வாக்காள பெருமக்களே உங்கள் ஓட்டு யாருக்கு?| Dinamalar

சிறப்பு பகுதிகள்

சிந்தனைக் களம்

வாக்காள பெருமக்களே உங்கள் ஓட்டு யாருக்கு?

Added : மே 15, 2016 | கருத்துகள் (2)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
 வாக்காள பெருமக்களே உங்கள் ஓட்டு யாருக்கு?


கொஞ்சம் முயற்சித்தால் நம்மால் ஒரு மொபைல் போன் வாங்கித் தர முடியும். இன்னும் கொஞ்சம் முயற்சித்தால் இருசக்கர வாகனம் வாங்கித் தர முடியும். எவ்வளவோ செலவழித்து மகளை படிக்கவைத்து பட்டதாரியாக்கும் போது, அதே
மகளுக்கு திருமணத்தின் போது ஒரு சவரனுக்கும் மேல் தங்கம் வழங்க முடியும்.
நம்மால் என்ன முடியாது?
* அணை கட்ட முடியாது
* ரோடு போட முடியாது
* மின்சாரம் தயாரிக்க முடியாது
* அனைவருக்கும் தொழில் மற்றும் வேலைவாய்ப்பை உருவாக்கி தர முடியாது
* சுத்தமான குடிநீருக்கும், சுகாதாரமான உணவிற்கும் உத்தரவாதம் தர முடியாது
* விவசாயிகளுக்கும், மீனவர்
களுக்கும் நிம்மதியான மகிழ்ச்சியான வாழ்க்கையை தர முடியாது. இதை எல்லாம் தான், நம்மை ஆள்பவர்கள் செய்ய வேண்டும் என்று விரும்புகிறோம். இதைவிடுத்து இலவசங்கள் தரும் போது அதில், 'குடி'யால்
கெட்டழிந்து போன குடும்பத்தின் பாவமும், சாபமும் ஒட்டியிருப்பதாக உணர்கிறோம். அதே போல, ஒரு வீட்டில், 80 வயதை தாண்டிய ஒருவர் இருக்கிறார். நல்ல அனுபவஸ்தர் தான், அறிவாளி தான், நிறைய உழைத்தவர் தான்.
ஆனாலும், அந்த வீட்டில் உள்ளவர் கள் அந்த பெரியவரை குடும்பத்தின் கவுரவ உறுப்பினராக வைத்திருப்பரே தவிர, முடிவெடுக்கும் அதிகாரத்தையோ, செயல்படுத்தும் உரிமையையோ அவருக்கு
தரமாட்டார்கள்; காரணம் வயது.இப்படி, ஒரு வீட்டின் நிர்வாகத்தையே வயதானவரிடம் ஒப்படைக்கத் தயங்கும் போது, நாட்டின் நிர்வாகத்தை நான் பார்த்துக் கொள்கிறேன் என்று, 94 வயதிலும் அடம்பிடிப்பது எந்த விதத்தில் நியாயம் என்பது புரியவில்லை.
'எனக்கேதாவது நேர்ந்தால்...' என்று இன்னமும் பரிதாபத்தை முன்னிலைப்
படுத்தியே வாழ்வது, நன்றாகவா இருக்கிறது? 'என்னை எத்தனை முறை கடலில் துாக்கிப்போட்டாலும்' என்ற இந்த கட்டுமர பாணியை மாற்றவே மாட்டீர்களா...
'மாற்றம் முன்னேற்றம்' என்பதில், எவ்வித முன்னேற்றமும் இல்லை என்றாலும், அதில் எவ்வித தடுமாற்றமும் இல்லாமல் இருப்பதே பெரிய விஷயம் தான். இரண்டு கட்சிகளிடம் இருந்து வேறு ஒரு மாற்றத்தை விரும்புவோர்
