பணக்காரர்கள் ஏய்த்த தொகை எவ்வளவு?பகிரங்கப்படுத்த சொல்கிறது சுப்ரீம் கோர்ட் Dinamalar
பதிவு செய்த நாள் :
பணக்காரர்கள் ஏய்த்த தொகை எவ்வளவு?
பகிரங்கப்படுத்த சொல்கிறது சுப்ரீம் கோர்ட்

புதுடில்லி:'வங்கிகளில், பணக்காரர்கள், கடனாகப் பெற்ற மொத்த தொகை எவ்வளவு என்பதை வெளிப்படையாக பகிரங்கப்படுத்த வேண்டும்' என, ரிசர்வ் வங்கிக்கு, சுப்ரீம் கோர்ட் அறிவுறுத்தியுள்ளது.

 பணக்காரர்கள் .ஏய்த்த. தொகை எவ்வளவு?

வங்கிகளில், 500 கோடி ரூபாய்க்கு மேல் கடன் பெற்று, ஏய்த்தவர்களின் பெயர்கள் மற்றும் கடன் தொகைகளின் விவரங்களை வெளியிடக் கோரி, பொதுநல வழக்கு மையம் என்ற அமைப்பின் சார்பில், சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.
பட்டியல்
இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி, டி.எஸ்.தாக்கூர், நீதிபதி, ஆர்.பானுமதி அடங்கிய அமர்வு, 'ரூபாய், 500 கோடிக்கு மேல் கடன் பெற்று, திருப்பிச் செலுத்தாமல் ஏய்த்தவர்கள், நிறுவனங்களின் பட்டியலை தாக்கல் செய்ய வேண்டும்' என, ரிசர்வ் வங்கிக்கு உத்தரவிட்டது.
இந்த உத்தரவின்படி, ரிசர்வ் வங்கியும், 'சீல்' வைக்கப்பட்ட கவரில், இந்த விவரங்களை அளித்தது. அதேசமயம், 'வங்கிகளில் கடன் பெற்று ஏய்த்தவர்களின் பட்டியலை வெளியிடக் கூடாது' என, ரிசர்வ் வங்கி தரப்பில் தெரிவிக்கப்பட்டது.


நேற்று, இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்த போது, 'வங்கிகளில்கடன் பெற்று, ஏய்த்தவர்களின் பெயர் பட்டியலை ரகசியமாக வைத்துக் கொள்ளலாம். ஆனால், அவர்கள் பெற்ற மொத்த கடன் தொகையை, வெளிப்படையாகபகிரங்கப்படுத்த வேண்டும்' என, நீதிபதிகள் தெரிவித்தனர்.

பொருளாதாரம்


இதற்கு, கடும் ஆட்சேபம் தெரிவித்த ரிசர்வ் வங்கி தரப்பு வழக்கறிஞர், 'நம்பிக்கையின் அடிப்படையில், பெறப்பட்ட இந்த தகவல்களை வெளியிடுவது, நாட்டின் பொருளாதாரத்தை பாதிக்கும். வர்த்தகம் மற்றும் முதலீட்டுத் துறையில் நம்பகத்தன்மையை குறைத்து விடும்' என்றார்.
பின், நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:நிலுவை கடன் தொகை மிக அதிகமானது. இந்த தொகையை வசூலிக்க என்ன நடவடிக்கை எடுத்துள்ளீர்கள்? வாராக்கடன்களின் தற்போதைய நிலை என்ன? ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் அளவுக்கு கடன் பெற்று, தங்கள் வர்த்தக சாம்ராஜ்ஜியத்தை விரிவுபடுத்துகின்றனர்.
பின், தங்களை திவாலானவர் என அறிவித்து விட்டு, வேறுஆதாரங்களில் இருந்து கூடுதல் கடன்களைப் பெறுகின்றனர். அதேசமயம், சொற்ப தொகையை கடனாக வாங்கி, அதை திருப்பிச் செலுத்த முடியாமல், விவசாயிகள் தற்கொலை செய்து கொள்கின்றனர்.
ரகசிய காப்பு
எனவே, 500 கோடி ரூபாய்க்கு அதிகமாக கடன் வாங்கியவர்களின் மொத்த கடன் தொகையை பகிரங்கப்படுத்துவதற்கு, பணக்கார

