சப்பாணி கட்சியா தமிழக பா.ஜ.? Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
சப்பாணி கட்சியா தமிழக பா.ஜ.?

சரியாகத்தான் சொல்கிறார், நாஞ்சில் சம்பத். 'தமிழகத்தில் கால் ஊன்ற போகின்றனராம்; கால் இருந்தால் தானே ஊன்ற முடியும்; கால் இல்லாத சப்பாணி அமைச்சர்களால் என்ன செய்ய முடியும்' என்ற அவரின் பேச்சு, அ.தி.மு.க., நாளிதழில் பிரதான இடத்தை பிடித்திருக்கிறது.

சப்பாணி கட்சியா தமிழக பா.ஜ.?

அவர் சப்பாணி அமைச்சர்கள் என விளித்திருப்பது, நம்ம ஊரு பொன்னாரை மட்டுமல்ல; தமிழக பா.ஜ.,வை கரையேற்ற, மேலிடம் அனுப்பிய பியுஷ் கோயல், பிரகாஷ் ஜாவடேகர், வெங்கையா நாயுடு, நிர்மலா சீதாராமன் போன்றோரையும் தான்.

தனித்து நிற்கும் அளவுக்கு, பா.ஜ.,வுக்கு தைரியம் தந்தது, 2014 லோக்சபா தேர்தல். 19.5 சதவீதம் ஓட்டுகளை பெற்றதால், அ.தி.மு.க., - தி.மு.க.,வுக்கு ஒரே மாற்று, பா.ஜ., மட்டுமே என பேசத் துவங்கினர்.

தேர்தல் நெருங்க நெருங்க, அவர்களது சுருதி குறைந்தபடி இருக்கிறது. லோக்சபா தேர்தலில், பா.ஜ.,வுக்கு கிடைத்த ஓட்டுகள், மோடிக்கு கிடைத்தவை. அவரால், தே.மு.தி.க., - ம.தி.மு.க., - பா.ம.க., ஆகிய கட்சிகளும் பலன் அடைந்தன என்பதே உண்மை.

அதை தாமதமாக உணர்ந்த தமிழிசை போன்ற தலைவர்கள், இந்த தேர்தலில், மோடி முகமூடி, எந்த கடையிலும் கிடைக்காது என்பதால், கூட்டணி முகமூடியை தேடினர். தமிழிசைக்கு முன்பாகவே, இதை உணர்ந்து கொண்ட பழைய பார்ட்னர்களான, ம.தி.மு.க., - பா.ம.க., - தே.மு.தி.க.,கட்சிகள், ஒவ்வொன்றாக கிளம்பி விட்டன.


இப்போது, ரிக்கார்டை மாற்றி போட்டு, கச்சேரியை களை கட்ட பார்க்கின்றனர், பா.ஜ., தலைவர்கள். 'லோக்சபா தேர்தலில் பா.ஜ., பெற்ற, 5.3 சதவீத ஓட்டுகள், நிச்சயம் கிடைக்கும்' என, தற்போது தடம் மாறி பேசுகின்றனர்.

எல்லாவற்றுக்கும் மேலாக, கோஷ்டி பூசல், கட்சியை இடியாப்பச் சிக்கலில் சிக்க வைத்துள்ளது. வேட்பாளர்தேர்வின்போது, அது பட்டவர்த்தனமாக வெளிப்பட்டது. மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், தமிழிசை ஆதரவாளர்களுக்கு, அதிக தொகுதிகள் ஒதுக்கப்பட்டிருப்ப தாக, கட்சியின் நீண்ட கால நிர்வாகிகள் புலம்புகின்றனர்.