தேர்வு செய்யக்கூடிய இதர கட்சிகளில், ஏன் இவர்களை தேர்ந்தெடுக்கக் கூடாது என்ற எண்ணத்தை ஏற்படுத்தியது வரை சரி தான்; ஆனால், அந்த எண்ணம் ஓட்டாக வேண்டுமே!'நால்வராக இருந்தபோது நன்றாகத்தான் இருந்தனர்' என்று பேசும்படியாகி விட்டது, இப்போது, ஆறு பேர் கொண்ட அணி. அரசியல் என்பது சீரிய சான மேடை. தீப்பொறி பறக்கும்; அனல் வீசும்; எதுகையும் மோனையும் விளையாடும்; எதிரிகள் வார்த்தைகளால் துவம்சம் செய்யப்படுவர் என்றெல்லாம் இருந்த எண்ணத்தை மாற்றி, ஒரு சினிமா என்றால் அதில் நகைச்சுவை வேண்டும் என்பது போல நடந்து கொண்டிருக்கும், தேர்தல் என்ற சினிமாவின் நகைச்சுவை பகுதியை, மக்கள் நலக் கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் கையில் எடுத்துக் கொண்டுவிட்டார்.
மாமண்டூரில் ஆரம்பித்த, 'தர்மத்திற்கும் அதர்மத்திற்குமான போர்' என்ற வார்த்தை தாண்டி, 'எப்போது தான் போவாரோ?' என சிந்திக்க வைத்து விட்டார்.
'ஊழலற்ற நேர்மையான நிர்வாக திறமையுள்ள ஆட்சியை மத்தியில் தந்து கொண்டிருப்பதை பார்க்கிறீர்களே! இதே போன்ற, வெளிப்படையான மக்களை மதிக்கும் மக்களாட்சி தர நாங்கள் தயாராக இருக்கிறோம்' என பிரதமரில் துவங்கி, மத்திய அமைச்சர்கள் வரை சொல்லியபடி இருக்கின்றனர்; யாரும் காது கொடுத்து கேட்பதாக தெரியவில்லை.
இந்த நேரம் யாருக்கு ஓட்டு என்பதை முடிவு செய்திருப்பீர்கள். முடிவு செய்யாதவர்கள், 'நான் போடும் என் ஒரு ஓட்டில் தான் வெற்றி, தோல்வி நிர்ணயம் ஆகப் போகிறது' என்ற எண்ணத்துடன் ஓட்டுப் போடுங்கள்.
'போன முறை அவர் வந்துவிட்டார். ஐயோ பாவம், இந்த முறை இவர் வரட்டும்' என்ற, ஐயோ பாவ முறையை விட்டொழியுங்கள்.'ஏன் என் ஓட்டை ஜெயிக்காதவர்களுக்கு போட்டு வீணாக்க வேண்டும்' என்ற மனோ நிலையை விட்டொழியுங்கள்.எல்லாவற்றுக்கும் மேலாக, 'நான் ஓட்டுப் போட்டு தானா நாடு முன்னேறப் போகுது' என்ற விட்டேற்றி மனநிலையை மறந்து, மறக்காமல் ஓட்டுப் போடுங்கள். காரணம், அது உங்கள் உரிமை மட்டுமல்ல; ஜனநாயகத்தின் கடமையும் கூட.
இ-மெயில்: murugaraj2006@gmail.com

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
முத்து - சிங்கப்பூர்  ( Posted via: Dinamalar Android App )
15-மே-201609:20:26 IST Report Abuse
முத்து மாற்றம் ஒன்றதான் மாறாதது .மநகூ
Rate this:
Share this comment
Cancel
SHANMUGASUNDARAM - Chennai  ( Posted via: Dinamalar Android App )
15-மே-201605:24:51 IST Report Abuse
SHANMUGASUNDARAM அருமை நடுநிலையான பதிவு. நாடு முன்னேற மக்கள் சமமான முறையில் வாழ புதியவர்களுக்கு வழி காட்டுவோம்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை