பணம் பதுக்கல் குறித்து குவியும் புகார்சோதனையில் அதிகாரிகள் 'பிசி' Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
பணம் பதுக்கல் குறித்து குவியும் புகார்
சோதனையில் அதிகாரிகள் 'பிசி'

பணம் பதுக்கல் மற்றும் பண பட்டுவாடா தொடர்பாக, பொதுமக்களிடம் இருந்து, ஏராளமான புகார்கள் குவியத் துவங்கி உள்ளன. இதையடுத்து, தேர்தல் அதிகாரிகள், ஒரே நேரத்தில் பல இடங்களில் சோதனை நடத்த துவங்கியுள்ளனர்.

 பணம் பதுக்கல் குறித்து குவியும் புகார்சோதனையில் அதிகாரிகள் 'பிசி'

தமிழகத்தில் வாக்காளர்களுக்கு, அரசியல் கட்சிகள் பணம் மற்றும் பரிசுப் பொருள் வழங்கு வதைத் தடுக்க, தேர்தல் கமிஷன் பல நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. வாகன சோதனை நடத்த, பறக்கும் படை மற்றும் நிலையான கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப் பட்டுள்ளன.

பணம் பதுக்கி வைக்கப்பட்டிருக்கும் இடங்களில், அதிரடியாக புகுந்து சோதனை நடத்த, வருமான வரித்துறை அதிகாரிகள் குழு அமைக்கப்பட்டுள்ளது. இக்குழுவினர், பண நடமாட்டத்தை கண்காணித்து, அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.பண நடமாட்டம், பணம் பதுக்கல் குறித்து தகவல் தெரிவிக்க, கட்டணமில்லா தொலைபேசி

எண்கள் அறிவிக்கப் பட்டுள்ளன. 'வாட்ஸ் ஆப்' மற்றும் இணையதளம் மூலம், புகார் தெரிவிக்க வசதி செய்யப்பட்டுள்ளது. பண பட்டுவாடாவை தடுக்க, கிராமங்கள் தோறும் இளைஞர் குழு அமைக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக, பணம் பதுக்கல் தொடர்பாக, ஏராளமான புகார்கள் வரத் துவங்கி உள்ளன.
வருமான வரித்துறையினருக்கு, ஏப்., 25ம் தேதிக்கு முன் வரைதினமும், 20 புகார்கள் வந்தன. தற்போது, தினமும், 70க்கும் மேற்பட்ட புகார்கள் வரத் துவங்கி உள்ளன.இது குறித்து, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி கூறியதாவது: பொதுமக்களிடம் இருந்து வரும் புகார்கள் அனைத்தும், கம்ப்யூட்டரில் பதிவு செய்யப்பட்டு, ஒரே நேரத்தில், பறக்கும் படை, வருமான வரித்துறை என, அனைவருக்கும் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

புகார்கள், அவற்றின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை ஆகிய விவரங்கள், தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகின்றன. இதுவரை, பணம் பதுக்கல் தொடர் பாக, 512 புகார்கள் வந்துள்ளன.நேற்று முன்தினம் மட்டும், 10 இடங்களில், சோதனை நடந்தது; ஒரு இடத்தில் பணம் சிக்கியது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

ரூ.600 கோடிபதுக்கல்:?சேலத்தில், அ.தி.மு.க.,வைச் சேர்ந்த முக்கிய பிரமுகர் ஒருவரின் உறவினர், பஸ் அதிபராக உள்ளார். சூரமங்கலம், சுந்தரம் காலனியில் உள்ள அவரது வீட்டிலும், சங்ககிரி, கொங்கணாபுரம் ஆகிய இடங்களில் உள்ள அவரது உறவினர் வீடுகளிலும், 600 கோடி ரூபாய் பதுக்கப்பட்டுள்ளதாக,

Advertisement

தகவல் வெளியாகியுள்ளது.

சேலம் மட்டுமின்றி, மதுரை, திருச்சி, சென்னை சுற்றுவட்டார பகுதியில் உள்ள தொகுதிகளுக்கு பணம் வழங்க, தனியாக கட்சி பிரமுகர்கள் சிலர் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இரவு நேரங்களில், சம்பந்தப்பட்ட தொகுதிக்கு, பணம் கைமாற்றப்படுவதாகவும் கூறப் படுகிறது. 'சீட்' கிடைக்காத விரக்தியில் உள்ள, ஆளுங்கட்சியைச் சேர்ந்த முக்கிய பிரமுகர்கள், பண பட்டுவாடா தொடர்பான தகவல்களை, தேர்தல் கமிஷனுக்கு அனுப்பி வருகின்றனர்.

மற்ற மாவட்டங்களில், பணத்தை பறிமுதல் செய்யும் நடவடிக்கையில் தீவிரம் காட்டும் தேர்தல் அதிகாரிகள், சேலத்தில் மந்தகதியி லேயே செயல்படுவதாகவும், இங்கும் அதிரடி சோதனை நடத்தினால், ஏராளமான பணம் சிக்கும் எனவும் கூறப்படுகிறது.

- நமது நிருபர் -

Advertisement

வாசகர் கருத்து (15)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
arumugam subbiah - Tirunelveli,இந்தியா
28-ஏப்-201614:43:27 IST Report Abuse

arumugam subbiahநெஞ்சு பொறுக்குதில்லையே இந்த நிலை கெட்ட மனிதரை நினைத்து விட்டால்

Rate this:
Pasupathi Subbian - trichi,இந்தியா
28-ஏப்-201614:34:05 IST Report Abuse

Pasupathi Subbianபழி தீர்க்க ஒரு நல்ல வழி. இதை வேண்டாதவர்களின் மேல் ஏவி விடலாம். அதே நேரம் பறக்கும் படையையும் போக்கு காட்ட ஒரு நல்ல சந்தர்ப்பம்.

Rate this:
kuppuswamykesavan - chennai,இந்தியா
28-ஏப்-201614:08:49 IST Report Abuse

kuppuswamykesavanஇங்கு ஒரு நல்ல ஆட்சி அமைய, தேர்தல் கமிசனுக்கு உதவி செய்யணும் மக்களே.

Rate this:
மேலும் 12 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X