சமீபத்தில் கட்சியில் சேர்ந்தவர்கள், வேறு கட்சியில் இருந்து வந்தவர்களுக்கு மிகுந்த முக்கியத்துவம் தரப்படுவதாக கூறுகின்றனர். சரத்குமார் கட்சியில் இருந்து வந்த கரு.நாகராஜன், ஆர்.கே.நகர் வேட்பாளர் எம்.என்.ராஜா, விக்கிரவாண்டி வேட்பாளர் பழனிவேல் ஆகியோரை, 'ஒரு பானை சோறு' உதாரணங்களாக காட்டுகின்றனர்.

இதனால், கட்சியில் பழைய நிர்வாகிகள் களப்பணியில் இறங்காமல் முடங்கி விட்டனர். கங்கை அமரன், காயத்ரி ரகுராம், விஜயகுமார் போன்ற சினிமா பிரபலங்கள் விரும்பி வந்தபோதிலும், அவர்களுக்கும் உரிய வாய்ப்புகள் வழங்கவில்லை.

கோஷ்டி பூசலின் வெளிப்பாடாக, ஒரு தலைவர் ஒன்றை சொல்ல, மற்றொரு தலைவர் வேறு கருத்தை சொல்வதும் வாடிக்கையாகி விட்டது. 'அ.தி.மு.க.,வுடன் கூட்டணி பேச்சு நடைபெற வில்லை என்பதை மறுக்க முடியாது' என, இல.கணேசன் புதிர் போட,'அப்படியெல்லாம் எதுவும் இல்லை' என தமிழிசை, 'போட்டு உடைக்க' ஆரம்பித்தார்.

'தே.மு.தி.க.,வுடன் கூட்டணி பேசி வருகிறோம்' என பொன்.ராதாகிருஷ்ணன் சொல்ல, 'தனித்து போட்டியிடுவது உறுதி' என தனி ஆவர்த்தனம் செய்தார், தேசிய செயலர் எச்.ராஜா.இந்த திசையை நோக்கி கட்சி வேகமாக போகும் நேரத்தில், யார், யாருடன் கூட்டணி

Advertisement

பேசுகின்றனர் என்பதே புதிராய் போய் விட்டது. உதாரணம், த.மா.கா.,வுடன், சில தலைவர்கள் பேசியது, தமிழிசைக்கே தெரியாது.

இதற்கிடையில், நேற்று ஒரு குளறுபடி! பா.ஜ., தேர்தல் அறிக்கை, சென்னை, கமலாலயத்தில் வெளியிடப்படும் என, தமிழிசை பேட்டி அளித்தார். சொல்லி ஓரிரு மணி நேரத்தில், அது கிருஷ்ண கான சபாவில் நடப்பதாக, அதிகாரபூர்வ தகவல் வெளியாகிறது. கட்சித் தலைமைக்கே தெரியாமல் நிறைய விஷயங்கள் நடக்கிறதா அல்லது நடப்பது எதுவுமே தெரியாமல், கட்சி தலைமை இருக்கிறதா?

நாட்டு மக்களுக்கு ஒருமைப்பாடு உபதேசம் செய்யும் கட்சியில், ஒற்றுமையும் ஒருமைப்பாடும் அறவே இல்லை என்பதற்கு, இதெல்லாம் அத்தாட்சிகள்.
ஒரே ஒரு ஆறுதல்!: கோஷ்டிகளாய் பிரிந்து கிடந்தாலும், மோடியை நம்பி களம் இறங்குவதில் மட்டுமே, தமிழக பா.ஜ., தலைவர்கள் ஒற்றுமையாக உள்ளனர். கிராமம் தோறும் மோடி புகழ் பாட, வீதி நாடக குழுக்களுக்கு, பயிற்சி அளித்து வருகிறார், பொன்.ராதாகிருஷ்ணன். ஒத்திகை நிகழ்ச்சிகளும் முழுவீச்சில் நடந்து வருகின்றன. களத்தில் தனி ஆளாக வலம் வரும் கட்சிக்கு, இந்த ஆயுதம் உதவுமா?
- நமது சிறப்பு நிருபர் -

Advertisement

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...


