பிடிபட்ட ரூ.570 கோடி யாருடையது?: லக்கானி தவகல்| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பிடிபட்ட ரூ.570 கோடி யாருடையது?: லக்கானி தவகல்

Added : மே 14, 2016 | கருத்துகள் (30)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
 பிடிபட்ட ரூ.570 கோடி யாருடையது?: லக்கானி தவகல்

திருப்பூர்: திருப்பூர் அருகே பிடிபட்ட ரூ.570 கோடி பற்றிய மர்மம் நீடித்த நிலையில், பணத்திற்கு ஸ்டேட் வங்கி அதிகாரிகள் உரிமை கோரியுள்ளதாக தமிழக தலைமை தேர்தல் அலுவலர் ராஜேஷ் லக்கானி தெரிவித்தார்.
நேற்று நள்ளிரவு ஒரு மணிக்கு திருப்பூர் - ஊத்துக்குளி ரோட்டில் 3 கன்டெய்னர்கள் சென்று கொண்டு இருந்தன. அவற்றை பறக்கும் படையினரும் போலீசாரும் நிறுத்தி சோதனையிடப் பட்டனர். கன்டெய்னர்களை திறந்து பார்த்த அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர். உள்ளே கட்டுக்கட்டாக பணம் இருந்தது. இவற்றின் மொத்த மதிப்பு 570 கோடி ரூபாய். மூன்று கன்டெய்னர்களையும் திருப்பூர் கலெக்டர் அலுவலகத்திற்கு கொண்டு சென்றனர். லாரிகளில் இருந்தவர்கள், ''இந்தப் பணம் கோவை ஸ்டேட் வங்கியில் இருந்து விசாகபட்டினம் வங்கிக்கு கொண்டு செல்லப்படுகிறது'' என்றனர். அதற்குரிய ஆவணங்களைக் காட்டவில்லை.
திருப்பூர் மாவட்ட செலவின பார்வையாளர் உதய் சீனிவாசன் தலைமையில் விசாரணை குழு அமைக்கப்பட்டது. இந்நிலையில் இந்தப் பணம் குறித்து ஸ்டேட் வங்கி அதிகாரிகள் உரிமை கோரியுள்ளதாக தமிழக தலைமை தேர்தல் அலுவலர் ராஜேஷ் லக்கானி தெரிவித்தார். இதையடுத்து இப்பணம் குறித்த குழப்பம் முடிவுக்கு வந்தது.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (30)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
KIm - seoul,தென் கொரியா
16-மே-201611:19:44 IST Report Abuse
KIm லக்கானி இப்படி மங்குனி மாறி இருக்கிங்களே , இந்த புகைபடத்தில் உள்ள வாகனம் இது மாதிரி வாகனத்தை வங்கி உபோயிக்காது, அப்புறம் வங்கி காவல் PROTOCOL வேரமாரி இருக்கும், இரவில் கொண்டு செல்ல மாட்டார்கள் ,முறையான் ATTACHMENT DOCUMENT AND SEAL இருக்கும் ,எல்லாமே மிஸ்ஸிங் - இரண்டு விஷயம் நீங்க பதில் சொல்லணும் 1. மேற்கூரிய விஷயம் உங்களுக்கு சரி வர தெரியவில்லை என்றால் - இந்த பதவிக்கு நீங்கள் லாயக்கு இல்லை என்று அர்த்தம், 2. மேற்கூரிய விஷயம் உங்களுக்கு தேறிடு இருக்கு மாயின் - நீங்கள் யாரையோ காப்பாற்ற முயலுகிறீர்கள் அப்படியானால் நீங்களும் அதில்ஒருவரா?? which one is correct ?
