Army Officer, 8 Of His Men, Arrested For Allegedly Stealing Smuggled Gold | திருடன்கிட்டேயே திருட்டா? கடத்தல் தங்கத்தை திருடிய ராணுவ கர்னல் கைது| Dinamalar

திருடன்கிட்டேயே திருட்டா? கடத்தல் தங்கத்தை திருடிய ராணுவ கர்னல் கைது

Added : மே 05, 2016 | கருத்துகள் (5)
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
திருடன்கிட்டேயே திருட்டா?  கடத்தல் தங்கத்தை திருடிய ராணுவ கர்னல் கைது

கவுகாத்தி: கடத்தல் தங்கத்தை திருடியதாக தொடரப்பட்ட வழக்கில் ராணுவ கர்னல் உள்பட 8 ராணுவ வீரர்கள் கைது செய்யப்பட்டனர்.

கடந்த 2014-ம் ஆண்டு டிசம்பரில் இந்திய- மியான்மர் எல்லையான மிசோரம் மாநிலத்தில் தங்க கட்டிகள் கடத்தி வந்ததை, அசாமின் 39 அசாம் ரைபில்ஸ்படை பிரிவின் கர்னல் ஜஸ்ஜித்சிங் தலைமையில் ராணுவத்தினர் பறிமுதல் செய்தனர். இதில் கடத்தல் தங்கம், உரிய முறையில் மிசோரம் அரசு கருவூலத்தில் ஒப்படைக்கவில்லை. மேலும் கடத்தல் காரர்களையும் தப்பிவிட்டனர்.இது தொடர்பாக மிசோரம் அரசு புகார் தெரிவித்தது. கடத்தல் தங்கம் மிசோரம் அரசு கருவூலத்தில் ஒப்படைக்கப்படாமல் மாயமாகிவிட்டதாக கூறப்பட்டது.


சிறப்புவிசாரணை குழு அமைப்பு



கடத்தல் தங்கம் மாயமானது குறித்து மிசோரம் போலீஸ் கடந்த ஏப். 21 -ம் தேதி அமைத்த சிறப்பு விசாரணைக்குழுவினர் விசாரணை நடத்தினர்.இதில் ராணுவ கர்னல், ஜஸ்ஜித்சிங், மற்றும் 8 ராணுவ வீரர்கள் கடத்தல் தங்கத்தை பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. உடன் மிசோரம் போலீசார் கர்னல் ஜஸ்ஜித் சிங் உள்ளிட்ட 8 ராணுவ வீரர்கள் மீது வழக்குப்பதிவு செய்தனர். இதில் மிசோரம் போலீஸ் விசாரணைக்கு ஒத்துழைக்காமல் கர்னல் ஜஸ்ஜித்சிங் , டிமிக்கி கொடுத்து வந்தார். தனக்கு நெருக்கடி முற்றவே, முன்ஜாமின் கோரி கர்னல் தாக்கல் செய்த மனு தள்ளுபடியானதை தொடர்ந்து இன்று கர்னல் ஜஸ்ஜித் சிங் மற்றும் 8 ராணுவவீரர்கள் கைது செய்யப்பட்டனர்.

Advertisement


வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Selvaraj Thiroomal - Chennai,இந்தியா
07-மே-201616:00:20 IST Report Abuse
Selvaraj Thiroomal என்ன புதுமை இதில் உள்ளது?? கர்னலோட சுயநலம்தான் காரணம், அவரே அமுக்காமல் போலீசுக்கும் கொஞ்சம் கொடுத்திருந்தால் நாம் கருத்து எழுத முடியுமா ??? நாளை ஒரேமாதிரி பென்ஷன் வாங்கபோறவங்க, ஒரே மாதிரிதானே நடப்பாங்க
Rate this:
Share this comment
Cancel
samkey - tanjore,இந்தியா
07-மே-201611:57:09 IST Report Abuse
samkey திருச்சி விமான நிலையத்தில் பல கோடி மதிப்பு மிக்க தங்கத்தை ஆட்டையப் போட்ட திருடர்களை பிடித்து விட்டர்களா? என்னவாயிற்று?
Rate this:
Share this comment
Cancel
K.Sugavanam - Salem,இந்தியா
06-மே-201604:24:36 IST Report Abuse
K.Sugavanam எவ்வளவு தங்கம்னு நம்ப நிருபரும் கடைசீ வரை சொல்லவே இல்லையே.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X