கழிவுகளால் காணாமல் போன குளம் மீட்கப்படுமா? நகராட்சி நிர்வாகத்துக்கு கோரிக்கை| Dinamalar

கழிவுகளால் காணாமல் போன குளம் மீட்கப்படுமா? நகராட்சி நிர்வாகத்துக்கு கோரிக்கை

Updated : ஜூன் 01, 2016 | Added : மே 31, 2016 | கருத்துகள் (4)
Advertisement

உடுமலை: உடுமலை நகராட்சி எல்லையில், மக்கள் பயன்பாட்டிலிருந்த குளம், கழிவு நீர் சங்கமித்து, ஆகாயத்தாமரை செடிகளால் ஆக்கிரமிக்கப்பட்டு, காணாமல் போய் வருகிறது. உயிர்பலி ஏற்படும் அபாயம் இருப்பதால், நகராட்சி நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
உடுமலை வெஞ்சமடை பகுதியில், பி.ஏ.பி., கால்வாய் செல்கிறது. இந்த கால்வாய் அருகில், நகராட்சிக்குட்பட்ட, குளம் உள்ளது. குளத்தில், கால்வாய் உபரி நீர் மற்றும் மழைக்காலங்களில், கிடைக்கும் தண்ணீர் பல மாதங்களுக்கு தேங்கி நிற்கும்.
துாய்மையாக காணப்பட்ட குளத்தில், மக்கள், துணி துவைத்தல் உட்பட பல்வேறு பணிகளுக்கு பயன்படுத்தி வந்தனர்; அப்பகுதி நிலத்தடி நீர் மட்டத்துக்கும் குளம் உதவியாக இருந்தது.முறையாக துார்வாரப்படாமல், அருகிலுள்ள பகுதிகளிலிருந்து கழிவு நீரும், குளத்தில் கலக்கப்பட்டது. இதனால், தண்ணீர் மாசடைந்து, துர்நாற்றம் வீசியதால், மக்கள் அப்பகுதிக்கு செல்வதை தவிர்த்தனர்.
இதை பயன்படுத்தி, குளம் கழிவுகள் கொட்டப்படும் இடமாகவும், கழிவு நீர் குட்டையாகவும் மாற்றப்பட்டது. படிப்படியாக ஆகாயத்தாமரை உட்பட செடிகளும், ஆக்கிரமித்து, அங்கு குளம் இருந்த அடையாளங்கள் மறையத்துவங்கின. தற்போது, குளத்தை காணவில்லை என அப்பகுதி மக்கள் தெரிவிக்கும் வகையில், நீர் தேக்க பரப்பு முழுவதும், செடிகள் மட்டுமே உள்ளன.

தண்ணீர் உள்ளதா என்பது கூட தெரியாத அவல நிலை, காரணமாக, அப்பகுதி மக்கள் பல்வேறு பிரச்னைகளை சந்தித்து வருகின்றனர். கொசு உற்பத்தி, துர்நாற்றம் ஆகிய வேதனைகளுடன், அப் பகுதிக்கு செல்லும் குழந்தைகள், குளத்தில் கரைகள் இல்லாததால், தவறி விழும் அபாயமும் உள்ளது.
கோவில், ரேஷன்கடை என மக்கள் அதிகம் பயன்படுத்தும் பகுதியில், உள்ள குளத்தில் செடிகளை அகற்றி, துார்வார நகராட்சி நிர்வாகத்துக்கு அப்பகுதி மக்கள் தொடர் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
நடவடிக்கை எடுக்க வேண்டும்மக்கள் கூறுகையில், 'குளத்தில் கழிவு நீர் கலக்கும் போதே நட வடிக்கை எடுத்திருந்தால், அவல நிலைக்கு செல்லாமல் தடுத்திருக்க முடியும். கட்டடக்கழிவுகள் உட்பட அனைத்து கழிவுகளும் தொடர்ந்து அங்கு கொட்டப்பட்டு வருகின்றன. இது குறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்காவிட்டால், எங்களது நினைவுகளில் மட்டுமே இக்குளம் இருக்கும்' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Rajendra Bupathi - GANGAVALLI - SALEM,இந்தியா
06-ஜூன்-201617:13:33 IST Report Abuse
Rajendra Bupathi சும்ம்மா இருங்கய்யா நகராட்சிக்கு எடம் வேணும். அதனாலதான் அந்த குளத்த மேடாக்கிகிட்டு இருக்காங்க, என்ன இவங்ககெல்லாம் இன்னும் வெவரம் புரியாமலேயே இருக்காங்க.நீயாவது சொல்லகூடாதா? போதும் சாமி அப்புறம் ஊதி கெடுத்த கதையா போயிடும்.
Rate this:
Share this comment
Cancel
rmr - chennai,இந்தியா
03-ஜூன்-201609:30:59 IST Report Abuse
rmr அதெலாம் ஒன்னும் நடக்காது. குளம் குட்டை எல்லாம் இந்த திராவிட கட்சிகளால் மூடி பிளாட் போட்டு விற்கப்படும். இதுவே உண்மை .
Rate this:
Share this comment
Cancel
இந்திய புலி - Tirunelveli,இந்தியா
01-ஜூன்-201620:54:40 IST Report Abuse
இந்திய  புலி முதலில் இ.எம் கரைசலை குளத்தில் தெளிக்கவும், பின் பஞ்சகவ்ய கரைசலை தெளித்து சற்று நாள்கள் கழித்து மீன்களை, ஆமைகளை விடவும், ஆகாயதாமரையை கட்டுப்படுத்த கற்பூரவல்லி என்ற மூலிகையை காயவைத்து பொடித்து நீருடன் கலந்து தெளிக்கவும், குளத்தில் சோப், சாம்பு போன்ற வேதி பொருள்கள் கலக்காமல் பாதுகாக்கவும்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X