மீண்டும் ஒரு பதன்கோட் தாக்குதலா? அதிர்ச்சியில் பாதுகாப்புப் படை| Dinamalar

பொது செய்தி

இந்தியா

மீண்டும் ஒரு பதன்கோட் தாக்குதலா? அதிர்ச்சியில் பாதுகாப்புப் படை

Added : மார் 23, 2016 | கருத்துகள் (4)
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
pathankot, பதன்கோட்

ஜம்மு : பதன்கோட் விமானப்படை தளத்தில் தாக்குதல் நடத்துவதற்கு முன் துப்பாக்கி முனையில் போலீஸ் அதிகாரியின் காரை பாக்., பயங்கரவாதிகள் கடத்திச் சென்றதை போல், காஷ்மீரின் சுஜன்பூர் பகுதியில் அடையாளம் தெரியாத 3 இளைஞர்கள் துப்பாக்கி முனையில் கார் ஒன்றை கடத்திச் சென்றுள்ளனர். இதனால் பதன்கோட் தாக்குதல் போன்று மற்றொரு தாக்குதல் நடத்த பயங்கரவாதிகள் திட்டமிட்டிருக்கலாம் என பாதுகாப்பு படையினர் சந்தேகித்துள்ளனர்.
ஜனவரி 2ம் தேதி பதன்கோட் விமானப்படை தளத்திற்குள் நுழைந்த, பாகிஸ்தானைச் சேர்ந்த ஜெய்சி இ முகம்மது இயக்கத்தைச் சேர்ந்த 6 பயங்கரவாதிகள், சரமாரியாக சுட்டனர். இதில் 7 பாதுகாப்புப் படையினர் கொல்லப்பட்டனர். பாதுகாப்புப் படையினர் நடத்திய தாக்குதலில் 6 பயங்கரவாதிகளும் கொல்லப்பட்டனர். விமானப்படை தளத்திற்குள் நுழைவதற்கு முன் பஞ்சாப் போலீஸ் எஸ்பி சல்விந்தர் சிங்கின் காரை பயங்கரவாதிகள் கடத்திச் சென்றுள்ளனர். இந்த காரைப் பயன்படுத்தியே அவர்கள் விமானப்படை தளத்திற்குள் நுழைந்துள்ளனர். இதே போன்று தற்போது கார் ஒன்று கடத்தப்பட்டுள்ளதால், பதன்கோட் தாக்குதல் போன்று மற்றொரு தாக்குதலை நடத்த பயங்கரவாதிகள் திட்டமிட்டுள்ளனரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
இந்த கார் கடத்தல் சம்பவம் குறித்து சுஜபூர் பகுதி எஸ்.எஸ்.பி., ஆர்.கே.பக்ஷி கூறுகையில், 3 இளைஞர்கள் காரை துப்பாக்கி முனையில் கடத்திச் சென்றுள்ளனர். சுஜன்பூர் நெடுஞ்சாலை அருகே இந்த கார் கடத்தல் நடந்துள்ளது. துப்பாக்கி ஏந்திய 3 இளைஞர்களில் 2 பேர் சீக்கியர்கள் என தகவல் கிடைத்துள்ளது. இதனால் எல்லையில் தீவிர வாகன சோதனை நடத்தப்பட்டு வருகிறது என்றார். காஷ்மீர் எல்லையிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
visweswaran a. subramanyam - Edmonton,கனடா
24-மார்-201604:38:48 IST Report Abuse
visweswaran a. subramanyam செய்திகள் தருவதே செய்தித் தாள். அனுமானங்களைத் தர வேண்டிய வேலை இங்கு இருக்கக் கூடாது.
Rate this:
Share this comment
Cancel
Selvaraj Thiroomal - Chennai,இந்தியா
23-மார்-201616:38:55 IST Report Abuse
Selvaraj Thiroomal அனைவரும் ராஜ்நாத்தின் ட்விட்டரை மட்டும் பார்க்கவும். அவர்கள் தங்கள் நாட்டிற்கே சென்றுவிட்டார்கள் என்று யாருக்கும் தெரியாத தகவல்களை பதிவிடுவார்...
Rate this:
Share this comment
Cancel
K.Sugavanam - Salem,இந்தியா
23-மார்-201615:17:59 IST Report Abuse
K.Sugavanam விழிப்புடன் இருக்கவேண்டிய தருணம்...மெத்தனம் கூடாது..
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X