எனக்கு ஏதாவது நேர்ந்தால் ஸ்டாலின் முதல்வராவார்: கருணாநிதி| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

எனக்கு ஏதாவது நேர்ந்தால் ஸ்டாலின் முதல்வராவார்: கருணாநிதி

Updated : மே 10, 2016 | Added : மே 10, 2016 | கருத்துகள் (32)
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
ஸ்டாலின் முதல்வராவார், கருணாநிதி

சென்னை: தி.மு.க., தலைவர் கருணாநிதி தனியார் டிவிக்கு அளித்த பேட்டி: நான் 6வது முறையாக முதல்வராகி சாதனை படைக்க வேண்டும் என ஸ்டாலின் விரும்புகிறார். அவர் முதல்வராக வேண்டும் என ஸ்டாலின் நினைத்தது இல்லை. தேர்தலில் இது வரை நான் தோற்றதில்லை. இந்த முறையும் வென்றால், நான் 6வது முறையாக முதல்வர் பதவி ஏற்க வேண்டும் என நினைக்கும் முதல் ஆள் ஸ்டாலின் தான். எனக்கு இயற்கையாக ஏதாவது நேர்ந்தால் தான் ஸ்டாலின் தமிழக முதல்வராவார். தமிழகத்தில் மூன்றாவது அணியை நம்புவது எந்த விதத்திலும் பலனளிக்காது. 3வது அணிக்கு மக்கள் வாய்ப்பு அளித்தனர். ஆனால் அது(தே.மு.தி.க.,) பல துண்டுகளாகிவிட்டது. ஜெயலலிதா பொய் பிரசாரம் செய்து வருகிறார். தமிழன்னைக்கு ரூ.100 கோடி செலவில் சிலை அமைக்கப்படும் எனக்கூறினார். ஆனால் அது அமைக்கப்படவில்லை. ஊழல் தலைவர்களை தமிழக ம்க்கள் எப்போதும் ஏற்க மாட்டார்கள். ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை சென்று வந்தவர். ஜெ.,வுக்கு எதிரான எங்களது பிரசாரம் மக்கள் மனதில் ஆழமாக பதிந்து விட்டது. இவ்வாறு கருணாநிதி கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (32)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ramalingam Gurusamy - Toronto ,கனடா
11-மே-201608:17:35 IST Report Abuse
Ramalingam Gurusamy ஏதாவது நேர்ந்தால் - முன்னாள் முதல்வர், முதல் கைஎழுத்து -முன்னாள் துணை முதல்வர் இருவரின் வாக்குகளின் இடையே இழையோடுவது நெருடுதலாக தென்படுவது எதோ சம்சயம் காட்டுகிறதே அது கவர்னரின் பதவி பிரமாணத்தில் தெரியும் உண்மையோ ?
Rate this:
Share this comment
Cancel
Chandrasekaran Narayanan - Hosur,இந்தியா
11-மே-201605:53:29 IST Report Abuse
Chandrasekaran Narayanan எனக்கு இயற்கையாக ஏதாவது நேர்ந்தால் தான் ஸ்டாலின் தமிழக முதல்வராவார். திமுக ஒன்றும் சங்கர மடம் இல்லை வாரிசு நியமனம் செய்ய என்று சொன்னீர்களே ? இப்போ சங்கர மட கொள்கைகளை பின்பற்றுகிறீர்களா?
Rate this:
Share this comment
Cancel
Raju, Assam - Assam,இந்தியா
10-மே-201620:40:30 IST Report Abuse
Raju, Assam நாங்கள் ஆட்சிக்கு வந்தால் ரூபாய்க்கு மூன்று படி அரிசி போடுவோம் - இல்லை எனில் முச்சந்தியில் வைத்து சவுக்கால் அடியுங்கள் என்று அண்ணாதுரை கூறினார். போட்டாரா? இல்லை சவுக்கால் அடிவாங்கினாரா? இல்லை பின்னர் வந்த கருணாநிதி, ரூபாய்க்கு ஒரு படி அரிசி போடுவோம் என்றார். ஏதோ பேருக்கு சென்னையில் மட்டும் ரூபாய்க்கு ஒரு படி அரிசியை சில நாட்களுக்கு போட்டுவிட்டு பிறகு அதற்கும் மூடுவிழா செய்துவிட்டார். இந்த யோக்கியர் ஜெயலலிதாவை பொய்ப்ரசாரம் செய்வதாய் கூறுகிறார்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X