தன்னை விட உயர்ந்த பொருளைபணயம் வைத்த ராமர்:நாகை முகுந்தன் சொற்பொழிவு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

தன்னை விட உயர்ந்த பொருளைபணயம் வைத்த ராமர்:நாகை முகுந்தன் சொற்பொழிவு

Added : ஏப் 22, 2016
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement

காரைக்குடி:காரைக்குடி ராமநவமி மகோத்ஸவ சபா சார்பில் ராமநவமி மண்டபத்தில் நடந்த கம்பராமாயண சொற்பொழிவில்,நாகை முகுந்தன் பேசியதாவது: கானகத்தில் இருந்த ராமனை பரதன் சந்திக்க வந்தார். பரதனை பார்த்து ராம பிரான், “தந்தையின் கட்டளை படி நீ ஆட்சி செய்யாமல், காட்டிற்கு ஏன் வந்தாய்?” என கேட்டான். பரதனோ ”நாட்டை உன்னிடம் ஒப்படைக்க வந்தேன். நீ தான் மன்னன்,” என்றான். “தந்தை சொல் மிக்க மந்திரம் என்ற அடிப்படையில், நீ நாட்டிலும், நான் காட்டிலும் இருப்பது தான் தர்மம்,” என்றான் ராமன்.
“அந்த அடிப்படையில் இப்போது, நீ சொன்னவாறு ராமா ஆட்சி என்னிடம் இருக்கிறது. ஒருவர் தன்னிடம் இருக்க கூடிய பொருளை தனக்கு விருப்பமானவரிடம் கொடுத்தால், அதை மறுக்காமல் ஏற்று கொள்ள வேண்டும், இதுவும் தர்மம் தானே,” என பரதன் கேட்க, ராமன் மறுத்து என்ன பேசுவது என புரியாமல், திகைக்க, இந்த தர்மத்தின் அடிப்படையில் ராமன் நாட்டிற்கு திரும்பி விட்டால், ராவண வதம் என்னாவது, தங்கள் வாழ்க்கை என்னாவது என்று, தேவர்கள் திகைக்க, சிவபெருமான் அசீரியாக ஒரு குரல் எழுப்பினார்.
தசரதன் சொன்ன அடிப்படையில்,, கைகேயி வரம் வாங்கிய வகையில் ராமன் 14 ஆண்டு, கானகத்தில் இருக்க வேண்டும், அதுவரை ராமனுடைய பிரதிநிதியாக பரதன், ராமனின் பாதுகைகளை கொண்டு ஆட்சி செய்ய வேண்டும், என்ற குரல் ஒலித்தது. அந்த திருவடிக்கு திருமுடி சூட்டி ராமன் வருகின்ற வரையில், பரதன் ஆட்சி செய்தார். பெரியாழ்வார் இந்த நிகழ்ச்சியை, “திருவடியை ராமன் பரதனிடம் பணயமாக வைத்தார்” என்று குறிப்பிடுகிறார். பணயம் என்பது, தான் பெறக்கூடிய பொருளை காட்டிலும், அதிக மதிப்புடைய பொருளை அதற்கு ஈடாக கொடுத்தல். ராமன் தன்னை, பரதனிடமிருந்து மீட்டு கொள்வதற்காக, தன்னை விட உயர்ந்த திருவடியை பணயமாக வைத்தார். இறைவனை காட்டிலும் இறைவனடி உயர்ந்தது.
சாதாரணமாக அரசன் இல்லாதபோது, மக்கள் ஒழுக்கமாக இருந்தார்கள் என்று சொன்னால், மக்கள் உயர்ந்த பண்பை அது காட்டும். நாம் சாலையில் பயணிக்கையில், போக்குவரத்து சிக்னலில் போலீசார் இல்லை என்றால் ஒரு மாதிரியாக நடந்து கொள்வோம். அவர் இருந்தால் சட்டத்துக்கு கட்டுப்பட்டு நடப்போம். ராமாயணத்தில் அரசன் ஒருவன் இல்லாத போது, பாதுகை ஆட்சியின்போது, மக்கள் ஒழுக்கமாக இருந்தனர். இறைவன் நமக்கு இரண்டு கைகளை கொடுத்திருப்பதற்கு காரணம், அவரின் இரண்டு கால்களை பற்றி கொண்டு, வாழ்க்கையில் உயர்வதற்காகத்தான், என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X