Rate this:
Share this comment
Cancel
Velu Karuppiah - Chennai,இந்தியா
15-மே-201618:11:29 IST Report Abuse
Velu Karuppiah ஐயா லக்கானி சாதாரண குடிமகன் ரூபாய் 50,000 கொண்டு சென்றாலே தக்க ஆதாரம் கொண்டு செல்லவேண்டும் என்று சட்டம் போட்டுவிட்டு இவ்வளவு பணத்தை ஆதாரம் இல்லாமல் கொண்டு செல்பவர்கள் யார் என்று சி பி ஐ விசாரணை தான் வைக்க வேண்டும் 47 மணி நேரம் கழித்து அதரங்ககளை தயார் செய்வது யார் என்று நீங்கள் தான் கூற வேண்டும்.
Rate this:
Share this comment
Cancel
Salman Faris - Muscat,ஓமன்
15-மே-201616:16:57 IST Report Abuse
Salman Faris அதெப்படி ..... ATM'ல பணம் load பண்ண வரவனே செக்யூரிட்டி'யோட தான் வரான். அப்படி இருக்கும் பொது மாநிலம் விட்டு மாநிலம் பணப் பரிமாற்றம் ஆகுரப்போ ஒருத்தன் கூடவா செக்யூரிட்டி இல்ல கட்டுக் கதை சொன்னாலும் நம்புற மாதிரி சொல்லுங்கப்பா
Rate this:
Share this comment
Cancel
iniyavan - kuala lumpur,மலேஷியா
15-மே-201615:21:06 IST Report Abuse
iniyavan கோயம்புத்தூரில் ஒரே இடத்தில எந்த பேங்க் கொடொனில் 570 கோடியையும் வைத்து இருந்தார்கள் ?
Rate this:
Share this comment
Cancel
Venkat - Chennai,இந்தியா
15-மே-201613:43:25 IST Report Abuse
Venkat இந்த விஷயத்தை தேவையில்லாமல் கருணாநிதி மற்றும் அவர் டிவி சானலும் ஊதி பெரியதாக்கி இது ஜெயலலிதாவின் பணம் என்பது போல சித்தரித்து மக்கள் அனுதாபத்தை பெற முயற்சிக்கிறார்கள். அந்த பணம் வங்கிக்கு உரியதுதான். வங்கி அதிகாரிகள் கணக்குகளை சரியாக வைத்து விட்டு தான் கூறுவார்கள். தேர்தல் நேரம் என்பதால் இதை ஒரு பரபரப்புக்காக பில்டப்பு செய்கிறார்கள். கருப்பு கடத்தல் பணத்தை எந்த மடையனும் செக்கிங் நடக்கும் இந்த நேரத்தில் எடுத்து செல்லமாட்டான். தேர்தல் நேர செக்கிங் முடிந்த பிறகு தான் எடுத்து செல்வான். அதே போல எந்த வங்கியும் தண்டோரா போட்டு விட்டு பணத்தை எடுத்து செல்ல மாட்டார்கள். அந்த கண்டைனர் லாரிகளில் ட்ராக்கிங் சிஸ்டம் வைத்து இருப்பார்கள். GPS பாலோ அப் இருக்கும். இது வரை எந்த வங்கியாவது பெருத்த பாது காப்போடும் பணம் எடுத்து செல்வதை பார்த்து இருக்கிறார்களா.? எப்போது எடுத்து செல்கிறார்கள் என்று யாருக்கும் தெரியாது. சொல்லவும் மாட்டார்கள். போய் வேறு விஷயம் பாருங்கள்.
Rate this:
Share this comment
sundaram - Kuwait,குவைத்
16-மே-201609:32:22 IST Report Abuse
sundaramஇந்த விஷயத்தை தேவையில்லாமல் ஊதி பெரியதாக்கி இது ஜெயலலிதாவின் பணம் என்பது போல சித்தரித்து மக்கள் அனுதாபத்தை பெற முயற்சிப்பது கருணாநிதி மற்றும் அவர் டிவி சானலும் மட்டுமல்ல, எப்படியாவது கருணாநிதி மீண்டும் பதவிக்கு வந்துவிடவேண்டும் , அதன் பின்னர் ராமருக்கும் விநாயகருக்கும் செருப்பு மாலைகள் ஊர்வலம், தாலி அறுப்பு பூனூல் அறுப்பு திருவிழாக்கள் போன்றவை நித்தம் நடைபெறவேண்டும் அதன் மூலம் தனது விற்பனை ஆல்போல பெருகவேண்டும் என்று துடிக்கும் பார்ப்பன பத்திரிகை தினமலரும்தான்...
