புதிய அரசிடம் தமிழக வாக்காளர்கள் எதிர்பார்ப்பது என்ன?| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

புதிய அரசிடம் தமிழக வாக்காளர்கள் எதிர்பார்ப்பது என்ன?

Added : மே 05, 2016 | கருத்துகள் (31)
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
tn election, voters expectation, தமிழக தேர்தல், வாக்காளர்களின் எதிர்பார்ப்பு

சென்னை : தாங்கள் ஆட்சிக்கு வந்தால் அதை செய்வோம், இதை செய்வோம் என அரசியல் கட்சிகள் ஆளுக்கொரு வாக்குறுதியை அள்ளி வீசி வருகின்றன. ஆனால் உண்மையில், தமிழக வாக்காளர்கள், புதிய அரசிடம் என்னென்ன விஷயங்களை எதிர்பார்க்கிறார்கள் என ஜனநாயக சீர்திருத்த கழகம் சர்வே ஒன்றை நடத்தியது. அதில் வாக்காளர்கள் அதிக முக்கியத்துவம் கொடுக்கும் எதிர்பார்ப்புகள் பட்டியலிடப்பட்டுள்ளன.
தமிழகம் முழுவதிலும் உள்ள 234 தொகுதிகளிலும் உள்ள எந்த அரசியல் கட்சியையும் சாராத, கிராமப்புற மற்றும் நகர்புறங்களில் வசிக்கும் 16,000க்கும் மேற்பட்டோரிடம் இந்த சர்வே நடத்தப்பட்டுள்ளது. இதில் வாக்காளர்கள் உடனடி தேவையாக நினைக்கும் முக்கியமான 3 விஷயங்கள், விவசாய கடன், வேலைவாய்ப்புக்கள், விவசாயத்திற்கு மின்சாரம் ஆகியவை. நகர்புறவாசிகளின் மிக முக்கிய பிரச்னையாக பார்க்கப்படுவது வேலைவாய்ப்பு, குடிநீர், சுற்றுச்சூழல் மாசுபாடு.
கிராமப்புற மக்களில் 68 சதவீதம் பேர், விவசாய கடன், அதற்கு தேவையான மின்சாரம், தண்ணீர் உள்ளிட்ட விவசாயம் தொடர்பான பிரச்னைகள் உடனடியாக தீர்க்கப்பட வேண்டியவை என்றும், 24 சதவீதம் பேர் தரமான சாலைகள், போக்குவரத்து நெரிசல் தீர்க்கப்பட வேண்டிய பிரச்னை எனவும், 15 சதவீதம் பேர் சுகாதார நலனுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் எனவும் கூறி உள்ளனர். கிராமப்புற மக்களிடம் வேலைவாய்ப்பு, கல்வி, ஊழல், லஞ்சம், பயங்கரவாதம், சட்ட ஒழுங்கு ஆகியன குறைந்த அளவு முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டிய விஷயமாக உள்ளது.
அதே சமயம் நகர்ப்புற வாசிகளிடம் வேலைவாய்ப்பு, குடிநீர் முக்கியமான பிரச்னையாக இடம் பிடிக்கிறது. சுற்றுப்புற மாசுபாடு குறிப்பாக இரைச்சல், போக்குவரத்து நெரிசல், தரமான சாலைகள், சுகாதாரம் ஆகியன அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட வேண்டிய பிரச்னைகளாக உள்ளன. வேளாண் பொருட்களின் விலை உயர்வு, விவசாயத்திற்கு மின்சாரம், விவசாய கடன் ஆகியவற்றிற்கு நகர்புற மக்கள் குறைந்த அளவு முக்கியத்துவமே அளிக்கிறார்கள்.
