இந்தியா - சீனா நட்புறவை வழிநடத்தும் பொருளாதாரம்: அருண் ஜெட்லி| Dinamalar

இந்தியா - சீனா நட்புறவை வழிநடத்தும் பொருளாதாரம்: அருண் ஜெட்லி

Added : ஏப் 20, 2016 | கருத்துகள் (7)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
இந்தியா - சீனா நட்புறவை வழிநடத்தும் பொருளாதாரம்: அருண் ஜெட்லி

நியூயார்க் : ''இந்தியா - சீனா நாடுகள் இடையிலான நல்லுறவை, பொருளாதாரம் வழிநடத்திச் செல்கிறது,'' என, நிதியமைச்சர் அருண் ஜெட்லி கூறியுள்ளார்.
அமெரிக்காவின், நியூயார்க் நகரில், ஆசியா சமூக கூட்டத்தில், நிதியமைச்சர் அருண் ஜெட்லி உரையாற்றினார். அப்போது கேட்கப்பட்ட கேள்விகளுக்கு, அருண் ஜெட்லி அளித்த பதில் விவரம்: இந்தியா - சீனா நாடுகள் இடையிலான, பொருளாதார நல்லுறவு, சிறப்பான வகையில் முன்னேற்றம் அடைந்து வருகிறது. இரு நாடுகளின் நட்புறவை, பொருளாதாரமே வழிநடத்திச் செல்கிறது. இரு நாடுகளிலும், முதலீடுகள் தொடர்ச்சியாக, அதிகளவில் குவிந்து வருகின்றன. வர்த்தக ரீதியிலான பிரச்னைகள், உடனுக்குடன் தீர்க்கப்பட்டு வருகின்றன.
சீனாவில், இந்திய நிறுவனங்கள், தொழிற்சாலைகளை நிறுவி வருகின்றன. அதேபோன்று, சீன முதலீடுகள், பெரியளவில், இந்தியாவில் குவிக்கப்பட்டு வருகின்றன. இந்தியாவிலும், சீனாவிலும், அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள், விமான சேவையை சிறப்பாக வழங்கி வருகின்றன. இவர்களில் எவரும், இந்தியா - சீனா நாடுகளில், விமான சேவை விரிவாக்கத்தை ஏற்படுத்தலாம்.
இந்திய பொருளாதாரம் பெரியதாக இருப்பதால், பிற நாடுகளுடன் வர்த்தகம் செய்வதில், நம்பிக்கை அதிகரித்துள்ளது. 1990ல் இருந்ததை ஒப்பிடுகையில், 2016ல், இந்திய பொருளாதாரம் அதிக வித்தியாசம் கொண்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
raja - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
20-ஏப்-201619:01:39 IST Report Abuse
raja ஜெட்லி மாதிரி ஒரு அறிவிலி உலகத்துல இல்லை
Rate this:
Share this comment
Cancel
மலரின் மகள் - EDINBURGH,யுனைடெட் கிங்டம்
20-ஏப்-201616:08:45 IST Report Abuse
மலரின் மகள் நாம் அவர்களுக்கு அதிகம் கொடுத்து குறைவாக பெறுகிறோம். அவர்களின் குப்பை பொருட்களை கூட அதிக அளவில் வாங்கி நம்முடைய அறிவை அவர்களுக்கு ஏற்றுமதி செய்து குறைவான பணம் பெறுகிறோம். அவர்களுக்கே லாபம். இப்பை இருக்க அவர்கள் நம்முடைய எதிரிகளுக்கு சப்போர்ட் செய்கிறார்கள். நம்மை ஐ நா வில் பெரியளவில் பங்குபெறாமல் தடுக்கிறார்கள். சீனாவின் முதலீடு இங்கு வருவதை தவிர்த்து, அமெரிக்கர்களின் சீன முதலீட்டை இங்கு கொண்டு வரும்படி முயற்சிக்கணும். அமெரிக்க சீன முதலீட்டை இங்கு திருப்பினால் அவர்களுக்கும் பாடும் நமக்கும் லாபம்.
Rate this:
Share this comment
Cancel
abdul rahman - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
20-ஏப்-201614:44:08 IST Report Abuse
abdul rahman நல்லா பண்றீங்கப்பா .. இதே நாளில் வந்த வேறொரு செய்தியை பாருங்கள் ........... மாஸ்கோ: பாகிஸ்தான் பயங்கரவாதி மசூத் அசாரை, சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்கும் முயற்சிக்கு, சீனா தடையாக இருப்பதற்கு, ரஷ்யா சென்றுள்ள வெளியுறவு அமைச்சர் சுஷ்மா சுவராஜ், நேரில் கண்டனம் தெரிவித்தார்.ரஷ்யா, சீனா, இந்தியா வெளியுறவு அமைச்சர்கள் மாநாடு, ரஷ்யாவின் மாஸ்கோவில் நடக்கிறது. இதற்காக மாஸ்கோ சென்றுள்ள வெளியுறவு அமைச்சர் சுஷ்மா சுவராஜ், சீன வெளியுறவு அமைச்சர் வாங்க் யீயை, நேற்று சந்தித்து பேசினார்.இரு தரப்பு உறவுகள் குறித்து இந்த சந்திப்பின்போது விவாதிக்கப்பட்டது.பாகிஸ்தானில் இருந்து செயல்படும் லஷ்கர் - இ- தொய்பா அமைப்பின் தலைவரும், பதன்கோட் தாக்குதலுக்கு மூளையாகக் கருதப்படுபவனுமான மசூத் அசாரை, சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்க, இந்தியா முயற்சி மேற்கொண்டுள்ளது. ஐ.நா., பாதுகாப்பு கவுன்சிலில் உள்ள அமைப்பில், இதற்கான தீர்மானத்தை இந்தியா கொண்டு வந்தது. ஆனால், பாகிஸ்தானுக்கு ஆதரவாக, இந்தத் தீர்மானத்துக்கு எதிராக சீனா ஓட்டளித்தது. இதற்கு இந்தியா கடுமையாக கண்டனம் தெரிவித்திருந்தது.இந்த நிலையில், சீன வெளியுறவு அமைச்சருடனான சந்திப்பின்போது, இந்தப் பிரச்னையை சுஷ்மா எழுப்பினார். இந்தியாவின் கடும் அதிருப்தியை, அப்போது அவர் தெரிவித்தார்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X