நீதிக்கு உண்டா பாகுபாடு!| Dinamalar

சிறப்பு பகுதிகள்

சிந்தனைக் களம்

நீதிக்கு உண்டா பாகுபாடு!

Added : மே 22, 2016 | கருத்துகள் (3)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
 நீதிக்கு உண்டா பாகுபாடு!


புதுல்லியில், 16 டிசம்பர், 2012 அன்று, ஓடுகிற பேருந்தில், ஆறு பேர் கொண்ட கும்பலால், கொடூரமான முறையில் பாலியல் வன்புணர்ச்சிக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டார் நிர்பயா.
இந்த சம்பவம், தேசத்தையே உலுக்கியது. நீதிக்காக பெண்களும், இளைஞர்களும் போராட்டத்தில் ஈடுபட்டனர். நிர்பயாவிற்கான நீதியின் குரல்கள், பலத்த
பேரோசையுடன் ஒலித்தது.
இதுபோன்ற கொடுமைகளை விசாரிக்க, நீதிபதி வர்மா கமிஷனை நியமித்து, மத்திய அரசு உத்தரவும் போட்டது. வர்மா கமிஷனும், தேசமெங்கும் விசாரணை செய்து, ஆலோசனை பெற்று, பெண்கள் மீதான வன்கொடுமைகளை ஒழிப்பதற்கு பல்வேறு பரிந்துரைகளை மத்திய அரசிடம் கொடுத்தது.
இதனடிப்படையில் குற்ற
வாளிகள் மீது கடுமையான தண்டனை, விரைவான விசாரணை, கடமையை செய்யத் தவறும் போலீசார் மீதும், சிகிச்சை கொடுக்காத மருத்துவர் மீதும் நடவடிக்கை எடுப்பது போன்ற பல சிறப்பம்சங்கள் சட்டமாக்கப்பட்டன. ஆனால், வெறும் சட்டங்களால் சமூக மாற்றத்திற்கு வித்திட முடியாது என, தன் கொடூர மரணத்தால் சாட்சியம் அளித்திருக்கிறார் ஜிஷா.
இந்த வருடம், ஏப்ரல், 28 அன்று, கேரள மாநிலம், எர்ணாகுளம் அருகில் உள்ள, பெரும்பாவூர், குருப்பம்படி கிராமத்தில், தன்னுடைய சிறிய வீட்டில் பிணமாக கிடந்தார் ஜிஷா. முகம் நொறுங்கி, குடல் சரிந்து, உடல் முழுவதும் வெட்டப்பட்டு கிடந்த ஜிஷாவின் சாவு, நிர்பயாவினுடையதை விட இம்மியளவும் குறைந்த கொடூரமில்லை.
ஆனாலும் பெரிய அள வில் போராட்டமோ, ஏன் கண்டனமோ கூட நடைபெறவில்லை. இதுவரையிலும் குற்றவாளிகள் யாரென்று
கண்டறியப்படவில்லை.
கேரள அரசு உடனடியாக ஜிஷாவின் தாய்க்கு, 10 லட்சம் ரூபாய் நிவாரணமும், அக்கா தீபாவிற்கு, அரசு வேலையும் கொடுத்தது. ஜிஷாவின் தாயார் ராஜேஸ்வரி, அவரது அக்கா தீபா உள்ளிட்ட முக்கிய குடும்பத்தினரை, போலீசார் தங்களுடைய கட்டுப்பாட்டிற்குள் வைத்துள்ளனர்.
ஜிஷாவின் கொலைக்கு எதிராக, முதலில் களமிறங்கிய கேரள ஊடகங்கள், திடீரென்று அமைதியாகி விட்டன. அநீதிக்கு எதிராக பெரிய அளவில் போராடுகிற கேரள இயக்கங்களும், ஜிஷாவின் கொலைக்கு எதிராக, பெயரளவே போராடுகின்றன. உண்மையில் ஜிஷா ஏன் கொலை செய்யப்பட்டார் என்பது கூட வெளியுலகம் அறியாத மர்மமாக நீடிக்கிறது. இந்நிலையில் தான், 'எவிடென்ஸ்' அமைப்பின் சார்பாக கேரளா சென்றேன்.
சிறிய ஓடையின் அருகில் புறம்போக்கு நிலத்தில் கட்டப்பட்டு இருக்கும் வீட்டில்தான் கொலை செய்யப்பட்டு கிடந்தார் ஜிஷா. அந்த ஓடையை ஒட்டி, தனித்தனியாக நீண்ட இடைவெளியில், 10 -- 12 வீடுகள் கட்டப்பட்டு இருக்கின்றன. அந்த வீடுகளில் குடியிருப்பவர்கள் எல்லாம், தலித்துகள்; தினக்கூலிகள்.