வாசகர் கருத்து (108)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ramamoorthy P - Chennai,இந்தியா
23-ஏப்-201609:55:53 IST Report Abuse

Ramamoorthy Pதிருவாளர் சம்பத்தின் நிலைமையே அந்த கட்சியில் ஒரு சப்பாணிக்கு இருக்கும் நிலை தான். அந்த கட்சியின் ஒரு அநாதை பேச்சாளர் இவர்.

Rate this:
மலரின் மகள் - EDINBURGH,யுனைடெட் கிங்டம்
23-ஏப்-201603:18:18 IST Report Abuse

மலரின் மகள்சப்பாணி, நோஞ்சான், கைப்புள்ள, ஓட்டாண்டி தேறாது, எப்படி தான் பேரை தேடித் புடிப்பான்களோ. போக்கைப் பார்த்து சரியாக விமர்சனம் செய்வதில் இவர்கள் கில்லாடி போலத் தெரிகிறது.

Rate this:
Sundeli Siththar - North Carolina,யூ.எஸ்.ஏ
23-ஏப்-201602:48:08 IST Report Abuse

Sundeli Siththarகூட்டணி பற்றி திமுக, அதிமுக, மக்கள் கூட்டணி போன்றவை செய்யாத கூத்தா.. பாஜகவை குற்றம் சாற்றுவது சரியில்லை என்றே தோன்றுகிறது.

Rate this:
Krishnan (Sarvam Krishnaarpanam....) - Chennai,இந்தியா
23-ஏப்-201602:08:36 IST Report Abuse

Krishnan (Sarvam Krishnaarpanam....)மீண்டும் தலிமகத்தில் கால் பதிக்க ஐந்து ஆண்டுகள் ஆகும். ஆனால் மீண்டும் மத்திய தேர்தலில் தமிழகத்தில் இருந்து கணிசமான வாக்குகளை பி.ஜே.பி அரசு வெல்லும். மக்கள் எது மத்திய தேர்தல், எது மாநில தேர்தல் என்று தெளிவாக உள்ளார்கள்.

Rate this:
Barathan - Melbourne ,ஆஸ்திரேலியா
22-ஏப்-201621:58:34 IST Report Abuse

Barathanபிஜேபி ஒரு சீட்டும் வெல்லாது மற்றும் 234 தொகுதிகளிலும் டேவனி தொகை காலியாகும் என்பது தமிழ் நாடு பிஜேபி க்கு தெரியும். பிஜேபி யின் முயற்சி ஓட்டுகளை பிரித்து ADMK வுக்கே அங்கூலமா இருக்கட்டும் என்பதுதான் அந்த ரகசியம்.

Rate this:
ரத்தினம் - Muscat,ஓமன்
22-ஏப்-201621:15:08 IST Report Abuse

ரத்தினம்பிஜேபி சப்பாணி கட்சியோ கிப்பானி கட்சியோ? திமுக, அதிமுக மாதிரி ரவுடியிசம், லஞ்சம், கொள்ளை அடிப்பதற்கே திட்டங்கள், கூழை கும்பிடு, சாராய விற்பனை, நாட்டுமக்களை இலவசம் சொல்லி ஏமாற்றுதல் இதெல்லாம் இருக்காது. அதனால அவங்களுக்கு ஓட்டு போடலாம்.

