தமிழில் எழுத படிக்க தெரியாத பாலகிருஷ்ணா ரெட்டிக்கு அமைச்சர் பதவி| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

தமிழில் எழுத படிக்க தெரியாத பாலகிருஷ்ணா ரெட்டிக்கு அமைச்சர் பதவி

Added : மே 24, 2016 | கருத்துகள் (75)
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 தமிழில் எழுத படிக்க தெரியாத பாலகிருஷ்ணா ரெட்டிக்கு அமைச்சர் பதவி

புதிய அமைச்சராக இன்று பதவியேற்க உள்ள, ஓசூர் அ.தி.மு.க., - எம்.எல்.ஏ., பாலகிருஷ்ணா ரெட்டிக்கு, தமிழில் எழுத, படிக்க தெரியாது.
ஓசூர் நகராட்சி தலைவராக இருந்த, அ.தி.மு.க.,வைச் சேர்ந்த பாலகிருஷ்ணா ரெட்டி, நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று, எம்.எல்.ஏ.,வானார்.
இவருக்கு தமிழில் பேச தெரியும்; ஆனால், சரியாக படிக்க, எழுத தெரியாது. நகரசபை தேர்தல் மற்றும் சட்டசபை தேர்தலின் போது, பல இடங்களில் தெலுங்கில் பேசியே ஓட்டு சேகரித்தார்.
தமிழ் எழுத, படிக்க தெரியாத காரணத்தால், அவர் நகரசபை தலைவராக இருந்த போதே, ஒருசில கவுன்சிலர்கள் பரிந்துரை செய்த தீர்மானங்களை மட்டும் வைத்து, அதிகாரிகள், 'அஜெண்டா' எனப்படும், சபை நிகழ்ச்சிகள் தயார் செய்த சம்பவங்கள் நடந்துள்ளன.
பாலகிருஷ்ணா ரெட்டியும், அதில் என்ன இருக்கிறது என்பது தெரியாமல், கையெழுத்து போட்ட நாட்களும் உண்டு. இந்நிலையில், எம்.எல்.ஏ.,வாக தேர்வு செய்யப்பட்டுள்ள பாலகிருஷ்ணா ரெட்டி, கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சராக, இன்று மாலை பொறுப்பேற்கிறார்.

''தமிழில் எழுத, படிக்க தெரியாத பாலகிருஷ்ணா ரெட்டிக்கு, அமைச்சர் பதவி வழங்கப்பட்டு உள்ளது. இவர், சட்டசபையில் தெலுங்கில் பேசுவாரா அல்லது தமிழில் பேசுவாரா? தமிழில் எழுத, படிக்க தெரியாத ஒருவரால், மானிய கோரிக்கையின்போது, எவ்வாறு பதிலளிக்க முடியும்.
-என்.மதேஸ்வரன்,தி.மு.க., நகர செயலர், ஓசூர்.
- நமது நிருபர் -

Advertisement


வாசகர் கருத்து (75)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Nallavan Nallavan - Kolkata,இந்தியா
25-மே-201622:06:56 IST Report Abuse
Nallavan Nallavan தொகுதி மக்களே தேர்ந்தெடுத்த பிறகு இனி என்ன கவலை ???? சூரியக் கட்சி மீதான பாசம் இன்னும் உரைகல்லுக்குப் போகலை போலிருக்கே ???? ம்ம்ம்ம் .... நடக்கட்டும் .... நடக்கட்டும் .....
Rate this:
Share this comment
Cancel
muthu Rajendran - chennai,இந்தியா
25-மே-201620:54:50 IST Report Abuse
muthu Rajendran ஒரு அமைச்சர் சார்பாக இன்னொரு அமைச்சர் மானிய கோரிக்கைகளை முன்வைக்கலாம் , பதில் அளிக்கலாம் ஏன் கேள்விகளுக்குகூட பதில் அளிக்கலாம்.ஆனால் தமிழை ஆட்சிமொழியாக கொண்ட மாநிலத்தில் அமைச்சர் தமிழ் அறிந்திருக்க வேண்டும் எதிர்பார்ப்பது நியாயம் தானே
Rate this:
Share this comment
Cancel
Thangaraj_Cs - coimbatore,இந்தியா
25-மே-201620:52:56 IST Report Abuse
Thangaraj_Cs காலில் விழுவதற்கு மொழி ஒரு பிரச்சனையாக இருக்காது. மொழி தெரிஞ்சவன் அம்மாவிடம் ஒரு வார்த்தையாவது எதிர்த்து பேசுவானா ?
Rate this:
Share this comment
Jeyakumar Sabapathipillai - st.gallen,சுவிட்சர்லாந்து
25-மே-201623:28:08 IST Report Abuse
Jeyakumar Sabapathipillaiகாலில் விழுவதற்கு மொழி ஒரு பிரச்சனை அல்ல,,, தேர்ந்தெடுத்த மக்களே நடக்கட்டும் ......
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X