குட்டிக்கதை சொல்லி விஜயகாந்த் பிரசாரம் Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
குட்டிக்கதை சொல்லி
விஜயகாந்த் பிரசாரம்

வேலுார்;வேலுார் மாவட்டம், திருப்பத்துாரில் தே.மு.தி.க., பிரசார பொதுக்கூட்டம், நேற்று முன்தினம் இரவு நடந்தது. அதில், தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் பேசியதாவது:

குட்டிக்கதை சொல்லி விஜயகாந்த் பிரசாரம்

ஒரு குட்டிக்கதை சொல்கிறேன். ஒரு குரு, தனது சீடர்கள் 50 பேரிடம், மாம்பழங்களை கொடுத்து, அதை மறைவான இடத்தில், சாப்பிடுமாறு சொல்கிறார். அவர்களில், ஒரு சீடன் மட்டும் திரும்பி வந்து, குருவிடம் நின்றான்.அவனிடம்,

'உனக்கு மறைவான இடம் கிடைக்கவில்லையா' என்று குரு கேட்டார். அதற்கு, 'எல்லாவற்றையும் மேலே இருப்பவன் பார்த்துக் கொண்டிருக்கிறான்' என்று பதில் சொன்னான் சீடன்.அதைபோலதான், இவர்கள் செய்யும் ஊழல் எல்லாவற்றையும், மேலே இருப்பவன் பார்த்துக் கொண்டிருக்கிறான்.
லோக் ஆயுக்தா கொண்டு வருவோம் என்று ஸ்டாலின் கூறுகிறார். அவர், ஏன் அப்படி சொல்லுகிறார் என்று, உங்களுக்கு தெரியுமா; ஊழல் பெருச்சாளிகள் எங்கிருக்கிறார்கள் என்பது, அவருக்குதான் நன்றாக தெரியும்.ஊழல் அத்தியாயத்தை தி.மு.க., தொடங்கியது;அ.தி.மு.க., வளர்த்தெடுத்தது. இவர்களின் ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.
பிரசாரத்துக்கு, ஹெலிகாப்டரில் வந்து செல்கிறார் ஜெயலலிதா. அவர் இருக்கும் மேடை முழுவதும், ஏர்கூலர் வசதி செய்யப்பட்டு இருக்கிறது. ஆனால்,

Advertisement

மக்கள் வெயிலில் உட்கார்ந்து இருக்கின்றனர். மேலும், தமிழகத்தை தலை நிமிரச் செய்வேன் என்கிறார்.
முதலில், உங்க வேட்பாளர்களை யும், கட்சிக்காரர்களையும் நிமிர்ந்து உட்காரச் சொல்லுங்கள். அப்புறம், தமிழகத்தை நிமிரச் செய்யலாம்.இவ்வாறு விஜயகாந்த் பேசினார்.

Advertisement

வாசகர் கருத்து (29)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Mayilkumar - cape town,தென் ஆப்ரிக்கா
18-ஏப்-201619:03:45 IST Report Abuse

Mayilkumarஇவர் பேசும் தமிழுக்கு ஒரு தமிழ் மொழி பெயர்ப்பாளர் அவசியம். நல்லவர் என்பதைவிட திறமை அவசியம். இவர் பேசுவது நமக்கே புரியவில்லையென்றால். ஒருவேளை வெற்றி பெற்று அகில இந்திய தலைவர்கள் மற்றும் தொழிலதிபர்களிடம் எப்படி உரையாடுவார். தலையை சுற்றுது

Rate this:
18-ஏப்-201617:55:29 IST Report Abuse

msmanikandan41@gmail.comதமிழகத்திற்கு ஒரு முறையாவது மாற்றத்தை தருவோம் நண்பர்களே

Rate this:
VSK - CARY,யூ.எஸ்.ஏ
18-ஏப்-201617:52:52 IST Report Abuse

VSKஇந்த முரசொலி 'அந்த முரசொலியை அழுந்தச் செய்யும் நாள் விரைவில் வருகிறது

Rate this:
மேலும் 26 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X