Rate this:
Venkatesh Srinivasa Raghavan - Chennai,இந்தியா
22-ஏப்-201620:28:51 IST Report Abuse

Venkatesh Srinivasa Raghavanஇங்கிருக்கும் பதிவுகளில் தெளிவாக தெரிவது ஒரு விஷயம்'தான். ஏராளமானோர் BJP ஒரு நல்ல இடத்தை தமிழ்நாட்டில் பிடிக்கும் என்ற நம்பிக்கையில் இருந்தனர். ஆனால் கட்சி தலைவர்கள் என்னும் கோமாளிகளால் அடியோடு துடைத்தெறியும் நிலையில் இருக்கிறது தமிழக BJP. கொடுமை என்னவென்றால் அந்த கேவலத்தையும் சிறிது கொண்டே சமாளிக்கிறார்கள். நிச்சயமாக ஒரு தாக்கத்தை ஏற்படுத்த கூடிய நிலையில் இருந்த ஒரு கட்சியை குட்டி சுவரை விட கீழான இடத்தில தள்ளி விட்டு விட்டு கூச்சமே இல்லாமல் திரிகிறார்கள். வயித்தெரிச்சல்.

Rate this:
John I - Nanguneri,இந்தியா
22-ஏப்-201618:48:24 IST Report Abuse

John Iலோக்சபா தேர்தலில் அதிகமாக பிரச்சாரம் செய்தது வைகோ, அதற்கு பிரதிபலனாக பிஜேபி வைகோவின் காலை வெட்டியது. தமிழகத்திற்கு கண்டிப்பாக ஒரு மாற்று கட்சி அதுவும் தேசிய கட்சி தேவை. ஆனால் இலங்கை உறவில் பிஜேபியின் மனநிலையும் காங்கிரஸ்போல 1991 காலகட்டத்திலே இருந்தால் காலை ஊன்றுகிறதல்ல, முகத்தைகூட காட்டமுடியாது.

Rate this:
Ramalingam Gurusamy - Toronto ,கனடா
22-ஏப்-201618:10:38 IST Report Abuse

Ramalingam Gurusamyஊரு ரெண்டுபட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம் என்பது போன்று பிஜேபி ஐம்பது ஆண்டுகள் ஆண்டவர்களின் ஊழல் கட்சிகளுக்கு மாற்றாக தமிழக மக்கள் மத்தியில் பெரும்பான்மை ஆட்சியில் உள்ள நம்மைத்தான் இந்தத் தேர்தலில் ஆட்டோமேட்டிக்காக தேர்தலில் பெரும்பான்மையுடன் ஜெயிக்க வைத்து அரியணையில் அமரவைப்பார்கள் என்ற பகல்கனவு தருகின்ற இறுமாப்பில் சோம்பிப்பொய் உள்குத்து வேலைகளுக்கு பலியாகிவிட்டார்கள் அதன் தமிழக பொறுப்பாளர்கள் என்பதே உண்மை. இவர்களின் மெத்தன போக்கிற்கு தேர்தல் முடிந்தபிறகு அமித்ஷா பொறுக்க பொறுக்க ஆப்பு வைப்பார் என்பதே நாளைய நம்பிக்கை தரும் செய்தி. உள்கட்சி ஆதரவாளர்களை களைஎடுக்காமல் பிஜேபி தமிழகத்தில் காலுன்ருவது சிரமம் தரும் என்பது உண்மையே.

Rate this:
Prasad - London,யுனைடெட் கிங்டம்
22-ஏப்-201617:57:13 IST Report Abuse

Prasadபாஜக சிறந்த கட்சி என்று நான் நம்புகிறேன். ஆனால் நான் வேறு பதிவில் கருத்து குறித்தது போல், இந்த தேர்தலில் பாஜக விற்கு வாய்ப்பு இல்லை, நான் எதிர்பார்ப்பது இந்த தேர்தலில் ஜெயா மிக பெரிய வெற்றி பெறுவார். அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் ஜெயா பாஜக வுடன் கூட்டணி வைத்து கொள்வர் . அடுத்த தேர்தலில் (2021) அதுவும் ஜெயாவிற்கு அப்புறம் உள்ள அரசியலில் பா ஜா காவிற்கு தமிழ் நாட்டில் நல்ல எதிர்காலம் உண்டு.ஜெயா வுள்ளவரை பாஜகவிற்கு எதிர்காலம் இல்லை

Rate this:
மேலும் 98 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement