அதிகம் நன்கொடை அள்ளிய சமாஜ்வாடி: அடுத்து ஆம் ஆத்மி| Dinamalar

பொது செய்தி

இந்தியா

அதிகம் நன்கொடை அள்ளிய சமாஜ்வாடி: அடுத்து ஆம் ஆத்மி

Added : மே 24, 2016 | கருத்துகள் (6)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
அதிகம் நன்கொடை, சமாஜ்வாடி, அடுத்து ஆம் ஆத்மி

புதுடில்லி: கடந்த 2004 முதல் 2015 இடைபட்ட காலத்தில் நடந்த சட்டசபை தேர்தலில், நன்கொடை வசூல் செய்த மாநில கட்சிகளில் சமாஜ்வாடி கட்சி முதலிடத்தில் உள்ளது. அக்கட்சி ரூ.186.8 கோடி நன்கொடை பெற்று, ரூ.96.54 கோடி செலவு செய்துள்ளது. இதற்கு அடுத்த இடத்தில் ஆம் ஆத்மி உள்ளது. இதுவரை இரண்டு சட்டசபை தேர்தலை மட்டுமே சந்தித்த அக்கட்சி ரூ.38.54 கோடி நன்கொடையாக பெற்றுள்ளது. அக்கட்சி ரூ.22.66 கோடி செலவழித்துள்ளது.

ஜனநாயக சீர்திருத்தத்திற்கான அமைப்பு வெளியிட்ட அறிக்கையில், கடந்த 2004 முதல் 2015 வரையில் நடந்த சட்டசபை தேர்தலில் ரூ.2100 கோடியை பல்வேறு அரசியல் கட்சிகள் நன்கொடை பெற்றுள்ளன. அதே கால கட்டத்தில் நடந்த லோக்சபா தேர்தலுக்கு 44 சதவீத பணம் நன்கொடை பெற்றுள்ளது. இதே காலகட்டத்தில் 71 மாநில சட்டசபை தேர்தல்கள் நடந்துள்ளது. இந்த தேர்தலில் அரசியல் கட்சிகள் ரூ.2,107 கோடி அளவுக்கு பணம் நன்கொடை பெற்றுள்ளது. 2004, 2009 மற்றும் 2014ம் ஆண்டு லோக்சபா தேர்தலில் காசோலை மூலம் ரூ.1300 கோடியும், பணமாக ரூ.1,039 கோடியும் நன்கொடையாக வசூலிக்கப்பட்டுள்ளது. சட்டசபை தேர்தலில் ரூ. 1,244.86 கோடி காசோலையாக வசூலிக்கப்பட்டுள்ளது.

சமாஜ்வாடி, ஆம் ஆத்மி, அதிமுக, பிஜூ ஜனதா தளம் மற்றும் சிரோன்மணி அகாலிதளம் ஆகிய கட்சிகள் வசூலித்த நன்கொடை ரூ.267.14 கோடி. கடந்த 2004, 2009 மற்றும் 2014 லோக்சபா தேர்தலின் போது நன்கொடையாக பெற்ற பணத்தில் 62 சதவீதம் பற்றி கணக்கு தெரிவித்துள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
adalarasan - chennai,இந்தியா
24-மே-201622:58:13 IST Report Abuse
adalarasan ஆம் ஆத்மி கட்சித்தலைவர், ருசி கண்ட பூனை ஆகிவிட்டார்?நேற்று வந்த கட்சி, 22 கோடி எங்கு எதற்காக செலவழித்தார் என்று தெரியவில்லை? பலே பாண்டியா
Rate this:
Share this comment
Cancel
Ramudu - Chennai,இந்தியா
24-மே-201621:14:48 IST Report Abuse
Ramudu தலைவா..உடனே நன்கொடை படை ஒன்ன ஆரம்பிச்சு மானத்த காப்பாத்துங்க...
Rate this:
Share this comment
Cancel
Ramudu - Chennai,இந்தியா
24-மே-201619:52:24 IST Report Abuse
Ramudu தானை தலைவா..ஒடனே ஒரு நன்கொடை படை ஒன்ன ஆரம்பிங்க...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X