தி.மு.க., தலைவருக்கு இனிக்காத சொந்த ஊர் வெற்றி திருவாரூரில் 2ம் முறையும் முதல்வராக முடியாத சோகம் Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
தி.மு.க., தலைவருக்கு இனிக்காத சொந்த ஊர் வெற்றி
திருவாரூரில் 2ம் முறையும் முதல்வராக முடியாத சோகம்

திருச்சி, : சொந்த ஊரில் போட்டியிட்டு, தொடர்ந்து இருமுறை வெற்றி பெற்ற போதும், தி.மு.க., தலைவர் கருணாநிதி, முதல்வர் பதவியை அடைய முடியவில்லையே என்ற வருத்தம் தி.மு.க.,வினர் மத்தியில் ஏற்பட்டுள்ளது.

 தி.மு.க., தலைவருக்கு இனிக்காத சொந்த ஊர் வெற்றி திருவாரூரில் 2ம் முறையும் முதல்வராக முடியாத சோகம்

கடந்த, 1957ம் ஆண்டு முதல் தி.மு.க., தலைவர் கருணாநிதி தேர்தலில் போட்டியிட்டு வருகிறார். இவர் ஒருங்கிணைந்த திருச்சி மாவட்டம், ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டங்களில் போட்டி யிட்டு வெற்றி பெற்றார். பின்னர் சென்னையில் உள்ள தொகுதிகளிலேயே கருணாநிதி தேர்தலில் போட்டியிட்டு வந்தார்.

கடந்த 2011ம் ஆண்டு, தனது வாழ்நாளில் சொந்த ஊரில் போட்டியிட வேண்டும் என்று விருப்பம் தெரிவித்து, முதல்முறையாக தனது சொந்த மாவட்டமான திருவாரூரில் போட்டியிட்டார்.

அந்த தேர்தலில் அவர் வெற்றி பெற்றாலும், தி.மு.க., மாநிலம் முழுவதும் 234 தொகுதிகளில் போட்டியிட்டு, 21 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றது. இதனால் கருணாநிதியால் தமிழக முதல்வர் பதவியை அடைய முடியவில்லை.

இந்நிலையில், தற்போது நடந்த சட்டசபைத் தேர்தலிலும், தனது சொந்த மாவட்டமான திருவாரூரில், தி.மு.க., தலைவர் கருணாநிதி போட்டியிட்டார். இம்முறையும் தமிழகத்தில் அதிக ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ள அவரால் முதல்வராக

முடியவில்லை. ஆட்சி அமைக்கத் தேவையான தொகுதிகளில் தி.மு.க., வெற்றி பெறவில்லை.

இதனால், திருவாரூர் தொகுதியில் இரண்டாவது முறையாக போட்டியிட்டு வெற்றி பெற்ற கருணா நிதியால், இம்முறையும் முதல்வர் பதவியை அடைய முடியவில்லை. இதனால் சொந்த மாவட்டத்தில் போட்டியிட்ட கருணாநிதியால், இரண்டு முறையும் முதல்வர் பதவியை அடைய முடியவில்லை என்று தி.மு.க.,வினர் வருத்தம் அடைந்துள்ளனர்.

முதல்வர் ஜெ.,வுக்கும் சொந்த ஊர் பிரச்னை : கடந்த 2011ம் ஆண்டு சட்டசபைத் தேர்தலில், தனது பூர்வீகம்ஸ்ரீரங்கம் என்று சொல்லி, அ.தி.மு.க., பொதுச் செயலர் ஜெயலலிதா ஸ்ரீரங்கம் தொகுதி யில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

தேர்தலில் அ.தி.மு.க., அதிக இடங்களை பிடித்த தால், அவர் தமிழக முதல்வராக ஆனார். ஆனால், சொத்துக் குவிப்பு வழக்கில் சிறை தண்டனை பெற்ற ஜெ., முதல்வர் பதவியை துறக்கும் நிலைக்கு தள்ள ப்பட்டார். அதன்பின்னர் சொத்துக்குவிப்பு வழக்கி லிருந்து வெளியே வந்த ஜெ., சென்னை யிலேயே போட்டியிட்டார். ஸ்ரீரங்கம் பக்கம் வரவில்லை.

இப்படியாக தமிழக முன்னாள், இன்னாள் முதல் வர்களுக்கு, சொந்த ஊர் முதல்வர் பதவிக்கு ராசி யாக இருக்காது என்பது இந்த தேர்தல் மூலம் புதிய சென்டிமென்ட்டாக உருவாகியுள்ளது.

கருணாநிதிக்கு கை கொடுக்காத ராசி : நாத்திகவாதியான தி.மு.க., தலைவர் கருணாநிதி, இம்முறை ராசி, 'சென்டிமென்ட்' பார்த்தும் தோல்வியை தழுவினார். பெரியார் வழியில் வந்தவன் என கூறிக்கொள்ளும் தி.மு.க., தலைவர் கருணாநிதி, அவ்வப்போது ஆன்மிக சர்ச்சையில் சிக்கிக் கொள்வது வழக்கம்.

