சிலப்பதிகார நாயகி மாதவியே... கண்ணகி அல்ல!| Dinamalar

சிலப்பதிகார நாயகி மாதவியே... கண்ணகி அல்ல!

Added : ஏப் 26, 2016
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
சிலப்பதிகார நாயகி மாதவியே... கண்ணகி அல்ல!

சிலப்பதிகாரத்தை தொடர்ந்து நான் படித்து வருபவன். இப்போதும் அதைப் படிக்கிறேன். இளங்கோவடிகள் துறவியாக மாறி, இக்காப்பியத்தை படைத்தாலும், சமூகக் கொடுமையை அவர் எதிர்க்கவில்லை என்பதே என் கருத்து. கண்ணகி நல்ல பெண்மணி; வாழ்வு மறுக்கப்பட்டவளும் கூட. ஆனால், மாதவி புரட்சிக்காரி. மறுக்கப்பட்ட சமூக உரிமையை போராடிப் பெற்றவள். கோவில்களில் 'பொட்டுக்கட்டி' என்ற முறையை வைத்துக் கொண்டு, ஒரு சமூகத்தைச் சேர்ந்த பெண்களை எல்லாம், பாலியல் தொழிலில் ஈடுபடுத்தினர். அந்த சமூகத்தைச் சேர்ந்தவள் தான் மாதவி.
அவளது தாய் சந்திரவதி, 'பொட்டுக்கட்டி' தொழிலில், அவளையும் ஈடுபட வற்புறுத்தினாள்; ஏன், மாதவியின் மகள் மணிமேகலையையும், ஈடுபடுத்த முற்பட்டனர். மணிமேகலையை அடைய, உதயகுமாரன் என்ற இளவரசன் பெரும் முயற்சி எடுத்தான். இதற்கு, தெய்வங்களையும் துணைக்கு அழைத்தனர்.
ஆனால், மாதவியும் சரி; மணிமேகலையும் சரி; அத்தொழிலில் ஈடுபட மறுத்ததோடு, துறவிகளாக மாறினர். துறவுக்குச் சென்ற இவர்களை, பாலியல் தொழிலில் கட்டாயப்படுத்த முடியாமல், பின்வாங்கிவிட்டனர். இது காப்பிய செய்தி. நாடு சுதந்திரம் அடைந்த பின், காமராஜர் ஆட்சியின்போது, 'பொட்டுக்கட்டி' சமூகத்தை ஒழிக்க வேண்டும் என, குரல் எழுந்தது. சட்டசபையில், இதற்கு தீர்மானம் கொண்டு வரப்பட்டது. அந்த தீர்மானத்தில் பேசிய, காமராஜரின் குரு சத்தியமூர்த்தி, 'இதெல்லாம் தெய்வம் தொடர்பானது. தெய்வ குற்றம் ஆகிவிடும். விட்டுவிடுங்கள்' என்றார்.
இதற்கு பதில் அளித்த முத்துலட்சுமி ரெட்டி, 'தெய்வத்திற்கு எங்கள் இனம் இதுவரை சேவை செய்துவிட்டது. அந்தச் சேவையை, உங்கள் சமூகம் இனி எடுத்துக் கொள்ளட்டும். எங்களை விட்டுவிடுங்கள்' என்றார். இந்த நிலையில், 'பொட்டுக்கட்டி' முறையை ஒழிக்கும் தீர்மானம் தமிழக சட்டசபையில் நிறைவேறியது. ஒரு சமூகப் பெண்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமையை எதிர்த்து, காப்பியத்திலேயே வெற்றி பெற்றவள் மாதவி. எனவே, அவளே சிலப்பதிகாரத்தின் நாயகி.
சிலப்பதிகாரத்தை எளிய மக்கள் புரிந்துகொள்ளும் வகையில், 'ஆறு அடுக்கு முறை' என்ற நூல் அச்சில் உள்ளது. விரைவில் அது வெளியாகும்.

புலவர் மா.நன்னன்

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X