அங்குள்ள மற்றவர்களின் வீடுகள் தனித்தனியாக பெரிய அளவில் உள்ளன. இப்படியான ராஜேஸ்வரி அம்மா எதிர்கொண்ட சாதிய அழுத்தங்கள், கொஞ்ச நஞ்சமல்ல.
குருப்பம்படி காவல்நிலையத்தில் வாரம் ஒரு முறையாவது ராஜேஸ்வரி அம்மா புகார் தெரிவித்திருக்கிறார். தம்முடைய மகள்களை, அப்பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் கிண்டல் செய்வதாக, பாலியல் சீண்டல் செய்ததாக, இழிவாக பேசியதாக என்று பல புகார்கள்.
தன்னுடைய நிலத்தை சிலர் ஆக்கிரமிப்பு செய்ய முயற்சி செய்வதாக புகார், சில இளைஞர்கள் குடித்துவிட்டு தன் மீது வாகனத்தை ஏற்றியதாக புகார் என, அரசிடம், 3 சென்ட்
நிலத்திற்காக, 20 வருடமாக போராடியிருக்கிறார்.
தனித்து வாழும் அந்த குடும்பத்தினர் ஆதிக்க சாதியினரின் இன்னலுக்கு ஆளாகியுள்ளனர். இதுகுறித்து எத்தனை முறை புகார் செய்தபோதும், காவல்துறை அவர்களை காக்கவில்லை. நிர்பயாவின் பெயரால் உருவாக்கப்பட்ட சட்டம், அதே போல வல்லுறவு செய்யப்பட்டு
கொடூரமாகக் கொல்லப்
பட்ட பெண்ணிற்கு நீதி அளிக்கவில்லை.
ஜிஷா, ஒடுக்கப்பட்ட சமூகத்தில் பிறந்ததே அவருக்கு நேர்ந்த அநீதியை மூடி மறைக்கவும், ஒட்டுமொத்த சமூகமும் மவுனமாக கடந்து போகவும்
காரணமா என்ற சந்தேகத்தை புறக்கணித்துவிட முடியாது.
ஒருவரின் சமூகப் பொருளாதார பின்னணியே, அவருக்கான நீதியை தீர்மானிக்குமெனில், நாம் உண்மையிலேயே ஜனநாயக நாட்டில் தான் வசிக்கிறோமா? பாகுபாட்டிற்கு எதிராக போராடுவது தான் நீதிக்கான பயணம். ஆனால், அந்த நீதிக்கான போராட்டம் என்பதே, பாகுபாட்டின் அடிப்படையில் கட்டப்படுகிறது என்றால், இதைவிட பெரிய அவலம் வேறு எதுவாக இருக்க முடியும்?
தேர்தலுக்காக கம்யூனிஸ்ட்டுகள், ஜிஷாவின் மரணத்தை அரசியல்படுத்துகின்றனர் என்று காங்கிரஸ் குற்றம்சாட்டுகிறது. ரோஹித் வெமுலா மரணத்திற்காக, காங்கிரஸ் போராடியபோது, பா.ஜ.,வும், காங்கிரஸ் மீது இதே குற்றச்சாட்டைத்தான் முன்வைத்தது. அப்போது ராகுல், 'நீதிக்கான போராட்டத்தை மலிவான அரசியலோடு பார்க்கக்கூடாது' என்று கூறினார். இப்போது காங்கிரஸ் எப்படி பார்க்கிறது. இதற்கு ராகுலின் பதில் என்ன?
அநீதிக்கு எதிராக ஒன்றுதிரண்டு குரல் கொடுக்கப்பட வேண்டும். இந்த குரல் அரசியலுக்கு அப்பாற்பட்டது. நீதிக்கானது. தமிழக மக்கள் தொகையைவிட குறைவாக இருக்கும் கேரளாவில், பாலியல் வன்புணர்ச்சி சம்பவங்கள், தமிழகத்தை விட அதிகமாக நடக்கின்றன.
கடந்த 2013ம் ஆண்டில், 1,221 சம்பவங்களும், 2014ம் ஆண்டில், 1,285 சம்பவங்களும் நடந்துள்ளன. ஆனால் தண்டனை, 20 சதவீதத்திற்கும் குறைவாகத் தான் கிடைக்கிறது. காவல்துறையும், நீதித்துறையும், இதுபோன்ற கொடுமைகளுக்கு எதிராக வலுவான நடவடிக்கை எடுப்பதில்லை.