தேர்தலின் போது கருணாநிதி, சென்னை, சைதாப்பேட்டை, ஐந்து விளக்குசந்திப்பில் பிரசாரத்தை துவக்கி, சிந்தாதிரிப்பேட்டையில் முடித்தால், தி.மு.க., வெற்றி பெறும் என்ற, 'சென்டிமென்ட்' அக்கட்சி யில் உள்ளது. அதை, இந்த தேர்தலிலும் கருணாநிதி கடைபிடித்தார்.

Advertisement

சிந்தாதிரிப்பேட்டையில், இறுதிக்கட்ட பிரசார கூட்டத்தில் அவர் பேசுகையில், 'சிந்தாதிரிப்பேட்டையில் பிரசாரத்தை முடித்தால் ராசி என்று கூறுவர். இங்குள்ள மக்கள், எனக்கு ராசியானவர்கள். இத்தேர்தலில், தி.மு.க., வென்றால் ராசி பலப்படும்' என்று பேசினார். ஆனால் அது பலிக்கவில்லை.

கருணாநிதிக்கு கை கொடுக்காத ராசி : நாத்திகவாதியான தி.மு.க., தலைவர் கருணாநிதி, இம்முறை ராசி, 'சென்டிமென்ட்' பார்த்தும் தோல்வியை தழுவினார். பெரியார் வழியில் வந்தவன் என கூறிக்கொள்ளும் தி.மு.க., தலைவர் கருணாநிதி, அவ்வப்போது ஆன்மிக சர்ச்சையில் சிக்கிக் கொள்வது வழக்கம்.

தேர்தலின் போது கருணாநிதி, சென்னை, சைதாப்பேட்டை, ஐந்து விளக்கு சந்திப்பில் பிரசாரத்தை துவக்கி, சிந்தாதிரிப்பேட்டையில் முடித்தால், தி.மு.க., வெற்றி பெறும் என்ற, 'சென்டிமென்ட்' அக்கட்சி யில் உள்ளது. அதை, இந்த தேர்தலிலும் கருணாநிதி கடைபிடித்தார்.

சிந்தாதிரிப்பேட்டையில், இறுதிக்கட்ட பிரசார கூட்டத்தில் அவர் பேசுகையில், 'சிந்தாதிரிப்பேட்டையில் பிரசாரத்தை முடித்தால் ராசி என்று கூறுவர். இங்குள்ள மக்கள், எனக்கு ராசியானவர்கள். இத்தேர்தலில், தி.மு.க., வென்றால் ராசி பலப்படும்' என்று பேசினார்.

Advertisement

வாசகர் கருத்து (83)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Malick Raja - jeddah,சவுதி அரேபியா
24-மே-201615:54:53 IST Report Abuse

Malick Rajaதக்கார் தகவிலர் என்பது அவரவர் எச்சத்தார் காணப்படும்... வாசகர்களின் நிலையம் அவரவர் பதிவுகள் மூலம் தானாக வெளிப்பட்டுவிடும்..

Rate this:
raghavan - Srirangam, Trichy,இந்தியா
20-மே-201622:06:01 IST Report Abuse

raghavanஇவர் ஜெயுச்சு தொகுதிக்கு ஒரு ஆணியும் பிடுங்க போவதில்லைன்னு மக்கள் பேசியது காதுல விழுந்துடிச்சு போல இருக்கு..திருவாரூர் தேர்ல இருந்து அச்சாணி கழண்டு இன்னிக்கு கவுந்துடிச்சி..

Rate this:
Amma_Priyan - Bangalore,இந்தியா
20-மே-201620:36:51 IST Report Abuse

Amma_Priyanபல இணைவிகள் துணைவிகள் இருந்தும் இனிக்க வில்லை... இப்படிப்பட்ட வாழ்கையில் அடிக்கொருதரம் நொடிக்கொருதரம் கண்ணகி திருவள்ளுவர் பற்றி பேச்சுக்கள் வேறு...திருவள்ளுவர் திருட்டு ரயில் ஏற சொன்னாரா? கொள்ளையடித்து வாழ சொன்னாரா? சாராயக்கடைகளைதான் திறக்கசொன்னரா? இல்லை மானாடி மயிலாடி வாழ சொன்னாரா?...கண்ணகிதான் துணைவிகளை வைத்துக்கொள்ள சொன்னாரா? எல்லாம் அலங்கோல ஆட்டம்...அற்பனுக்கு பவிஷு வந்தால் நாடு ராத்ரியில் கொடை பிடித்துகொள்ளுமாம்...ஆட்டம் பாட்டம் எல்லாம் நேற்று மே 19 2016 மத்யானதுடன் க்ளோஸ்...

Rate this:
மேலும் 80 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X