மஹாராஷ்டிராவில் ஐ.பி.எல்., போட்டி கூடாது: சுப்ரீம் கோர்ட் Dinamalar
பதிவு செய்த நாள் :
மஹாராஷ்டிராவில் ஐ.பி.எல்.
போட்டி கூடாது: சுப்ரீம் கோர்ட்

புதுடில்லி:'புனேயில் நடத்த திட்டமிட்டுள்ள போட்டியைத் தவிர, மஹாராஷ்டிராவில், மற்ற ஐ.பி.எல்., கிரிக்கெட் போட்டிகளை நடத்தக் கூடாது' என, சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.

மஹாராஷ்டிராவில் ஐ.பி.எல்., போட்டி கூடாது: சுப்ரீம் கோர்ட்

'மஹாராஷ்டிராவில் கடும் தண்ணீர் பற்றாக்குறை உள்ள நிலையில், ஐ.பி.எல்., கிரிக்கெட் போட்டிக்காக, மைதானங்களை தயார்படுத்த தண்ணீர் வீணடிக்கப்படுவதை தடுத்து நிறுத்த வேண்டும்' என, மும்பை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.

மேல்முறையீடு: புனேயில், மே, 1ல், நடத்த

திட்டமிட்டுள்ள போட்டியைத் தவிர, மற்ற போட்டிகளை வேறு மாநிலங்களுக்கு மாற்றும்படி, மும்பை ஐகோர்ட் உத்தரவிட்டது. அதை எதிர்த்து, மும்பை, நாக்பூர், புனே கிரிக்கெட் சங்கங்கள், சுப்ரீம் கோர்ட்டில்மேல்முறையீடு செய்தன.

அந்த மனுக்களில் கூறப்பட்டிருந்ததாவது: சுத்திகரிக்கப்பட்ட கழிவு நீரை வைத்தே, மைதானங் கள் தயார் செய்யப்படுகின்றன. தேவைப்பட்டால், சுத்திகரிக்கப்பட்ட, 60 லட்சம் லிட்டர் தண்ணீரை நன்கொடையாக தருவதற்கும் தயாராக உள்ளோம். போட்டிகளுக்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு உள்ளதால், ஐகோர்ட் விதித்த தடையை நீக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுக்களில்கூறப்பட்டிருந்தது.

ராஜஸ்தானிலும் சிக்கல்:இந்த மனுக்கள், தலைமை நீதிபதி, டி.எஸ். தாக்கூர் தலைமையிலான சுப்ரீம் கோர்ட் அமர்வு முன், நேற்று விசாரணைக்கு வந்தது. ஆனால், அதை ஏற்க மறுத்த சுப்ரீம் கோர்ட், மும்பை ஐகோர்ட் பிறப்பித்த உத்தரவை உறுதி செய்வதாக அறிவித்தது.

Advertisement


கோர்ட் உத்தரவைத் தொடர்ந்து, மஹாராஷ்டிராவில் நடக்கவிருந்த, 12 போட்டிகளை ராஜஸ்தான் மாநிலத்துக்கு மாற்ற திட்டமிடப்பட்டது. ஆனால், ராஜஸ்தான் மாநிலத்திலும், தண்ணீர் பற்றாக்குறை உள்ளதால், இந்தப் போட்டிகளை நடத்துவதற்கு தடை கோரி, ராஜஸ்தான் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கில், வரும், மே, 3ல், தீர்ப்பு அளிக்கப்பட உள்ளது.

Advertisement

வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
அம்பி ஐயர் - நங்கநல்லூர், சென்னை - 61,இந்தியா
28-ஏப்-201620:04:47 IST Report Abuse

அம்பி ஐயர்சூப்பர்.... மொதல்ல இந்த ஐபிஎல். ஐ யே தடை செய்யணும்... அப்பத்தான் நாடு உருப்படும்.... எல்லாமே “டே- நைட்” மேட்ச் தான்.... இதுக்கான டிக்கெட் விலையைப் பார்த்தால் மயக்கமே போட்டு விழ வேண்டியதுதான் அவ்வளவு காஸ்ட்லி.... பணம் கொடுத்தால் போதும்.... நடிகைகளுடன் செல்ஃபி..., நடிகைகளுடன் டின்னர்..... குடித்து விட்டு கும்மாளம் போடலாம்..... அவ்வளவு ஏன்.... பணம் இருந்தால் நடிகைகளுடன் இரவு தங்கவும் செய்யலாம்..... சந்தேகம் இருந்தால் விஜய் மல்லையா... அவரோட பையன் சித்தார்த்... இன்னும் பலரிடம் கேட்கலாம்.... பணம் இருப்பவர்களுக்கு இது ஒரு “சுண்டைக் காய்” தான்.... ஆனால் சாமானியர்களுக்கு....???

Rate this:
Mohan Sundarrajarao - Dindigul,இந்தியா
28-ஏப்-201615:54:07 IST Report Abuse

Mohan Sundarrajaraoகிரிக்கெட் வாரியம் 60 லட்சம் லிட்டர் தண்ணீரை தர தயாராக இருக்கிறதாம். எங்கிருந்து அந்த தண்ணீரை அது எடுத்து வந்தது? ஹிமாலயதிலிருந்தா? அல்லது தண்ணீரை அது ஏதாவது தொழிற்சாலையில் தயாரித்ததா?

Rate this:
ஜாம்பஜார் ஜக்கு - Chennai,இந்தியா
28-ஏப்-201613:58:53 IST Report Abuse

ஜாம்பஜார் ஜக்குகிரிக்கெட்டை நிறுத்திட்டாங்க...சரி- தண்ணீரு?

Rate this:
மேலும் 5 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X