Advertisement

வாடிக்கையாளர்களுக்கும், வங்கிகளுக்கும் இடையில் உள்ள ரகசிய காப்பு தடையாக இருக்குமா என விரிவாக விசாரிக்க வேண்டியுள்ளது. இதுசம்பந்தமாக, இந்திய வங்கிகள் சங்கமும், மத்திய நிதி அமைச்சகமும் பதிலளிக்க வேண்டும்.
இவ்வாறு உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கின் விசாரணையை, ஏப்., 26க்கு தள்ளிவைத்தனர்.

ரூ.1.14 லட்சம் கோடி வாராக்கடன் தள்ளுபடி


வங்கிகளில் கடன் பெற்று திருப்பிச் செலுத்தாமல் உள்ள தொகை, வாராக்கடன் எனப்படுகிறது. 2013 - 2015 நிதியாண்டுகளில், 29 பொதுத்துறை வங்கிகள், 1.14 லட்சம் கோடி ரூபாய் வாராக்கடன்களை தள்ளுபடி செய்துள்ளன. 2004 - 2015 காலத்தில், 2.11 லட்சம் கோடி ரூபாய் வாராக்கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன.


Advertisement

வாசகர் கருத்து (30)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
LEMINAR - Consultancy,இந்தியா
13-ஏப்-201616:45:04 IST Report Abuse

LEMINARபொருளாதார வளர்ச்சி என்பதெல்லாம் கட்டுக்கதை என்பதா?

Rate this:
இந்தியன் kumar - chennai,இந்தியா
13-ஏப்-201616:41:08 IST Report Abuse

இந்தியன் kumarபணம் இருப்பவர்களிடமே பணம் மேலும் மேலும் குவிகிறது. ஏழை என்றும் ஏழையாகவே இருக்கிறான். இதில் மாற்றம் ஏற்பட புரட்சி தேவை.

Rate this:
krishnamoorthy - chennai,இந்தியா
13-ஏப்-201612:55:06 IST Report Abuse

krishnamoorthyஅதாவது எவ்வளவுக்கு எவ்வளவு மோசடி செய்பவரின் நிலை உயர்ந்ததோ அந்த அளவுக்கு அவருக்கு கடன் தரப்படும், அது வாராக்கடனாக அறிவிக்கப்பட்டு தப்பிக்கவும் வழி செய்யப்படும். ஆனால் அப்பாவி சாதாரண மனிதன். அட அவன் இருந்தா ஈ-போனால் என்ன. எனவே ஜப்தி நடவடிக்க ந்த சாதாரன மனிதர்கள் பெரும்பாலும் பின்தங்கிய,,வகுப்பினர்.மோசடி செய்பாவர்கள் 70 % மூன்னேறிய, நல்ல படித்த வகுப்பினர். இது சொல்லும் நீதி?.ஏழை சொல் அம்பலம் ஏறாது.சுப்ரீம் கோர்ட் கேட்கும் இந்த கேள்விக்கு விடை கிட்டத்தட்ட சுமார் 30 லட்சம் கோடி. அதாவது நமது அரசுடமையாக்கப்பட்ட அத்துனை வங்கிகளும் திவாலாகவேண்டியதுதான். மக்கள் வெஉண்டெழ்ந்து அதிகாரிகள்- அர்ச்யல்வாதிகளின் வீடுகளை எரித்துசாம்பலாக்கிவிஉவர். அதனால்தான் ர்ரிசர்வ் வங்கி ஆடு திருடீஇய கள்ளன் போல் விழிக்கிறது.

Rate this:
மேலும் 27 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X