தரமான கல்வி, போக்குவரத்து இடையூறுகளை சரி செய்வது, வீடுகளுக்கான மின்சாரம் வழங்குவது ஆகியவற்றில் அரசு அதிக கவனம் செலுத்த வேண்டும் என்பது நகர்புறவாசிகளின் முக்கிய கோரிக்கையாக உள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (31)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Venky - Pune India - Chennai,இந்தியா
06-மே-201613:11:12 IST Report Abuse
Venky - Pune India கடனை அடை .....நதி நீர் இணை ....அரசு கல்வி ...அரசு மருத்துவம் ....பினாமி சொத்துக்களை அரசுடமையாக்கு ...இலவசங்களை , மானியத்தை நிறுத்து .........ஆமா நான் எதுக்கு வெட்டியா புலம்பிட்டு ....ஆலோசனை ஆயிரம் சொல்லுவோம் இலவசம்னா மொதல்ல நிப்போம் .....
Rate this:
Share this comment
Cancel
கேண்மைக்கோ சேகர் - Dharmapuri/Bangalore,இந்தியா
06-மே-201611:25:29 IST Report Abuse
கேண்மைக்கோ சேகர் 16671 கிராமங்கள் 5 சிறு தொழில் =83355 சிறு தொழில்சாலைகள் 8335525(55) நபர் = 2083875 குடும்பம் நிரந்தர வருமானத்துடன் சந்தோசபட்டலும் நான் சற்றே மகிழ்வேன் என் தமிழனின் நிலை கண்டு . தி மு க ,அ தி மு க மற்றும் சில கட்சிகள் தமிழனை தலை நிமர வைப்பது கடினமே .மக்களுக்கு என்ன தேவை என்று இன்னும் இவர்களுக்கு தெரியவில்லையா ? இவர்கள் எம் மக்களை, நாம் உருவாக்கிய அரசை நமக்கான தேவைகளை செய்வதற்கு நாம் அனுமதிப்போம் மாறாக அவர்களிடம் நம்மை பிச்சை கேக்க வைப்பது போல் அல்லவா இருக்கிறது . விவசாயி களுக்கும் விவசாயத்திற்கும் ஒன்றும் அதிகம் செய்ய வேண்டாம் . நீர்நிலைகளை மற்றும் நீர் வழித்தடங்களை சரி செய்தால் போதும் . பெண்களுக்கு என்ன தேவை என்று முடிவு செய்வது யார் ? எங்கோ ஒரு தமிழ்நாட்டின் முடிக்கில் இருக்கும் தமிழ் பெண்ணிடம் கேளுங்கள் சொல்லுவாள் ..'' எம் மக்களுக்கு மேல் மக்களுக்கு இணையான கல்வி என்று ''-இதை யார் செய்வார்கள் ? நல்ல மிக நல்ல அரசு மக்கள் தேவை என்ன என்பது தெளிவாக தெரிந்தும் மாற்ற முடியாத அரசியல் சுழல சூழல இங்கு இருகின்றது ஊடகங்கள் சொல்லியும் ஆகிவிட்டது . பணத்தை வருங்கால சந்ததிக்கு சேர்த்து வைக்கும் பச்சை தமிழர்களிடம்(அரசியல் தலைகளிடம் ) நான் கேட்கிறேன் ,உங்களால் அடுத்த தலைமுறைக்கு நல்ல நீர் ,காற்று ,மண் விட்டு வைத்து போக முடிய வில்லை என்று என்று நீங்கள் கண்ணீர் விடுகின்ரீரோ அன்று தமிழனின் நிலை மாறும் . ஏன் என் ஒரு ஓட்டில் ஒரு பெரிய மாற்றம் நிகழ போவதிலை.என்னால் என் ஊரை மாற்ற முடியும் .
Rate this:
Share this comment
Cancel
P. SIV GOWRI - Chennai,இந்தியா
06-மே-201611:09:57 IST Report Abuse
P. SIV GOWRI எந்த கட்சியாக இருந்தாலும் முதலில் ஏரி குளங்களை தூர் வாரி தண்ணீர் சேமிக்க வழி வகை செய்தால் ரெம்ப நல்லது.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X