அரவக்குறிச்சி தொகுதி ஓட்டுப்பதிவு ஒத்தி வைப்பு: பணம், மது விநியோகம் அதிகம் என்பதால் அதிரடி| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

அரவக்குறிச்சி தொகுதி ஓட்டுப்பதிவு ஒத்தி வைப்பு: பணம், மது விநியோகம் அதிகம் என்பதால் அதிரடி

Added : மே 14, 2016 | கருத்துகள் (40)
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
அரவக்குறிச்சி தொகுதி ஓட்டுப்பதிவு ஒத்தி வைப்பு: பணம், மது விநியோகம் அதிகம் என்பதால்  அதிரடி

சென்னை: அரவக்குறிச்சி தொகுதியில் பணம், மது விநியோகம் அதிகளவில் இருந்ததாக எழுந்த புகாரை எடுத்து அத்தொகுதிக்கு தேர்தலை 23-ம் தேதிக்கு ஒத்தி வைத்தது தலைமைதேர்தல் ஆணையம்.

தமிழக சட்டசபைக்கு வரும் 16--ம் தேதி தேர்தல் நடக்கிறது. இன்றுடன் பிரசாரம் ஒய்ந்தது. தேர்தலுக்கான முன்னேற்பாடுகள் அனைத்தையும் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி செய்து வருகிறார். எனினும் ஆங்காங்கே பணப்பட்டுவாடா நடந்தது. இது கவலையை ஏற்படுத்தி வருகிறது.
கடந்த சில வாரங்களுக்கு முன்னர் கரூரில் அன்புநாதன் என்பவர் வீட்டில் சோதனை நடத்தி ரூ.பல கோடி ரொக்கப்பணத்தை, தேர்தல் பறக்கும்படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதைத்தொடர்ந்து தி.மு.க.வைச் சேர்ந்த கே.சி. பழனிச்சாமி வீடு, அலுவலகங்களிலும் சோதனை நடத்தி ரூ.பல கோடி ரொக்கப்பணத்தையும் பறிமுதல் செய்தனர்.
இந்நிலையில் கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி தொகுதிக்கான ஓட்டுப்பதிவு ஒத்தி வைக்கப்பட்டதாக இன்று இரவு திடீர்அறிவிப்பு வெளியானது.
இது தொடர்பாக தலைமை தேர்தல் ஆணையத்திற்கு தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி புகார் அனுப்பினர். இதையடுத்து தலைமை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிவிப்பு ,
அரவக்குறிச்சி தொகுதியில் அதிகளவில் பணம், மது விநியோகம் நடந்துள்ளதாக உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் அன்புநாதன், கே.சி. பழனிச்சாமி ஆகியோர் வீடு, அலுவலகங்களில் ரூ. பல கோடி ரொக்கப்பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. ஜனநாயக விதிகளுக்கு புறம்பாக வாக்காளர்களுக்கு பண பட்டுவாடா செய்யப்பட்டுள்ளது நிரூபணம் ஆகியுள்ளது. இத்தொகுதிக்கு வரும் 23-ம் தேதி ஓட்டுப்பதிவு நடைபெறுகிறது. ஓட்டு எண்ணிக்கை 25-ம் தேதி நடக்கிறது. இவ்வாறு தலைமை தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

தலைமை தேர்தல் ஆணையத்தின் இந்த முடிவை கட்சிகள் வரவேற்றும், விமர்சித்தும் வருகின்றன.

Advertisement


வாசகர் கருத்து (40)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
15-மே-201621:41:17 IST Report Abuse
Pugazh V 5 நாள் தள்ளி வெச்சதால் , எல்லா மக்களும் வேட்பாளர்கள் கொடுத்த பணத்தை திருப்பி கொடுத்துடுவாங்க. வேட்பாளர்கள் ரொம்ப நேர்மையா செலவுக்கணக்கை தயார் பண்ணுவாங்க தேர்தல் ஆணையத்தின் சிறந்த கண்டுபிடிப்பு. . போங்க சார்
Rate this:
Share this comment
Cancel
selvam palanisamy - CHENNAI ,இந்தியா
15-மே-201615:55:28 IST Report Abuse
selvam palanisamy 23 அன்று ஒட்டு போட வெளி ஊரில் இருக்கும் வாக்காளர்களுக்கு விடுமுறை தருவார்களா
Rate this:
Share this comment
Cancel
Ramaswamy Sundaram - Mysore,இந்தியா
15-மே-201615:41:00 IST Report Abuse
Ramaswamy Sundaram கரூரில் பணம் பறிமுதல் செய்யப்பட்டது திமுக பண முதலை கே பி சி வீட்டில்....அவரை தகுதி நீக்கம் செய்வதை விட்டுவிட்டு தேர்தலை தள்ளிவசிருக்கு தேர்தல் ஆணையம்....அதிகாரிங்க மட்டத்துல முடிவு எடுத்தா இப்படித்தான் எதையாவது ஏடாகூடமா செய்வானுங்க....சூட்டோட சூடா 17 அல்லது 18 தேதி வைத்தால் யாருக்கும் எந்தவித தொந்தரவும் இருக்காது அல்லவா? இதுல பெரிய வேடிக்கை திருட்டு கூட்ட தலைவரும் அவரது நோஞ்சான் புல்லையும் ஊர் ஊரா போயி தாங்கள் என்னமோ பெரிய உத்தமர்கள் போல வேஷம் கட்டிக்கிட்டு ஆடினதுதான்....போங்கடா புண்ணாக்குகளா
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X