தேர்தலுக்கு முன் ஜெயலலிதா சொத்துகுவிப்பு வழக்கில் தீர்ப்பு ? - Jayalalitha | Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

தேர்தலுக்கு முன் ஜெ., சொத்துகுவிப்பு வழக்கில் தீர்ப்பு ?

Updated : ஏப் 20, 2016 | Added : ஏப் 20, 2016 | கருத்துகள் (220)
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
admk, jayalalitha, da case, election, அதிமுக, ஜெயலலிதா,சொத்துகுவிப்பு வழக்கு, தேர்தல்

சென்னை : தமிழக சட்டசபை தேர்தலுக்கு முன் ஜெயலலிதா மீதான சொத்துகுவிப்பு மேல்முறையீட்டு வழக்கில் சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு வழங்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இது மே 16 ம் தேதி நடக்கும் தேர்தலின் போது அதிமுக.,விற்கு மிகப் பெரிய நெருக்கடியை கொடுக்கும் என கூறப்படுகிறது.
சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து ஜெயலலிதாவை கர்நாடக ஐகோர்ட் விடுதலை செய்ததை எதிர்த்து, சுப்ரீம் கோர்ட்டில் கர்நாடக அரசு மேல்முறையீடு செய்தது. இவ்வழக்கில் முதலில் கர்நாடக தரப்பு வாதம் நடைபெற்றது. ஆச்சாரியா, தாவே போன்ற மூத்த வழக்கறிஞர்கள் கர்நாடக தரப்பு வாதத்தை முன் வைத்தனர். இதையடுத்து ஜெயலலிதா தரப்பில் நாகேஷ்வரராவ் வாதம் செய்தார். ஜெயலலிதா தரப்பு வாதம் நிறைவடைந்த நிலையில், நேற்று சசிகலா, சுதாகரன் மற்றும் இளவரசி ஆகியோர் சார்பில் சேகர் நாப்தே தனது வாதத்தை முன்வைத்தார். அப்போது, அரசு தரப்பு கூறியதை போல, சசிகலா, ஜெயலலிதாவின் அதிகார மையமாக இருந்தது கிடையாது. சசிகலா யாருடைய பினாமியாகவும் செயல்படவில்லை. ஜெயலலிதா-சசிகலா இடையே பணப்பரிமாற்றம் நடைபெற்றதற்கு ஆதாரம் இல்லை என்று ஐகோர்ட் தெளிவாக கூறிவிட்டது. ஜெயலலிதாவும், சசிகலாவும் ஒரே வீட்டில் வசித்தார்கள் என்பதற்காக சொத்து குவித்தார்கள் என்று கூற முடியாது என வாதிட்டார்.
ஏப்ரல் 21 (நாளை) இவ்வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதால், அன்றைய தினம் இவர் தனது வாதத்தை முடிக்க உள்ளதாக கோர்ட்டில் தெரிவித்தார். இதையடுத்து, கர்நாடக தரப்பு மீண்டும், பதில் வாதம் செய்ய நீதிபதி அவகாசம் தருவார். இந்த பதில் வாதத்தை, ஏப்ரல் 22 அல்லது சில நாட்களில் கர்நாடக அரசு முன்வைக்கும். இந்த வாதம், எழுத்துப்பூர்வமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நேரில் வாதிடவும் குறுகிய கால அளவில் வாய்ப்பு தரப்படலாம் எனவும், தெரிகிறது. இதன்பிறகு தீர்ப்பு தேதி அறிவிக்கப்படும். அநேகமாக அடுத்த வாரத்தில், தீர்ப்பு தேதி வெளியாக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
ஏற்கனவே தமிழக தேர்தல் களத்தில் அதிமுக., அரசுக்கு எதிராக அனைத்து கட்சிகளும் பல்வேறு குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வருகின்றன. இந்நிலையில், ராஜீவ் கொலையாளிகள் 7 பேரையும் விடுதலை செய்ய முடியாது என மத்திய அரசு நேற்று கைவிரித்துள்ளது அதிமுக.,விற்கு அதிர்ச்சியை தந்துள்ளது. இந்த சமயத்தில் சொத்துகுவிப்பு வழக்கின் தீர்ப்பும் தேர்தலுக்கு முன்னரே வெளியாகும் என கூறப்படுவதால் அதிமுக.,விற்கு நெருக்கடிக்கு மேல் நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளதாக அரசியல் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

Advertisement




வாசகர் கருத்து (220)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
siva - tirunelveli,இந்தியா
21-ஏப்-201613:50:53 IST Report Abuse
siva மண்ணெண்ன வேப்பன்ன வெளக்கென்ன யாரு ஜெயிலுக்கு போனா எனக்கென்ன
Rate this:
Share this comment
Renga Naayagi - Delhi,இந்தியா
26-ஏப்-201606:12:10 IST Report Abuse
Renga Naayagiகல்யாணம் பண்ணிக்கிட்டியா ... இல்லையா .....
Rate this:
Share this comment
Cancel
Shaikh Miyakkhan - jeddah,சவுதி அரேபியா
21-ஏப்-201611:31:40 IST Report Abuse
Shaikh Miyakkhan லஞ்சம் வாங்கி சொத்து சேர்த்ததாக ஒரு இடத்திலும் யாரு கொடுத்தார்கள் என்ற சாட்சியும் இல்லை. மேலும் இவர்அரசு சொத்து இழப்பிடு செய்து சொத்து சேர்த்தார் என்று எந்த ஒரு சாட்சியும் கிடையாது இது திமுக ஆட்சியில் அரசியல் காழ்ப்புணர்ச்சியால் போட பட்ட வழக்கு இந்த மேல் முறை ஈட்டிலும் விடுதலை ஆகி வருவார்
Rate this:
Share this comment
Cancel
aravind - chennai,இந்தியா
21-ஏப்-201609:58:10 IST Report Abuse
aravind இந்த தீர்ப்பு ஜெயவிருக்கு எதிராக வர வாய்ப்புள்ளது, அப்பொழுது தான் ஜெயா பெயரும் அதிமுக கட்சியையும் வலு இழக்க செய்ய முடியும், பிறகு 2ஜி தீர்ப்பு அதுவும் திமுகவுக்கு எதிராக வரும், திமுகவும் வலு இழக்கும், இரண்டு கட்சிகளும் பலம் குறையும். விரைவில்....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X