அரசு குடியிருப்பு வீடுகளின் நிலைமை அவலம்: உயிர் பயத்தில் வசிக்கும் குடும்பங்கள்| Dinamalar

அரசு குடியிருப்பு வீடுகளின் நிலைமை அவலம்: உயிர் பயத்தில் வசிக்கும் குடும்பங்கள்

Added : மே 30, 2016 | கருத்துகள் (8)
Advertisement

புதூர்: மதுரை டி.ஆர்.ஓ., காலனியில் உள்ள அரசு குடியிருப்புகளில் உள்ள வீடுகள் அவ்வப்போது பெயர்ந்து விழுவதால் குடியிருப்போர் உயிர் பயத்தில் உள்ளனர்.

மதுரை ரேஸ்கோர்ஸ் ரோடு மற்றும் டி.ஆர்.ஓ., காலனியில் அரசு குடியிருப்புகள் உள்ளன. இங்கு ஏ, பி, சி, டி பிளாக்குகளில் உள்ள அடுக்குமாடி குடியிருப்புகளில் 650க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இவற்றில் அரசு மற்றும் சார்பு நிறுவன ஊழியர்கள் குறைந்த வாடகையில் வசிக்கின்றனர்.


அரசு குடியிருப்புகளை அவ்வப்போது மராமத்து செய்வதற்காக மாவட்ட நிர்வாகம் நிதி ஒதுக்கீடு செய்கிறது. ஆனால் அதிகாரிகள் அடிப்படை சுகாதாரப் பணிகள் உட்பட எந்த மராமத்து பணிகளையும் மேற்கொள்வதில்லை. மேற்கூரைகள் பெயர்ந்து விழுவதால் உயிர் பயத்தில் வசிக்கின்றனர்.


குடியிருப்போர் கூறியதாவது: வீடுகளில் உள்ள குழாய்கள் உடைந்து வெளியேறும் கழிவுநீர் வீடுகளை சுற்றி தேங்குகிறது. குப்பைகளும் நிறைந்து காணப்படுவதால் இங்கு குடியிருப்போர் அடிக்கடி நோய் பாதிப்புகளுக்கு ஆளாகிறோம். அனைத்து வீடுகளிலும் சுவர்கள், மேற்கூரைகள் பெயர்ந்து விழுகிறது.


சில நாட்களுக்கு முன் இர்பான்தீன் என்பவர் வீட்டின் பால்கனி முன் கூரை உடைந்து விழுந்தது.


இரவு நேரம் என்பதால் யாருக்கும் பாதிப்பில்லை. அதிகாரிகளிடம் தெரிவித்தாலும் யாரும் பொருட்படுத்துவதில்லை. குடியிருப்பவர்களே சிறு, சிறு மராமத்து பணிகளை மேற்கொள்கிறோம்.


மேற்கூரைகள் பலமின்றி இருப்பதால் உயிருக்கு பயந்துதான் குடியிருக்கிறோம். உயிர் பலி ஏற்படும் முன் மாவட்ட நிர்வாகத்தினர் பார்வையிட்டு பணிகளை மேற்கொள்ள அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும், என்றனர்.

Advertisement




வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
K. Shanmugasundararaj - Tirunelveli,இந்தியா
16-ஜூன்-201603:42:40 IST Report Abuse
K.   Shanmugasundararaj மிஸ்டர் திருவள்ளுவன் இலக்குவனார், நீங்கள் மதுரையில் 1990 முதல் 5 ஆண்டுகள் இருந்த போது எந்த பதவியில் இருந்தீர்கள். அதனை சொல்லவிலையே. மதுரை - சிவகங்கை பாதையில் சாலை அமைந்ததாக கணக்கு காட்டியவர்களுக்கு இது ஒன்றும் இயலாத காரியம் இல்லையென்று சொல்லியுள்ளீர்கள்.அரசு அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் பற்றி இங்குவந்துள்ள விமர்சனங்களை பார்த்தால் அரசு அதிகாரிகள் மற்றும் ஊழியர்களின் குடும்பங்கள் மானத்தோடு இருப்பதாக / வாழ்வதாக தெரிய வில்லையே.இப்படிப்பட்ட ஒரு வாழ்க்கை தேவைதானா. கையூட்டு பெற்று வாழும் வாழ்க்கை ஒரு ஈன வாழ்க்கை என்பதை அரசு அதிகாரிகள், ஊழியர்கள் ஆகியோரும் அவர்களின் குடும்பத்தாரும் உணரவேண்டும்.
Rate this:
Share this comment
Cancel
மதுரை விருமாண்டி - சான் ஹோஸே, கலிபோர்னியா ,யூ.எஸ்.ஏ
01-ஜூன்-201609:11:13 IST Report Abuse
மதுரை விருமாண்டி தங்களின் குடியிருப்பின் தரத்தைப் பற்றி குறை சொல்லும் குடும்பங்கள், தங்களின் குடும்பத் தலைவர் லஞ்சத்தில் திளைத்து நித்தமும் அள்ளிக் கொண்டு வரும் கொள்ளையை பற்றி கவலைப்பட்டு என்றைக்காவது ஒரு வார்த்தை சொன்னதுண்டா? நீ அடித்த கொள்ளை.. உனக்கே வந்து வாய்க்கிறது.. காசை கொள்ளையடித்து கூரை தலையில் விழுந்து சாகுங்கள்..
Rate this:
Share this comment
Cancel
மதுரை விருமாண்டி - சான் ஹோஸே, கலிபோர்னியா ,யூ.எஸ்.ஏ
01-ஜூன்-201609:08:19 IST Report Abuse
மதுரை விருமாண்டி வருவாய்த்துறை மக்களின் வாயில், வயிற்றில் அடித்து கொள்ளை அடிக்கிறார்கள்.. பொதுப்பிணி, வீட்டு வசதி துறைகள், பாகுபாடு இன்றி அரசு கட்டிடங்களிலும் கொள்ளை அடிக்கிறாரக்ள். வினை விதைத்த வென்றுகள்.. வினையை அறுவடை செய்து மாளுங்கள்..
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X