந்த பட்டியலில், 2 ஜி வழக்கில் வழக்கில் முக்கிய நபராக கருதப்படும் ஆசீர்வாதம் ஆச்சாரின் பெயரும் இருந்துள்ளது. இவர் சுப்ரமணி சுவாமி தலைமையில் சில ஆண்டிற்கு முன்பு பா.ஜ., வில் இணைந்துள்ளார். அவர் தற்போது பா.ஜ., சார்பில் ஸ்ரீரங்கம் தொகுதியில் போட்டியிட விருப்ப மனு கொடுத்துள்ளார். அந்த பட்டியலில் ஆசீர்வாதம் ஆச்சாரி பெயர் இருந்ததால், அவரின் பெயரை நீக்கிவிட்டு மற்றவர்களுக்கு சீட் ஒதுக்க சம்மதம் தெரிவிக்கப்பட்டுள்ளதாக பா.ஜ., நிர்வாகிகளிடையே பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
- நமது நிருபர் -

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X