டில்லியில் குடிநீர் குழாய் வெடித்து சாலையில் திடீர் பெரும்பள்ளம்| Dinamalar

பொது செய்தி

இந்தியா

டில்லியில் குடிநீர் குழாய் வெடித்து சாலையில் திடீர் பெரும்பள்ளம்

Updated : மார் 23, 2016 | Added : மார் 23, 2016 | கருத்துகள் (4)
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
டில்லி சாலை, திடீர் பெரும்பள்ளம்

புதுடில்லி: மத்திய டில்லியில் குடிநீர் குழாய் வெடித்ததால், சாலை நடுவே திடீரென பெரும் பள்ளம் ஏற்பட்டது. இதனால் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.போக்குவரத்து நெரிசல் மிகுதியாக உள்ள ஐடிஓ பகுதியில், பைரோன் மார்கை மதுரா சாலையுடன் இணைக்கும் சாலையில் ஏற்பட்ட இந்த பள்ளத்தால், மத்திய மற்றும் கிழக்கு டில்லி பகுதியில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.


இந்த பகுதியில் சாலையின் கீழ் உள்ள ஒரு குடிநீர் சப்ளை குழாயில் ஏற்பட்ட உடைப்பே இந்த திடீர் பள்ளத்திற்கு காரணம் என்று கூறப்படுகிறது. 5 மீட்டர் ஆழமும் 10 மீட்டர் அகலமுமாக இருந்த இந்த பள்ளத்தை மூடுவதற்கான முயற்சி முதலில் பலன் அளிக்கவில்லை. முதலில் மூடப்பட்ட சிறிது நேரத்திற்குள் அங்கு மீண்டும் பள்ளம் ஏற்பட்டது.


இந்த சம்பவத்தை நேரில் பார்த்த ஒருவர் கூறுகையில், ஒரு எடை மிகுந்த கனரக டாங்கர் இந்த சாலை வழியாக வந்தபோது, சாலையில் விரிசல் ஏற்படத் துவங்கியது. தொடர்ந்து சாலை உள்வாங்க ஆரம்பித்தது. மளமளவென மண் சரியத் தொடங்கி பள்ளம் மிகவும் பெரியதாக மாறியது என்றார்.


தற்போது சாலையை சரி செய்யும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

Advertisement




வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
K.Sugavanam - Salem,இந்தியா
23-மார்-201616:32:41 IST Report Abuse
K.Sugavanam இதுக்கு பேரு subduction .இது போன்ற சம்பவங்கள் உலகில் பல நாடுகளிலும் நடக்கிறது..காரணம் அங்குள்ள மண்ணின் தன்மை தான்.
Rate this:
Share this comment
Cancel
ganapati sb - coimbatore,இந்தியா
23-மார்-201611:40:38 IST Report Abuse
ganapati sb டில்லி போன்ற தேசத்தின் தலைநகரத்தில் அமைக்கப்படும் குழாய் மிநினைப்பு மற்றும் சாலைகள் போன்ற கட்டமைப்புகள் சர்வதேச தரம் வாய்ந்ததாய் இருக்க வேண்டும் சீரமைப்பு நடவடிக்கைகளும் மின்னல் வேகத்தில் நடக்க வேண்டும் மத்திய மாநில அரசுகள் இதில் கருத்தாய் இருக்க வேண்டும்
Rate this:
Share this comment
Cancel
முருகவேல் சண்முகம்.. - சென்னை,இந்தியா
23-மார்-201610:32:38 IST Report Abuse
முருகவேல் சண்முகம்.. ஒரு பள்ளத்தை இறங்கி மூட முடியல எண்ணத்தை இந்த கேஜரிவால் ஆட்சி செய்யும் திறமை, இந்த பள்ளம் வராமல் ஆட்சி செய்யனும், இல்லை பள்ளம் வந்தால், அடுத்த நிமிடமே ஓடிவந்து, மண்ணை அள்ளி போட்டு மூடனும் அதுதான் ஒரு முதலமைச்சரின் வேலை, அதற்க்கு லாயக்கில்லை என்றால், முதல்வர் பதவியை விடு இறங்கி ஓடனும், அரசியல் துறவறம் மேற்கொள்ள வேண்டும், ஒன்றுக்கும் லாயக்கில்லாமல், ஆட்சியில் உட்கார்ந்துகொண்டு எங்களையும் ஆளவிடாமல் என்ன வேலை இது. சுத்த வேஸ்ட்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X