Rate this:
Share this comment
Cancel
பாண்டியன் - Coimbatore  ( Posted via: Dinamalar Android App )
15-மே-201610:19:09 IST Report Abuse
பாண்டியன் ATM LA 10_லட்சம் நிரப்பும் போதே முன்னாடி வாட்ச்மேன் நிப்பாட்டும் வங்கிகள் 570 கோடி எந்த பாதுகாப்பும் இன்றி ஆவணம் இன்றி அனுப்புவார்களா எங்கள பாத்தா ரொம்ப மொக்கயா தெரியுதா லக்கானி சார்
Rate this:
Share this comment
Cancel
madurai mani bharathi - madurai,இந்தியா
15-மே-201605:33:52 IST Report Abuse
madurai mani bharathi அதுவும் இரண்டாவது சனிகிழமை வங்கி விடுமுறை. மறுநாள் ஞாயிற்று கிழமையில் 570 கோடிகளை எங்கு இறக்குவார்கள், எந்தவித போலீஸ் பாதுகாப்பும் இல்லாமல். உரிய ஆவணமும் இல்லமல் வங்கி விடுமுறை நாட்களில் பண பரிமாற்றம் நடக்குமா .... ஆட்சியில் அடித்த பல லச்சம் கோடிகள் தமிழக எல்லையை கடக்க துவங்கி விட்டன,,, தமிழா விழித்துக்கொள்.....
Rate this:
Share this comment
Raj Pu - mumbai,இந்தியா
15-மே-201607:23:22 IST Report Abuse
Raj Puஸ்டேட் வங்கி மதிய பிஜேபி அரசு கண்ட்ரோலில் உள்ளது, இவ்வளவு பெரிய தொகை கடத்த மாநில அரசு கட்சிகளால் முடியாது , இரண்ண்டு வருடங்கள் முன் இதே போல மும்பையிலிருந்து குஜராத்துக்கு கொண்டு சென்ற 1000 கோடி பிறகு என்ன ஆயிற்று என்றே தெரியவில்லை , பிரதமர் மோடியும் அமித்சாவும் இரு தினங்கள் முன் வரை தமிழ்நாட்டில் முகாம் இட்டுள்ள நிலையில் இது நடந்துள்ளது...
Rate this:
Share this comment
K.Sugavanam - Salem,இந்தியா
15-மே-201609:22:43 IST Report Abuse
K.Sugavanamஅதை விட்டுவிட்டார்கள் ...அத்தோடு.....
Rate this:
Share this comment
Cancel
kuppuswamykesavan - chennai,இந்தியா
15-மே-201601:10:09 IST Report Abuse
kuppuswamykesavan மஞ்சள் நிற துணி பையில் எடுத்து செல்வது எளிதாக இருக்கும்தானே?.
Rate this:
Share this comment
Cancel
Indian - Shelton,யூ.எஸ்.ஏ
15-மே-201600:12:13 IST Report Abuse
Indian மோடி அம்மாவுடன் ரகசிய டீல் வைத்தது மீண்டும் ஒருமுறை அம்பலம்
Rate this:
Share this comment
Cancel
Antoni Raj - Uthamapalayam,இந்தியா
14-மே-201623:24:38 IST Report Abuse
Antoni Raj நெஞ்சு கொதிக்கிறது. இவ்வளவு பணத்தை எந்த ஆதாரமும் இல்லாமல் எடுத்து செல்வார்களாம் அதுக்கு லக்கானி வக்காலத்து வாங்குகிறாராம். திருட்டு கூட்டத்துடன் இணைந்த திருடன் இந்த லக்கானி
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை