23 ஆண்டுக்குப் பின் இணைந்த மாணவர்கள்| Dinamalar

23 ஆண்டுக்குப் பின் இணைந்த மாணவர்கள்

Added : டிச 23, 2010
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

மதுரை : மதுரையில் 23 ஆண்டுகளுக்கு முன் படித்த மாணவர்கள் ஒன்று சேர்ந்து கலந்துரையாடினர். மதுரை ஜெய்ஹிந்துபுரம் டி.வி.சுந்தரம் மேல்நிலைப் பள்ளியில் 23 ஆண்டுகளுக்கு முன் படித்த மாணவர்கள் மீண்டும் ஒன்று சேர்வது என முடிவெடுத்தனர். 1987ம் ஆண்டு படித்த மாணவர்களான செயின்ட் மைக்கேல் மெட்ரிக் பள்ளி முதல்வர் கே.மதிவதனன் மற்றும் டி.வி.எஸ்.,சக்ரா நிறுவன மேலாளர் ராஜாராமன் இதற்கான ஏற்பாடுகளில் இறங்கினர். மதுரை, சென்னை, ராஜஸ்தான், குஜராத் என பல்வேறு பகுதிகளில் பணியாற்றி வந்த ஐம்பது மாணவ, மணவியரை ஒன்று சேர்த்தனர்.


அவர்கள் அனைவரும் டி.வி.சுந்தரம் பள்ளிக்குச் சென்றனர். அங்கு கல்வி நிறுவனங்களின் இயக்குனர் சீனிவாசன், முன்னாள் தலைமை ஆசிரியர் எபனேசர் கிறிஸ்துதாஸ், தற்போதைய தலைமை ஆசிரியர் கல்யாணசுந்தரம் மற்றும் அவர்களுக்கு கற்பித்த ஆசிரியர்கள் சிலரை சந்தித்து பழைய நினைவுகளில் மூழ்கினர். போட்டோ எடுத்துக் கொண்டனர். பள்ளிக்கு 20 ஆயிரம் மதிப்புள்ள புத்தகங்களை நன்கொடையாக வழங்கினர். பின் பாண்டியன் ஓட்டலில் நடந்த நிகழ்ச்சியில் ஐம்பது மாணவர்களும் ஒருங்கிணைந்து பழமையான பள்ளி நினைவுகளை பேசி மகிழ்ந்து கலைந்தனர்.


Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X