தமிழகத்தில் இதுவரை ரூ.21 கோடி பறிமுதல் Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
தமிழகத்தில் இதுவரை
ரூ.21 கோடி பறிமுதல்

சென்னை :தமிழகம் முழுவதும், உரிய ஆவணங்கள் இல்லாமல், எடுத்து செல்லப்பட்ட, 21.86 கோடி ரூபாய் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

இதுவரை ரூ.21 கோடி பறிமுதல்

தேர்தலில் பணப் புழக்கத்தை தடுக்க, பறக்கும் படையினர் மற்றும் நிலை கண்காணிப்புக் குழுவினர், மாநிலம் முழுவதும், வாகன சோதனை நடத்தி வருகின்றனர். பறக்கும் படையினர், 9ம் தேதி நடத்திய சோதனையில், கன்னியாகுமரி மாவட்டத்தில், 2.79 லட்சம்; நாமக்கல் மாவட்டத்தில், 9.71 லட்சம்;

நீலகிரியில், 1.87 லட்சம்; புதுக்கோட்டை மாவட்டத்தில், 1.20 லட்சம்; துாத்துக்குடி மாவட்டத்தில், 3.25 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது. அத்துடன், 1.55 லட்சம் ரூபாய் மதிப்புள்ள, பிற மாநில லாட்டரிசீட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. நிலை கண்காணிப்புக் குழு சோதனையில், மதுரையில், 2.95 லட்சம்; கன்னியாகுமரியில், 1.85 லட்சம்; வேலுாரில், 1.34 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது. இதுவரை மொத்தம், 21.86 கோடி ரூபாய் ரொக்கம் பறிமுதல்
செய்யப்பட்டுள்ளது. இதில், 16.20 கோடி ரூபாய், உரியவர்களிடம் திரும்ப ஒப்படைக்கப்பட்டுள்ளது.

வெள்ளி கொலுசு, மெட்டி பறிமுதல்

சேலம் வடக்குதொகுதியில், பறக்கும் படையினர், வாகன தணிக்கை செய்தனர். செவ்வாய்பேட்டையில் இருந்து கலெக்டர் அலுவலகம் நோக்கி வந்த காரை சோதனையிட்ட போது, ஐந்து பாக்கெட்டுகளில் வெள்ளி கொலுசு, மெட்டி ஆகியவை, 12.22 கிலோ எடையில் இருந்தது.
அதன் மதிப்பு, மூன்று லட்சம் ரூபாய்.

Advertisement

அதற்குரிய ஆவணங்கள் அவர்களிடம் இல்லை. விசாரணையில், செவ்வாய்பேட்டையைச் சேர்ந்த தந்தையும், மகனும், வெள்ளி கொலுசு உற்பத்தி செய்து, அவற்றை காரில் எடுத்து சென்று, கோவையில் உள்ள நகைக் கடைகளில் விற்பனை செய்வது தெரியவந்தது. ஆவணங்களை காண்பித்து அவற்றை வாங்கி செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டது.



Advertisement

வாசகர் கருத்து (9)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
13-ஏப்-201600:41:57 IST Report Abuse

தமிழ்வேல் நல்லது, ஆனால்... இதுபோல குறைந்தது 100 பங்கு பணத்தை பிடிக்காமல் விட்டு விட்டீர்கள்.

Rate this:
Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்
12-ஏப்-201610:36:39 IST Report Abuse

Kasimani Baskaranஇது முதலில் பிடித்தது... கஜானாவில் சேர்த்தது அல்ல... பலரிடம் திரும்ப கொடுத்து விட்டார்கள்... உண்மையில் அல்லல்பட்டது வணிகர்களும் அவசரமாக பணம் எடுத்துச் சென்றவர்களும் தான்...

Rate this:
K.Sugavanam - Salem,இந்தியா
12-ஏப்-201609:18:31 IST Report Abuse

K.Sugavanamஇதில் எத்தனை ரூபாய் அரசியல்வாதிகளிடம் இருந்து பறிமுதல் செய்யப் பட்டது?

Rate this:
மேலும் 6 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X