"சிடு சிடு' அதிகாரிகள் நோயாளிகள் வேதனை| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

"சிடு சிடு' அதிகாரிகள் நோயாளிகள் வேதனை

Added : மார் 30, 2016
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

திருப்பூர்: மருத்துவ காப்பீடு அட்டை கேட்டு வருபவர்களை, அதிகாரிகள் காக்க வைத்து, கடிந்து கொள்வதாக, குற்றச்சாட்டு எழுந்துள்ளது.திருப்பூர் பழைய பஸ் ஸ்டாண்ட் எதிரே உள்ள, அரசு மருத்துவமனை புறநோயாளிகள் பிரிவில், மருத்துவ காப்பீடு திட்ட அட்டை வழங்கும் சிறப்பு மையம் செயல்படுகிறது; காப்பீடு அட்டைக்காக, பலரும் வந்து செல்கின்றனர்.உறவினர்களை அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கும்போது, காப்பீடு அட்டை வேண்டி பலரும், அவசரகதியில் விண்ணப்பிக்கின்றனர். ரேஷன் கார்டு இல்லையெனில், வி.ஏ.ஓ., அலுவலகத்துக்கு சென்று ஒப்புதல் சான்று வாங்கி வரும்படி கூறுகின்றனர். ஏற்கனவே விண்ணப்பித்து காத்திருப்பவர்கள் வரிசையில் காத்திருக்கும்போது, அவசரகதியில் வருபவர்கள் பதறுவதால் குழப்பம் ஏற்படுகிறது.நோயாளியின் உடல் நிலை, அவரது உறவினர், குடும்பத்தினரின் மனநிலையை புரிந்து கொள்ளாமல், காப்பீடு அட்டை வழங்கும் பணியில் உள்ள அலுவலர்கள், கடிந்து கொள்கின்றனர்; காக்க வைக்கின்றனர். இதனால், மேலும் மன வேதனைக்கு உள்ளாகின்றனர்.பொதுமக்கள் கூறுகையில், "காப்பீடு அட்டை பெறாதவர்கள், உயிர்காக்கும் சிகிச்சைக்காக ஒருவரை அனுமதித்து விட்டு, உதவிக்காக வருகின்றனர். அவர்களுக்கு தேவையான உதவியை உடனே வழங்க வேண்டிய அதிகாரிகள், எரிந்து விழுகின்றனர். உடனுக்குடன் காப்பீடு அட்டை வழங்க, தனி அதிகாரி நியமிக்க வேண்டும்' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X