உடல் சிதைந்துபோய் குடல் பிடுங்கப்பட்டு செத்துமடிந்த நிர்பயா படுகொலையை விட கொடூரமான முறையில் தம்முடைய வீட்டிற்குள் கொலை செய்யப்பட்டு கிடந்த ஜிஷாவின் கொலைக்கு எதிராக கூடவா, நம்முடைய கூட்டு மனசாட்சி மவுனமாக இருக்கும்? சாதியின் வேர்கள், நல்லவர்களையும் விஷமாக்கும். நம் மவுனத்திற்கு எதிராக தன்னந்தனியாக கத்திக் கொண்டிருக்கிறார் ஜிஷா.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Velu Karuppiah - Chennai,இந்தியா
18-ஜூன்-201607:21:54 IST Report Abuse
Velu Karuppiah நமது அன்றைய அரசியல் தலைவர்கள் நாம் சுதந்திரம் அடைந்த கால கட்டத்தில் வாழ்ந்த மக்களின் மனோபாவம் மற்றும் வாழ்க்கை முறை இவைகளை கருத்தில் கொண்டு மிக மென்மையான சட்ட பிரிவுகளை வகுத்தார்கள். ஆனால் இன்று மக்களின் பேராசையின் காரணமாக சாதாரண குடிமகனில் இருந்து உயர் பதவி வகிக்கும் நீதிபதிகள் முதல் எல்லா அரசியல் தலைவர்களும் ஒரு சதவிகித ஒழுக்கத்தை கூட கடை பிடிக்காத போது அந்த புழுத்து போன சட்டங்களை வைத்து கொண்டு ஆட்சி செய்வது மிக மிக அபத்தம். எனவே கூடிய விரைவில் கடுமையான் சட்டங்களை கொண்டு வந்தால் தான் நாட்டில் குற்றங்கள் குறையும். பிரதமர் இந்திரா காந்தி அம்மையார் கொண்டு வந்த ஒரு சாதாரண அவசர நிலை சட்டத்திற்கே எல்லா அரசு அதிகாரிகளும் எப்படி நடந்து கொண்டார்கள் என்பதை நாடு அறியும். இன்றைக்கு பூனைக்கு யாரும் மணி கட்டும் நிலையில் இல்லை என்பதே நிதர்சனம்.
Rate this:
Share this comment
Cancel
JBn - T.V Malai,இந்தியா
11-ஜூன்-201619:06:14 IST Report Abuse
JBn "ஜிஷாவின் கொலைக்கு எதிராக, முதலில் களமிறங்கிய கேரள ஊடகங்கள், திடீரென்று அமைதியாகி விட்டன. அநீதிக்கு எதிராக பெரிய அளவில் போராடுகிற கேரள இயக்கங்களும், ஜிஷாவின் கொலைக்கு எதிராக, பெயரளவே போராடுகின்றன. உண்மையில் ஜிஷா ஏன் கொலை செய்யப்பட்டார் என்பது கூட வெளியுலகம் அறியாத மர்மமாக நீடிக்கிறது" மனிதம் தேய்ந்து வருவதாக உணர்கிறேன்
Rate this:
Share this comment
Cancel
Jean-Paul - Paris,பிரான்ஸ்
05-ஜூன்-201603:57:12 IST Report Abuse
Jean-Paul கற்பழிப்பு பாலியல் கொடுமை போன்ற குற்றங்களுக்கு கடுமையான தண்டனைகள் தர சட்டங்கள் மாற்றி அமைக்க பட வேண்டும். கூடவே பள்ளியில் இருந்து ஆண் பெண் ஒற்றுமைகளை பிள்ளைகளுக்கு உணர்த்த வேண்டும். ஆண் பெண் சமமாக உருவாக்க பட்ட மனிதர்கள் என்பதை அவர்கள் சிறு வயதிலேயே புரிந்து கொண்டால்தான் பெண்களை இழிவு படுத்துவதை நாளடைவில் நிறுத்த முடியும். பெண் தெய்வங்களையும் அம்மன் கோவில்களையும் வழிபடும் இந்த நாட்டில் தான் பெண்கள் நாடெங்கிலும் கற்பழிக்க படுகிறார்கள். இதை ஒடுக்கவும் கேட்கவும் யாரும் இல்லை . ஒரு பிரச்சனையாக யாரும் கருதவுமில்லை. தமிழுக்கு போராட்டம் தமிழனுக்கு போராட்டம் கட்சிக்கு போராட்டம் சிறைக்கு சென்ற அரசியல் கைதிக்கு போராட்டம் நடத்தும் நம் நாட்டில், கற்பழிப்புக்கு மட்டும் மவுனம் காப்பது ஏன்? எங்கு செல்லுகிறது நம் நாடு? தலை குனிய வைக்கும் செயல்கள் அல்லவா இது?
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை